மோதிரம் வெர்ஸஸ் நெக்லஸ்!



 சில ஆண்டுகளாகவே ஸ்டார்காஸ்ட்டை விடவூம் பேய்கள் மினிமம் கேரன்டி தந்து கொண்டிருப்பதால் தொடர்ந்து பேய்ப்படங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.காஞ்சனாவில் தொடங்கிய பேய்படம் அதற்கு முன்பே சந்திரமுகி வந்திருந்தாலும் அதெல்லாம் ஸ்டார்காஸ்ட்டிற்குள் அடங்கிய  பேய் தொடர்ந்து வதவதவென வந்து கொண்டிருந்தது.

 பயமுறுத்தும் பேய்ப்படம்
 சிரிக்க வைக்கும் பேய்ப்படம்
 சோகப்பேய்ப்படம் (மிஷ்கின், கே.கோபாலகிருஷ்ணன்)

 பேய்க்குள் பேய்ப்படம் என்றெல்லாம் வரிசை கட்டி வந்திருந்தாலும் பேய்ப்படம் எடுப்பதில் ஹாலிவூட் வரைப் போக வேண்டாம்.தமிழிலேயே எடுத்திருக்கிறார்கள்.போத்தீஸ்காரரின் கல்யாணராமன், துரையின் ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களில் எல்லாம் ஸ்கிரீன் ப்ளே துரசு தட்டிய மாதிரி பளீரென இருக்கும்.

 பேய்ப்படம் என்றால் மழுப்பல் இல்லாத பேய்ப்படங்களாக ஹாலிவூட்டில் பிரான்சிஸ்போர்டு கப்போல்லாவின் டிராகுலா அப்புறம் கிரிஸ்டோபர்லீ நடித்த டிராகுலா கிரிஸ்டோபர் லீயே பேய்க்கு பயந்து நடித்த தி ஹவூஸ் ஆஃப் டாக்டர் டெர்ரர் அப்புறம் பால்டர்கெய்ஸ்ட் போன்ற படங்கள் எல்லாம் தியேட்டர்களில் ஆடியன்ஸை கட்டிப் போட்டிருப்பவை.எக்ஸார்ஸிஸ்ட் ஓமன் போன்ற படங்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை.அiவெயல்லாம் டிரன்ட்செட்டர்.
 இப்போது பார்த்த இரண்டு படங்கள் பற்றி சொல்ல வேண்டும்.
 டிமான்டி காலனி கொஞ்சம் சமீபத்திய ஹாலிவூட் படங்களான கான்ஜூரிங்  இன்சைடியஸ் ரக முயற்சி.இதற்கு சற்று வேறுபட்டு வந்திருந்த படமான மாயா முழுக்க முழுக்க ஷார்ட்ஃபிலிம்தனமாகவே எடுக்கப்பட்டிருந்தது.மிர்ரர் மாமா போன்ற படங்களை லவட்டிக் கொண்டு விட்ட மாதிரியான நர்ரேஷன்.
 ஆனால் மாயாவில் நயனதாரா திரையில் வந்ததுமே ரஜினி படம் மாதிரியான அப்ளாஸ் அள்ளுகிறது.இந்த படத்திற்கு ந.தா. தேவையில்லை.ராதிகாஆப்தே போன்ற மீடியாக்கர் ஆர்டிஸ்ட்டே போதும்.
 மாயாவில் என்னமோ சொல்ல வருகிறார்கள் என்று உட்கார்ந்து உட்கார்ந்து பார்த்ததில் போரடித்தது.ஆகக் கடைசியில் பார்த்தால் மாயா, டிமான்டி இரண்டுமே ஒரே மாதிரியான நாட்டி(knot) லிருந்து உருவாகியிருக்கிறது.
 டிமான்டியில் பிரெஞ்சுக்காரரின் (பிரஞ்ச்சா போர்ச்சுகீசியரா?) விலை உயர்ந்த நெக்லஸ்தான் கதைக்கும் பேயடிக்கும் காரணம் என்றால் மாயாவில் மோதிரம்.
 அடுத்த முறையாவது பேய்ப்படம் எடுக்கும்போது பேய்க்கு விசுவாசமாக படம் எடுங்கள்.பயமுறுத்தும்படி படம் எடுத்தால் நான் ஐந்து லட்சம் தருகிறேன்!
Previous
Next Post »