சிறுகதை: "அடிமைப்பெண்" - விஜயநிலா




ஓ ர் உயி ர் கண்ணெதிரே ஒடுங்கி மெல்ல பிரிந்து கொண்டிருப்பதை காண்பதை விட  கொடுமை இல்லை என்று நினைத்தார் சிவராமன்.எழுபத்தெட்டு வயது.கால்கள் இரண்டிலும் நியூரோபதி வந்து விட்டது.சுரணையில்லை.கண்பா ர்வை மங்கலாகி விட்டது.காட்ராக்ட் செய்தும் பார்வை மங்கல்தான்.உடல் முழுக்க தோல் உலர்ந்து போய் சர்க்கரை நோய்த்தாக்குதலில் தீவீரத்தை சொல்லாமல் சொல்கிறது.இலவம் பஞ்சு போன்ற தலைமுடி இப்போதெல்லாம் காற்றில் பறப்பதில்லை.நாக்கு மட்டும் அடிக்கடி உலர்ந்து போகிறது.


     கஸ்துரிக்கு பதிலாக தன் உயிர் பிரிந்திருக்கக் கூடாதா என நினைத்தார்.நினைத்த மாதிரி வாழ்க்கை இருப்பதில்லை.ஆனால் இத்தனை காலமும் தான் நினைத்த மாதிரி வாழ்ந்து விட்டோம் என்று பொய்யாக தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருந்தார்.
 கஸ்துரரி அவர் மனைவி.எழுபத்திநான்கு வயது.ஈர்க்குச்சி மாதிரி இளைத்து விட்டாள்.நன்றாகத்தான் இருந்து கொண்டிருந்தாள்.திடீரென வாக்கிங் போகும்போது கல் தடுக்கி கீழே விழுந்து வலது கையை உடைத்துக் கொண்டவள் அதன் பின் தேறவே இல்லை.மயக்கம் அடிக்கடி வந்தது.கால்கள் வீங்கியது.வயிற்றில் வலி வந்தது.முதுகின் பின்னால் கீழே அடிக்கடி மென்மையாக வரும் வலி சில நேரங்களில் தீவீரமாகியது.சோ ர் ந்து சோ ர் ந்து துhங்க ஆரம்பித்தாள்.
               சிறிது நாட்களாகவே அவளது இன்டேக் குறைந்து விட்டது.லிக்விட்டாக எதையூம் அருந்த மறுக்கிறாள்.தோலின் நிறம் மாறி மாட்லிங் வந்து விட்டது.நுரையீரலில் திரவமாக எதுவோ இருப்பது போல ராட்லிங் சப்தம் கேட்கத் துவங்கி விட்டது.அசிட்டோனின் நெடி உடலில் அடிக்க ஆரம்பித்து விட்டது.கஸ்துரரி டிக்கெட் வாங்கி விடுவாள் என்று தோன்றியது.


    டாக்டரிடம் காட்டியபோது சிறுநீரகத்தில் கோளாறு என்று புரிந்து போனது.கிரியாட்டின் அளவூ எண்பதைத் தாண்டியிருந்தது.நான்கில்தான் கிரியாட்டின் இருக்க வேண்டும் என்று டாக்டர் சொன்னதும் நிலைமையின் தீவீரம் புரிந்து போனது.
 டயாலிசிஸ் செய்யாமல் இருக்க முடியாது.டயலிசிஸ் செய்தாலும் உயிரைக் காப்பாற்ற முடியாது.என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே டயாலிசிஸ் செய்யூம் முயற்சியை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.பையன்கள் இருவரும் கஸ்துரியின் நிலைமை தரிந்ததும் நாசுக்காக கத்தரித்துக் கொண்டனா;.சிறுநீரகமாற்று சிகிச்சைக்காக கிட்னியை கேட்பார்களோ என்ற பயம் பெரியவனுக்கு.ஆஸ்பத்திரிசெலவூக்கு பணம் கேட்பார்களோ என்ற பயம் சின்னவனுக்கு.அவ்வப்போது செல்போனில் மிஸ்ட் கால் கொடுப்பார்கள்.சிவராமன் பேசினால் அவசர வேலை இருப்பது போல அம்மா எப்படி இருக்கிறாள் என்று கேட்டு விட்டு வைத்து விடுவார்கள்.
 சிவராமனுக்கு யார் தயவூம் தேவையில்லை.நண்பர்கள் இருக்கிறார்கள் என்பார்.நண்பர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டே இருந்த வீட்டையூம் விற்றார்.நண்பர்களுக்கு சிபா ரி சு செய்வதிலேயே சொந்த மகன்களுக்கு சரியான வேலை வாங்காமல்  ரிட்டயர்டானார்.

