சிறுகதை: " இனியாவின் நிமிடங்கள்..." - விஜயநிலா



 நான் அவளுக்கென்று பார்த்துப் பார்த்து எடுத்து வந்திருந்த ஸ்விம் சூட்டை புறக்கணித்தாள் நியோ.முழுப்பெயர் நித்யயோகினி.அவளை வர்ணிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை.அவளை பின்புறமாக அணைத்துக் கொண்டு அவள் காதோரம் சொன்னேன். 'நெவர் கோயிங் பேக்'என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.சமந்தா க்ரைன்!
"உனக்கென்ன யோலன்பெபேஸ்னு நினைப்பா"
"யாரவ"என்றாள் நகர்ந்து கொள்ளாமல்.
"முதல் மிஸ்அமெரிக்கா.1951ல் பலபேரின் ஹார்மோன்களை கெடுத்தவள்.ஆனா மிஸ் அமெரிக்கா ஆனதும் ஸ்விம் சூட் போட்டுக்க மறுத்திருக்கா தெரியூமா"
"ஸ்விம் சூட் எல்லாம் அறுத பழசு.நீ புதுசா எதையூம் வாங்கிட்டு வர மாட்டியா.சரி சொல்லு.எதுக்காக என்னை வரச்சொன்னே.உன் கண்கள்ல ஏதோ சதி தெரியூது"
"ஆமா"
"சொல்"
"நாளை மறுநாள் நடக்கப் போற மிஸ்யூனிவர்ஸ் அழகிப்போட்டியில ஃபிக்சிங் இருக்கு தெரியூமா"
"கட் இட்.ஊழல் சூதாட்டம் இப்ப எல்லா இடத்துலயூம் இருக்கு.இந்த அழகிப்போட்டியில நமக்கென்ன அக்கறை"
"இருக்கு.நாளை மறுநாள் நடக்கப்போற போட்டியில செலக்ட் ஆகப்போறவ இனியா.இப்பவே இனியா அலையடிக்குது.அவளை செலக்ட் பண்ணச் சொல்லி எஃப்எம்சிஜி கம்பெனிகள் திருப்பதி பெருமாளை வேண்டிக்கறானுங்களாம்"
"குட் ஜோக்.ஷீ டிசர்வ் இட்.அவ ஜெயிச்சிட்டுப் போகட்டுமேஉனக்கு போரடிச்சா வா டிவியில போத்தீஸ் விளம்பரம் பார்க்கலாம்.வசனத்தாலயே எல்லாரையூம் சாவடிச்சிர்றாங்களாம்"என்று சிரித்தாள்.சன்னல் வழியே தெருவில் தெரிந்த போஸ்டரில் அரவிந்தசாமி அப்பள விளம்பரம் போல உப்பலான முகத்துடன் (வில்லனாம்?!) தெரிந்தார்.
என்னை விலக்கி விட்டு அறையைக்கு வெளியிலுள்ள சிட் அவூட்டுக்கு வந்தாள். நியோ ப்ளுபெர்ரி பக்கிள் டிரெஸ் அணிந்திருந்தாள்.அங்கிருந்த மஞ்சள் நிற ரோஜாப்பூவை வலிக்காமல் தொட்டுப் பார்த்தாள்.
 நாங்கள் இரண்டு பேரும் ஒரே இடத்தில்தான் வேலை பார்த்து வருகிறௌம்.மெட்ரோலஜி டிபார்ட்மன்ட்டில் சாடிலைட் உதவியூடன் எப்போது தட்பவெப்பநிலை மாறும்.எப்போது மழை வரும்.காற்று எப்போது காபரே அழகி போல ஆடும் என்றெல்லாம் கம்ப்யூட்டரில் கணித்து கொடுத்து விடுவோம்.அதை யாராவது கிராப்பு தலை ஆசாமி டிவி சேனல்காரர்களுக்கு செய்தியாக ஒப்பித்து விட்டு மோட்டுவளையைப் பார்ப்பார்.நியோவை எனக்கு நான்கு வருடங்களாகத் தெரியூம்.அவ்வப்போது தொட்டுப் பார்த்திருக்கிறேன்.அவள் தடுக்க மாட்டாள்.எப்போதாவது அவளை அவளது அபார்ட்மன்டில் வைத்து உடைகளை ஒவ்வொன்றாகப் பிரித்து...
"சொல்லு.ஏதாவது கெட்ட ஆட்டம் ஆட ப்ளான் போடறியா.இனியாவை நாம கடத்தப் போறமா.."
