அள்ளு!



  மனிதர்களில் அந்தக்கால மனிதர்கள் மனமுதிர்ச்சி உள்ளவர்கள்.மரியாதையாக நடப்பவர்கள்.வாழ்க்கையின் போக்கு புரிந்தவர்கள் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறௌம்.ஆனால் ஆங்காங்கே விதிவிலக்காக சிலர் இருக்கக் கூடும்.அது போல ஒரு மனிதர்தான் நம் கதாநாயகர்.எங்களது பகுதியில் இருக்கிற இவருக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும்.ஏதோ ஒரு டிபார்ட்மென்ட்டில் ஏதோ பணியாற்றி ஓய்வூ பெற்றவர்.காலையில் எழுந்ததும் வாக்கிங் போவது தவிர அவர் வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் உடற்பயிற்சியெல்லாம் செய்து கைகால்களைச் சுளுக்கிக் கொள்வார்.

 வீட்டின் கொல்லைப்புறம் உள்ள மாதுளை மாங்காய் தேங்காய் மட்டுமில்லாமல் மரத்திலுள்ள முருங்கைப்பூ முதற்கொண்டு தினமும் எண்ணி எண்ணி வைத்து விடுவார்.இதுவரை சிக்கலில்லை.இது அவர் வீடு.அவரது தோட்டம்.எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும் என இருந்து விடலாம்.ஆனால் அடுத்தடுத்து அவர் செய்யூம் அட்ராசிட்டிதான் தாங்க முடியாமல் இருந்தது.அடுத்த வீடுகளில் உள்ள செடிகளில் உள்ள பழங்கள் காய்கறிகளை எடுத்துச் சென்று விடுவார்.வீட்டின் மேலே செல்லும் கேபிள் வயரை வெட்டி எடுத்துக் கொள்வார்.வீட்டுக்கருகில் யாராவது வீடு கட்டிக் கொண்டிருந்தால் அங்கேயிருந்து செங்கல் மணல் ஜல்லிக்கற்கள் இரவூகளில் மாயமாகி விடும்.யார் வீட்டு வாசலில் எது கிடந்தாலும் எடுத்துச் சென்று விடுவார்.சின்னப் பசங்க மைதானத்தில் பேட்மின்டன் ஆடினால் பந்தையூம் பேட்டையூம் எடுத்துச் சென்று விடுவார்.யார் கண்ணில் சிக்கினாலும் வம்புப்பேச்சை ஆரம்பித்து விடுவார்.

 சொல்லிச் சொல்லிப் பார்த்தார்கள்.

 சின்னப் பசங்க ஒரு தடவை அவரை அழைத்துச் சென்று விளையாடுவது போல மேலே விழுந்து கையைத் திருகி ப்ராக்சர் ஆக்கி விட்டெல்லாம் பார்த்தார்கள்.மனிதர் திருந்தது போலில்லை.சின்னப் பையன் போல துள்ளித் திரிய ஆரம்பித்து விட்டார்.வழக்கம் போல அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து சாமான்கள் காணாமல் போக ஆரம்பித்தது.

 முடிவாக ஒரு திட்டம் போட்டார்கள்.

 அன்றைய தினம் நம்ம ஹீரோவூக்கு சுபதினம் போலிருக்கிறது.காலையில் கண்விழித்து அவர் தனது போர்டிகோவூக்க வந்தபோது அதில் பழைய சைக்கிள் டயர் கிழிந்த துணிகள் வெட்டிப் போடப்பட்ட வயர்கள்.தென்னை மட்டைகள் காலியான கோக் பெப்சி டின்கள் என்று கிடந்தன.
 வழக்கமா நாமதானே இதையெல்லாம் போய் லவட்டிட்டு வருவோம்.இப்ப நம்ம வீட்டுக்கே வந்து இதையெல்லாம் யார் போட்டு வைத்திருப்பது.யார் போட்டு வைச்சா என்ன நமக்கு அடிச்சது லக்கி பிரைஸ் என்று அதையெல்லாம் பொறுக்கி பங்கிடு செய்ய ஆரம்பித்தார். பெரியவர்.
 அவர் தன் வீட்டு போர்டிகோவைத்தான்டி வெளியே வந்து தன் வீட்டு காம்பவூன்ட் சுவற்றைப் பார்த்திருந்தாரானால் விஷயம் புரிந்திருக்கும்.

 அவர் வீட்டு காம்பவூன்ட் சுவற்றில் பின்வருமாறு எழுதியிருந்தது.

'இதுதான் நம்ம காலனியோட பெரிய்ய குப்பைத் தொட்டி.வீணாகப் போகும் சாமான்களை இங்கே காம்பவூன்ட்டிற்குள் கொட்டவூம்'
 எப்போதும் வம்பு வழக்கு என்று திரிந்து கொண்டு குப்பைகளை அள்ளி அள்ளி சேர்த்துக் கொண்டிருந்த பெரியவர் தன் வீட்டையே ஒரு குப்பைத் தொட்டியாக மாற்றிக் கொண்டு விட்டார்.

 இது போன்ற குப்பைத் தொட்டிகள் ஊருக்கு ஊர் ஏரியாவூக்கு ஏரியா இருக்கத்தான் செய்கின்றன.
Previous
Next Post »