    கஸ்துரரி மலைக்கிராமத்திலிருந்து வந்தவள்.தன் கணவர் ஒரு காந்தி போலவோ,நேரு போலவோ வாழ்பவர் என்று தனக்குத்தானே தன் கணவனை ஒரு கதாநாயகன் போல நம்பி விட்டவர்.சிவராமன் தனக்கு செய்த கொடுமைகளை மறந்து விட்டவள்.எல்லா தமிழ்ப் பெண்களையூம் போல கணவனே கதி என்று கிடந்தவள்.கல்யாணமானபின் தன் வீட்டுக்கு சென்றது கூட இல்லை.
 சிவராமன் தன்னை ஒரு குறுநில மன்னன் போல பாவித்துக் கொண்டவர்.

     காரணம் அவர் பார்த்த வேலை அப்படி.அந்த வேலை ஒரு கிளார்க் வேலையாக இருந்தாலும் அந்த ஆபீஸ் யூனியனில் அவர் தலைவர்.அதனால் அவரருகில் எப்போதும் அடிப்பொடிகள்,அள்ளக்கைகள் இருப்பர்.எப்போதும் நண்பர்கள் புடை சூழ வருவார்.வீட்டில் கஸ்துரரி யின் பிரதான வேலையே வருகிற காம்ரேட்டுகளுக்கு காபி போட்டுக் கொடுப்பதுதான்.இத்தனைக்கும் சிவராமன் ஒரு போராட்டத்திற்கும் தலைமைதாங்க மாட்டார்.ஒருநாள் கூட உண்ணாவிரத பந்தலில் போய் அவர் அமர்ந்ததில்லை.ஒரு மறியலில் கூட அவர் கைதானது கிடையாது.ஆனால் வீட்டில் மீட்டிங் மட்டும்  நடந்து கொண்டிருக்கும்.யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று திரைக்கதை வசனம் மட்டும் செய்து கொடுப்பார்.எல்லாருக்கும் கடன் வாங்க வீடு கட்ட என்று உடனடி ஜாமீன் கையெழுத்தை நீட்டிய இடத்தில் போடுவதால் அவர் வராவிட்டாலும் அவர்தான் தலைவர் என்று கொண்டாடினார்கள்.
 
     கஸ்துரரி தன் அக்காள் வீட்டிற்கு சென்று விட்டு வந்தால் அவள் பிள்ளைத்தாய்ச்சியாக இருந்தாலும் அவளை வீட்டு வாசலில் நிற்க வைத்து விடுவார்.வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கும்.ஆனால் உள்ளே விட மாட்டார்.கீழ்வீட்டுக்காரர்கள் அழைத்து அவளுக்கு உணவூ கொடுத்தாலும் கண்டு கொள்ள மாட்டார்.சில வேளைகளில் அவளை ரூமில்ல் பூட்டி வைத்து சாப்பாட்டை சன்னல் வழியாக வீசுவார்.தன் அம்மா சொன்ன சொல்லுக்கு கீழ்ப்படிவார்.அந்த வீட்டில் தன்னை சட்டாம்பிள்ளையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தன் தங்கைகளுக்கு கல்யாணம் செய்து வைக்காமல் காலம் தாழ்த்தினார்.இத்தனை வயதிற்குப் பிறகு எதற்கு கல்யாணம் என்று அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து விட்டனர்.இப்போது வேறு ஊரில் இருக்கிறார்கள்.

   சிவராமன் ஹீரோயிசம் என்ற பெயரில் செய்த அக்கிரமங்கள் கொஞ்சநஞ்மில்லை.கஸ்துரரி யின் நகைகள் அத்தனையூம் விற்றார்.அதை வங்கியில் போடுவோம்.பைனான்சில் போடுவோம்.அடகு வைத்து நண்பர்களுக்கு நல்ல வட்டியில் கடன் கொடுப்போம் என்று அத்தனை நகையையூம் வீசி எறிந்தார்.வட்டி மட்டும் சிலமாதங்கள் வந்தன.நண்பர்கள் ஆளுக்கு ஒரு கதை சொன்னார்கள்.அவரடம் பயின்ற பயிற்சி அல்லவா.அழகாக நடித்தார்கள்.அத்தனை அடிப்பொடிகளுக்கும் தன் மேற்பார்வையில் வீடு கட்டிக்கொடுக்கப் போகிறேன் என்று அடுத்த அக்கிரமத்தை ஆரம்பித்தார்.

