'நகரவாழ்க்கையில்
சிரிப்பைத் தொலைத்து விடுவதால்
தியேட்டர்களில் தேடுகிறௌம்
கலகலப்பை'


'என்னாச்சர்யம்
இப்போதெல்லாம்
மாசக்கடைசி
முதல்வாரத்திலேயே வந்துவிடுகிறது'

'அரக்கப்பரக்க கிளம்பி
அசந்து களைத்து
வருவதில்
நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றே
பெரும்பாலான நாட்கள்
தலையணைகள் பேசிக்கொள்கின்றன'

'கனவூகளில்
தேவதைகளே வந்தாலும்
ஓர் ஓரத்தில்
ஹவூஸ் ரென்ட் ஹோம்லோன் ஈஎம்ஐ
ஸ்கூல் ஃபீஸ் என்று
மரத்தைச் சுற்றி வெள்ளுடையில்
ஆடுகின்றன'

'எல்லா காதல் படங்களையூம்
காதலிக்காதவர்களும்
காதலில் தோற்றவர்களும்தான்
பார்த்துத் தொலைக்கிறார்கள்'


'எழுந்து கிளம்பி
எழுந்து திரும்பி
தினம் தினம் ஒரேவிதமாய்...
யாரேனும்
பிஜிஎம் போட்டிருந்தால்
இந்த வாழ்க்கையூம்
சுவாரஸ்யமாய் இருந்திருக்குமோ'

'பள்ளியிலும் கல்லுரரியிலும்
பழகிய நண்பர்கள்
பாதியில் தொலைந்த வெற்றிடத்தை
ஃபேஸ்புக் நண்பர்கள்
அவ்வப்போது நிரப்புகிறார்கள்'

'ஒவ்வொரு வீக்என்டிலும்
என்ஜாய் கரோ என்று
சொல்லிக்கொண்டாலும்
வீட்டிற்கு வந்ததும்தான்
உணரமுடிகிறது
களைப்பையூம் வெறுமையையூம்'
Previous
Next Post »