'வீதிகள்
வெறிச்சோடிக்கிடக்கின்றன
தண்ணீர்கேன்கள்
மினிடோரில் சென்றுகொண்டுள்ளன
அசாத்திய நம்பிக்கையில்
ரோட்டோர மரத்தடியில்
வெள்ளரிப்பிஞ்சு விற்கிறாள்
கிழவி
சொற்ப காகங்கள்
மின்கம்பங்களில் கிடக்கின்றன
விருட்டென்று
யாரோ செல்பேசிக்கொண்டே
பைக்கில் கடக்கிறார்கள்
தொலைவில்
ஆடி அசைந்து
பேருந்து வருகிறது
பயணிகள் யாருமில்லை
இன்றைக்கும்
யாரோ
கவிதைகள் எழுதிக்கொண்டுதான்
இருக்கிறார்கள்
இன்றைக்கும்
யாரோ
காதலில் தோற்றுக்கொண்டுதான்
இருக்கிறார்கள்
முன்னெப்போதோ
வந்த இடம்தான் இது
அப்போது அவள் இருந்ததால்
எல்லாம்
பச்சை பசேலென்று
தென்றல் வீச
சுகமாய் இருந்தது
இப்போது
இந்த பக்கம் வந்தது
தவறென்று புரிகிறது
சுற்றிச் சென்றிருக்கலாம்
அவளில்லாத வீதியில்
அட்ரஸ் இல்லாத அந்நியனாக

பயணத்தை தொடர்கிறேன்'
Previous
Next Post »