"ம்.சின்னதா ஒரு ப்ளான் இருக்கு.இனியா நாளைக்கு போட்டியில கலந்துக்காமப் போனா சின்னதாக ஒரு அதிர்ச்சி பரவி சாட்டிலைட்காரங்களுக்கு அட்டாக் வந்துரும்.அத்தினி விளம்பரங்களை வாங்கி வைச்சிருக்கானுங்க.அதனால அவ ஜெயிச்சதும்தான் கடத்தப்போறம்"
"ஜெயிச்சதும் அவளை ஊர் முழுக்க அடைகாக்குமே.எப்படி"
"அவ வீட்டுல வைச்சி.."
"அவ நாளைக்கு வீட்டுக்கு வராம ஹோட்டல்லயே தங்கிட்டாள்னா"
'தங்க மாட்டா.ஒரு பிரபல நடிகர் அவளை அவளோட வீட்லயே டேட் பண்றார்.விசாரிச்சிட்டேன்"
"சரி"
"கிட்ட வாயேன்"
"சரியான ஆம்பிளை வசனம்.எப்ப பேசினாலும் கடைசியில இதைத்தான் சொல்வே.இது அலுக்கலையா.எப்படி மத்த எல்லாரும் இதை பண்றாங்களோ"
"தெரியலை.வா"
வந்தாள்.
மறுநாள் பொழுது விடிவதற்கு முன்பிருந்தே இனியாவை சேனல்கள் மொய்த்துக் கொள்ள ஆரம்பித்தன.அவளை சற்று தொலைவிலிருந்து பின்தொடர்ந்து கொண்டிருந்தேன்.நியோ அளவிற்கு இனியா அழகானவள் இல்லைதான்.ஆனால் இவள்தான் இந்த ஆண்டின் மிஸ்யூனிவர்ஸ் என்று முடிவாகி விட்டது.மீடியாக்கள் இவளை இனி கொண்டாடப் போகிறார்கள்.எல்லா டிவி சேனல்களிலும் சோப்பிலிருந்து சானிடரி நாப்கின்வரை இவள்தான் சிபாரிசு செய்யப் போகிறாள்.
இன்னும் ஒரு நாள் முழுதாக இருக்கிறது.இவள் தனியாகக் கிடைத்தால் அப்படியே ரெஸ்ட்ரூமிற்குள் அழைத்துக் கொண்டு போய் உரித்துப் பார்த்து விடலாம்.இனியா.அவள் உதட்டில் உதட்டை வைத்து மில்லிவோல்ட் கணக்கில் ஏதாவது மின்சாரம் கின்சாரம் பாய்கிறதா என்று சோதித்து விடலாம்.இனியா.அவள் அனுமதித்தால் அவளை கீழே கிடத்தி அவள் முழுவதுமாக பரவி அவள் முகத்திலிருந்து ஆரம்பித்து அப்புறம் கடைசி ஆயூதமாக என்னை அவளுக்குள் செலுத்தி..இனியா..சே.ஏன் நான் இப்படி நினைக்கிறேன்.அவளை கடத்துவது மட்டும்தான் என் நோக்கம்.மற்றெல்லாம் இப்போதைக்கு வேண்டாம்.இனியாவை கடத்திப் போய் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான காரியம் இருக்கிறது.அதை இப்போது சொன்னால் திரைக்கதையில் சுவாரஸ்யம் போய் விடும்.
என் மொபைல் எடுத்து அதன் திரையில் இனியா என்று விரலால் எழுதினேன்.ஆன்ராய்டு அதை ஆர்வமாக வாங்கிக் கொண்டு இனியா இனியா என்று எதிர்எழுத்தது(எதிரொலி போன்று எதிர்எழுத்து).இரண்டொரு முறை நியோ அழைத்து சுருக்கமாய் பேசினாள்.இன்றைக்கு யாருடனும் அதிகம் பேசாமல் ஒதுங்கியிருக்காதே.எப்போதும்போல் நடந்து கொள்.இல்லையென்றால் பின்னால் சந்தேகம் வந்து விடலாம் என்றாள்.அதுவூம் சரிதான் என்று என் மெட்ரோலஜி ஆபீசிற்குள் வந்து கம்ப்யூட்டரை நோண்ட ஆரம்பித்தேன்.இரண்டொரு ரிப்போர்ட்டை அனுப்பி வைத்து விட்டு டெர்மினலில் அமர்ந்து வானத்தை உன்னிப்பாக கவனித்தேன்.அன்று முழுக்க சேனல்களில் இனியாதான் அடுத்த அழகி என்று வர்ணித்தார்கள்.நாளைக்கு இந்நேரம் இனியா என்னிடம் சிக்கிக்கொண்டிருப்பாள் என்பதை அறிந்தால் என்ன செய்வார்கள் என்று நினைத்தேன்.