  விரைவில் நன்கு விருத்தியாகும் ஏரியா என்று மழை தேங்கும் பகுதியில் அனைவருக்குமாக சர்த்து இடம் வாங்கினார்.ப்ளாட் பிரித்து பதிவூ செய்தார்.இது வரையில் செய்தது எல்லாம் சரி.அந்த வீடுகளை தன் மேற்பார்வையில் கட்டித் தருகிறேன் என்று சொன்னபோது இது என்னவோ தப்பாகப் போகிறது என்று தோன்றியது கஸ்துரரி க்கு.அவர் பேச்சுக்கு எதிர் பேச்சு என்ன எதிராக ஒரு பார்வையை கூட உயர்த்த முடியாது.உடனே அத்தனை அடிப்பொடிகளும் வந்து விடுவார்கள்.
நீங்க சும்மா இருங்க அண்ணி.அண்ணனுக்கு தரியாததா.அதெல்லாம் அண்ணன்ஜமாய்ச்சிடுவார்என்றனர்.

   தடல்புடலாக பூஜை போட்டு அஸ்திவாரம் தோண்டினார்.சிவில் இன்ஜினியரிங் எல்லாம் தெரியாது அவருக்கு. தெரிந்தது எல்லாம் வாய்ச்சவடால்தான்.வாங்க எல்லாம் பார்த்துரலாம்என்பதுதான் இவரது பஞ்ச் டயலாக்.பாதி வீடு வளர்ந்த நிலையில் கம்பிகள் வாங்க பட்ஜட் இடித்தது.இவர்மேற்பார்வையில் கம்பெனியில் வாங்கிய லோன் தொகையை வைத்து கட்டியாயிற்று.மேற்கொண்டு எல்ஐசியில் லோன் கிடைக்க இழுத்துக் கொண்டு போயிற்று.
 வீராவேசமாக எழுந்தார்அண்ணன்’.முறுக்குக்கம்பி தயாரிக்கும் ஃபாக்டரிக்கே போய் தன் வீரதாபங்களை அளந்தார்.கம்பெனிகாரன் அழகாகப் பேசினான்.
அப்புறமென்ன அண்ணே.நீங்களே பொறுப்பேத்துக்கிட்டு கம்பிகளை வாங்கிக்கங்க.பணத்தை லோன் பணம் வந்தவூடன செட்டில் பண்ணிருங்க.நான் டீலருக்கு கொடுக்கற மாதிரி அறுபது நாள் தவணையோட கம்பிகளை லோடு லோடா கொண்டு வந்து இறங்கிடறேன்
கம்பிகள் வந்து இறங்கியதும் அங்கிள் ஸாம் போல எல்லோரையூம் ஒரு பார்வை பார்த்தார் சிவராமன்.வீடுகள் இன்னும் மேலேறின.  லோன் பணமும் வரவில்லை.தன்னையூம் சேர்த்து பதினைந்து வீட்டிற்கு கம்பிகள் வாங்கியதற்கு பணம் தர வேண்டும்.

   கம்பெனிக்காரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டான்.அண்ணன்குதித்தார்.நண்பர்கள் நாசுக்காக விலகிக் கொண்டனர்.வேண்டுமானால் கம்பிகளை பெயர்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.வீடு கட்டியவரை போதும்.அப்படியே மொட்டையாக நிற்கட்டும்.மதுரையில் மீனாட்சியே ஒரு கோபுரத்தை மொட்டையாகத்தானே வைத்திருக்கிறாள் என்றார்கள்.நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்.
அண்ணனுக்குஹீரோயிச ரத்தம் கொதித்தது.தானே பொறுப்பேற்றுக் கொண்டு அநியாய வட்டிக்கு  பணம் வாங்கிக் கொண்டு(பணம் கொடுக்கறவரைக்கும் நீங்களே வீட்டுல இருந்துக்கலாம்.பணம் கொடுக்கலைன்னாலும் இருந்துக்கலாம் வாடகை கொடுத்துட்டு என்றான் பணம் கொடுத்தவன்) கம்பெனி கணக்கை துடைத்து எறிந்தார்.

   நான்கு மாதம் தாடி வளர்த்து நாத்திகம் பேசித் திரிந்தார்.தன் ஹீரோயிசத்தை தக்க வைத்துக் கொள்ள திடீரென ஆத்திகத்தைக் கையில் எடுத்தார்.வீடு கட்ட பணம் கொடுக்காதவர்களையூம் சேர்த்து ஊர் ஊராக திருத்தல யாத்திரை அழைத்துப் போனார்.இருபது வருடங்கள் இப்படியே  ஆன்மிகத் தொண்டராக..ஸாரி ஆன்மிகத் தலைவராக தன்னை மாற்றிக் கொண்டார்.இடையிடையே கஸ்துரரி யின் பெயரில் இருந்த சொத்துக்களை விற்றார்.பையன்கள்  இரண்டு பேரும் சொந்த வீட்டிலேயே திருடும் அளவூக்கு சோரம் போனார்கள்.சிவராமன் இப்போது தனியாக இருக்கிறார் ஒரு சின்ன அபார்ட்மன்ட்டில்.யாரும் வந்து பார்ப்பதில்லை.கஸ்துரரிக்கு உடம்பு முடியாமல் போனபோது கூட யாரும் வரவில்லை.டாக்ட ர்கள் பார்த்து விட்டு திருப்திக்கு வேண்டுமானால் டயாலிசிஸ் செய்து கொள்ளலாம்;.உடல் தாங்காது என்று சொல்லி விட்டனார்