நான் நினைத்த மாதிரியேதான் நடந்தது.சர்ச்சைக்குரிய அந்த நடிகர் இனியாவை டேட் செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார்.எல்லாம் கனவூ போலவே இருக்கிறது.மறுநாள் இனியா பிரபஞ்ச அழகியாக தேர்வூ செய்யப்படுகிறாள்.லேசர் லைட் அவளை குளிப்பாட்டுகிறது.அவள் கீழே குனியூம்போதெல்லாம் மீடியாக்காரர்கள் கவனமாக படம் எடுக்கிறார்கள்.இனியா கையை எல்லா திசைகளிலும் அசைத்து உதடு பிரியாமல் புன்னகைக்கிறாள்.அவளது லிப்ஸ்டிக் தீற்றலில் சிவப்பு நிறம் பார்த்து உலகம் அசையாமல் நின்று விடுகிறது.தினம் வானிலை அறிக்கை விடும் எங்கள் ஆபீஸ் மாமா கூட வாயை மூடாமல் இனியாவை பார்த்துக் கொண்டிருக்கிறார்.இதெல்லாம் நடந்து முடிந்த தருணத்தில் நான் இனியாவை சந்தித்தேன்.
"ந்நோ மீடியா ப்ளீஸ்.நான் வீட்டுக்கு திரும்பனும்"
"அவர் வர்றாராமே.இத்தனை டென்ஷன்லயூம் டேட்டிங்கா.நிசமாவே அவர்தானா.."
"உனக்கெப்படி தெரியூம்"
"மீடியா"என்றேன்.
"இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்.உங்களுக்கு இன்னொருநாள் டேட் தர்றேன்.ஐமீன் பேட்டி எடுக்கறதுக்கு.இப்ப சமயமில்லை.பை"
"என் சேனல் பேரை சொன்னா இப்பவே பேட்டி தருவிங்க"
"பார்டன்"
என் சேனலின் பெயரைச் சொன்னேன்.மூன்றெழுத்து சேனல்.உலகின் தலையாய செய்தி சேனல்.அதை சொன்னதும் அவள் கார் கதவூ திறந்து-
"ஹாப் இன்"என்றாள்.
அப்புறம் நடந்ததை விவரிப்பது அனாவசியம்.சுருக்கமாய் சொன்னால் மிஸ்யூனிவர்ஸ் இனியா இப்போது எங்கள் வசம்.அவளை நான் நாற்காலியில் உட்கார வைத்து கைகளை கட்டிப்போடவில்லை.அவள் அருகே வந்து குனிந்து அவள் முகத்தை உற்றுப் பார்த்த நியோ கேட்டாள்.
"என்கிட்ட இல்லாது இவ கிட்ட அப்படி என்ன இருக்குன்னு இவளுக்கு இத்தினி பப்ளிசிட்டி"
"என்னைக் கேட்டா.அவகிட்ட அப்படி என்ன இருக்குன்னு நீயே பாரு"என்றேன்.நியோ முறைப்பாள் என்று நினைத்தேன்.முறைக்கவில்லை.
"இவ முகத்துல,கையில அப்புறம் மார்ல இருக்கற தோலைப் பார்த்தியா.எபிடெர்மிக்,டெர்மிக் எல்லாம் கச்சிதமா இருக்கு"என்றாள் நியோ.
"எக்ஸாட்லி.இட் மஸ்ட் பீ கொகைன் ஃபைபரும் ஷூகர் மால்யூக்யூலும் கலந்து செஞ்ச பாலிமராகத்தான் இருக்கனும்.கண்கள்ல என்ன ஒரு உயிர்ப்பு தெரியூது பாரு.கேங்லியன் செல்களை ட்யூன் பண்ணியிருக்காங்க.ப்ராஸ்தடிக் கண்கள்ல இது ஒரு மேம்பட்ட மாதிரி தெரியூது."
"மொத்தத்துல இந்த இனியா ஒரு.."