    கஸ்துரரி மெல்ல மெல்ல உள்ளுக்குள் செத்துக் கொண்டிருக்கிறாள் என்று பு ரி ய ஆரம்பித்தது.அப்போதுதான் அவருக்கு அந்த பயம் வந்தது.அவள் இருந்தவரை சமைத்துப் போட்டு கை,கால்கள் பிடித்து விட்டு தான் சொல்லும் அசட்டு வீரக் கதைகளைக் கேட்டிருந்தாள்.இனி அவள் போய் விட்டால்?’ என்ன செய்வது என்ற பயத்தில் அவள் அசைவற்று கிடந்தால் கூட அருகே போய் மூக்கில்  கை வைத்துப் பார்க்க ஆரம்பித்தார்.
 ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொண்டு வந்து படுக்க வைத்தபோது அளது உடல் துhக்கித் துரக்கிப் போட்டது.இருமல் நாய் குரைப்பது மாதிரி வந்தது.பதறிப் போய் விட்டார்.இன்றைக்குள் போய் விடுவாள் போல தோன்றியதும் தானும் செத்து விடலாமா என்று குழம்பினார்.டயாலிசிசை உடல் தாங்கவில்லை என்று சொல்லி இரத்தம் ஏற்றினார்கள்.

   மறுநாள்-
 காலையில் கண்விழித்தபோது அவளது வாழ்க்கையை தான் மிகவூம் சீரழித்திருக்கிறௌம் என்பது பு ரி ய தனக்கு என்ன தண்டனை தருவது என்று யோசிக்க ஆரம்பித்தர்;.கஸ்துரரி மெல்ல கண்திறந்து பார்த்தாள்.
என்னங்க .நான் போயிருவேனோன்னு பயப்படறிங்களா
இல்லை
அவர் சொன்னது உண்மைதான் என்று புரிந்தது.அவருக்கு உண்மையில் கவலை தன்னுடைய ஹீரோயிசத்தையூம்,தலைவர்கிரிடத்தையூம் எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதுதான் என்று தௌpவாகத் தெரிந்தது.
அண்ணே.வணக்கம்ணே.அண்ணி எப்படியிருக்காங்க.என்ன அண்ணே இப்படி இளைச்சிட்டிங்க.நல்ல இருக்கிங்களாண்ணேஎன்று அவரது நண்பர்கள் வந்து அமர்ந்தனர்.
கஸ்துரரிக்கு திடுக்கென்றது.
அண்ணே..ஒரு உதவி செய்யனும் நீங்க.கடவூள் மாதிரி உங்களைத்தான் நம்பியிருக்கம்என்றார் ஒரு கிடாமீசைக்காரார்
நம்ம பய ஒரு டிராவல்ஸ் வைச்சிருந்தான்.பயபுள்ள வண்டியை கொண்டு போய் மோதி வண்டி போயிருச்சி.இன்சூரன்சை புதுப்பிக்கலை.வண்டி வாங்க ரெண்டு லட்சம் ஆகும்.நீங்க பைனான்ஸ் கம்பெனியில ஜாமீன் போட்டா பணம் கிடைக்கும்.ஒழுங்கா பணத்தை கட்டலைன்னா பயலை நானே வெட்டிருவேன்என்றபோது அவருக்குள் அனாதையாகக் கிடந்த ஹீரோயிசம்விழித்துக் கொண்டு வெளியே வர தனக்கு புதுரத்தம் செலுத்தியது போல அந்த பத்திரங்களில் அசட்டுச்
சிரிப்புடன் ஜாமீன் கையெழுத்துப் போடுவதைப் பார்த்துக் கொண்டே கஸ்துரரி யின் உயர் சிறுகச் சிறுக போய்க் கொண்டே இருக்க அதற்கெல்லாம் கவலைப்படாதவராக சிலிர்ப்புடன் தலைவராகஎழுந்து நடக்க ஆரம்பித்தார்.

                                                          ------------------------
Previous
Next Post »

2 comments

Click here for comments