"சொர்க்கம்னு சொல்லலாhம் நாம ஒரு ஹ்யூமனா இருந்தா.இவ நம்மை விட மேம்பட்ட மாடல்னுதான் சொல்லத் தோணுது"
"அப்ப நம்மை ஐ மீன் நம்ம மாதிரி ஆட்களை இனி ப்ரமோட் பண்ண மாட்டாங்க.இவ மாதிரி சூப்பர் மாடல் வந்திரும்தானே"
"நியோ.யூ காட் இட்.நம்மை மாதிரி ஹ்யூமனாய்டுகளை உருவாக்கி மனுஷங்களுக்கு உதவற வேலைகள்ல பழக்கப்படுத்தறது வந்து அம்பது வருஷமாச்சு.நமக்கு முந்திய ஹ்யூமனாய்டு மாடல்களை நாம அடாசுன்னு கழட்டிப் போட வைச்சிதான் நாம வந்திருக்கம்.இப்ப நம்மை வேண்டாம்னு வீசி எறியறதுக்கு அடுத்த மாடல்களை உருவாக்கிட்டு இருப்பாங்க.அதில ஒருத்திதான் இந்த இனியா.."
"இவளை அழிச்சிரலாமா."
"வேண்டாம்.நிமிஷத்துல நாமதான்னு கண்டுபிடிச்சிருவாங்க.இவளை வேணும்னா சரியா வொர்க் பண்ண விடாம கொஞ்சம் இவளோட சர்க்யூட்கள்ல தப்பிதமாக காரியம் பண்ணி வைக்கலாம்.அப்புறம் இவ மாதிரி கைனாய்டுகளை ப்ரமோட் பண்றதுக்கு அரசாங்கம் யோசனை பண்ணலாம்"
அப்போது முதல்முறையாக இனியா பேசினாள்.
"என்னை கடத்தினது வரைக்கும் சரி.என்னை நிலைகுலைய வைக்கிற அமெச்சூர் வேலையெல்லாம் எதுக்கு.என்னோடது உங்களை விட மேம்பட்ட மாடல்னு பொறாமையா இருக்கா"
"பொறாமை எல்லாம் இல்லை.ஒரு சர்வைவல் அவசரம்.எங்க மாதிரி ஹ்யூமனாய்டுகளை மனுஷங்க போலவே உணர்வூகளோட படைச்சிட்டாங்க.இப்ப நாங்க தேவையில்லைன்னு ஆயிருச்சின்னா இன்னும் கீழ்மட்ட வேலை கொடுப்பாங்க.இல்லைன்னா சும்மா வேஸ்ட்யார்டுல கொண்டுபோய் போட்ருவாங்க."
"கீதாசாரம் தெரியூமா"என்றாள் இனியா எழுந்து நடந்தவாறே.
"எது நடந்ததோ அது நன்றாகவே இருந்ததுங்கற டகால்டிதானே.அதை சொல்லாதே.உன் மாதிரி அட்வான்ஸ் மாடல்கள் எங்களுக்கு ஆபத்து"
"சரி உங்க மாதிரி மாடல்கள் வர்றதுக்கு முன்ன இருந்த மாடல்கள் என்ன ஆச்சு.அதுங்களும் குப்பைக்கு போயாச்சுதானே.அதுக்கு காரணம் நீங்கன்னு சொல்ல முடியூமா.."
"அ..அது வந்து.."
"அதேதான்.நாளைக்கு எனக்கும் அட்வான்ஸா ஒரு மாடல் வரலாம்.அப்ப நானும் என் மாதிரி உருவாக்கப்பட்டதுங்களும் குப்பைக்கு போயிர வேண்டியதுதான்"
சட்டென்று நியோவின் கைகளைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தேன்.
"என்னாச்சு.அவளை கொல்ல வேணாமா"என்றாள் நியோ.
"வேணாம்.இன்னைக்கு நமக்கு வந்திருக்கற நிலைமை நாளைக்கு அவளுக்கும் வரும்.அதனால இது ஒரு சர்வைவல் சைக்கிள்.இருக்கறவரை என்ஜாய் பண்ணுவம் இந்த இயந்திர லைஃபை"என்று வெளியே வந்தபோது இனியாவூம் வெளியே வந்தாள்.
அவளை சூழ்ந்து கொண்ட மீடியாகாரர்களிடம்-
"இல்லை.நடிகர் வரலை.அவரோட  படத்தோட இரண்டாம் பாகத்தை வெளியிடறதுல இப்பவே என்னவோ சிக்கலாம்.அதனால நான் என் அபார்ட்மன்ட் போய் நல்லா துரங்கப் போறேன்.பை"என்று சேனல்வழியாகப் பார்க்கும் மகாஜனங்களுக்கு பறக்கும் முத்தம் தந்து விட்டு காரில் ஏறினாள்.நானும் நியோவூம் வருத்தம் அகன்று தத்தம் பாதையில் செல்ல ஆரம்பித்தோம்.

                                                                             -------------------------
Previous
Next Post »