சிறுகதை: "அன்புள்ள ஆவி..." விஜயநிலா



   ஷப்னா சோம்பல் முறிக்காமல் எழுந்தாள்.கைகள் இரண்டையூம் பக்கவாட்டில் நீட்டி ஒரு காலை முழங்கால் வரைக்கும் உயர்த்தி ஒரு கண்ணைச் சுருக்கி லேசாக உதட்டைச் சுழித்து சோம்பல் முறித்திருந்தால் பல பேரின் ஆயூள் அம்பேலாகியிருந்திருக்கும்.
எழுந்தாள்.
ஷப்னா.வயது இருபது.மேக்அப் இல்லாமல் பார்த்தாலே அப்படியே கேள்வி கேட்காமல் மிஸ்யூனிவர்ஸ் ஆக்கி விடலாம் போல இருப்பாள்.டேனியல் ஸ்டீலும் படிப்பாள்.தாமஸ்ஹார்டியூம் படிப்பாள்.இப்போது அதையெல்லாம் படிப்பதில்லை.எதிர்காலவியல் என்னும் ஃபியூச்சராலஜியில்  எம்.ஏ. படித்துக் கொண்டிருக்கிறாரள்.யூனிவர்சிட்டியில் அவள் நுழைந்து விட்டால் மற்ற டிபார்மன்ட்டில் ஆள் இருக்க மாட்டார்கள்.அவள் எப்போது கேன்டீன் பக்கமாக வருவாள்.அவளைப் பார்த்துகொண்டே உயிரை விட்டு விடலாம் என்று புரொபசர் முதல் கேன்டீனில் டேபிள் துடைக்கும் சிறுவன் வரை காத்துக் கொண்டிருப்பார்கள்.
 இன்று சீக்கிரமாக யூனிவர்சிட்டிக்கு கிளம்பி விட்டாள் ஷப்னா.இன்றைக்கு ஒரு செமினார் இருக்கிறது.
எரிக் டிரெக்ஸ்ளரின் 'இன்ஜின் ஆஃப் கிரியேஷன்ஸ்' புத்தகம் பற்றிய கருத்தரங்கம்.1986லேயே மாலிக்யூலர் நானோ டெக்னாலஜி பற்றி எழுதியிருந்திருக்கிறாள் என்பாள்.புரொபசர் லால்சந்துடன் இது பற்றி அவ்வப்போது விவாதித்திருக்கிறாள்.நானோ டெக்னாலஜி பற்றி ஃப்யூச்சராலஜியில் அப்போதே சொல்லப்பட்டது குறித்து ஒரு ஆய்வூக்கட்டுரை எழுத வேண்டுமென்று சின்னதாய் கனா இருக்கிறது அவளுக்கு.
 டிபார்மன்ட் வாசலில் நெர்வசாக நின்றிருந்தார் புரொபசர் லால்சந்த்.
"என்ன புரொபசர்.வீட்ல திட்டு வாங்கினிங்களா நைட்"என்று கண்ணடித்தாள் ஷப்னா.
"இன்னிக்கி எல்லாமே தப்புத்தப்பாகவே போகுதும்மா.செமினாருக்கு தலைமை தாங்கி ஸ்பீச் தர்றதா இருந்த புரொபசர் மித்ரா வரலைன்னுட்டார்.சடர்னா அவருக்கு கார்டியாக் அரெஸ்ட்டாம்.லோஹியாவூல சேர்த்திருக்காங்க.டெலிகேட்ஸ் எல்லாம் வந்தாச்சு.என்ன பண்றதுன்னு தெரியலை"
"புரொபசர்.."
"என்னம்மா..கான்சல் பண்ணிரலாமா.வேற வழியில்ல"
"நான் பேசறேன் புரொபசர்.என்னால எரிக் டிரெக்ஸ்ளர் பத்தி பேச முடியூம்.1991ல அவர் சப்மிட் பண்ணிற பி.எச்.டி. தீஸிசை அதுக்கு அடுத்த வருஷம் நானோ சிஸ்டம்ஸ் மான்யூபாக்சரிங் காம்ப்புடேஷன்னு புத்தகமா அடிச்சி வெளியிட்டாங்க.அதுவரைக்கும் தரோவா டிரெக்ஸ்ளரை நான் படிச்சிருக்கேன்.என் பென்டிரைவ்ல எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு பிபிடி வைச்சிருக்கேன்.வாங்க புரொபசர்.ஆடியன்ஸ் முதல்ல எதிர்ப்பாங்க.நான் பேசப்பேச சைட் அடிக்கற விடலைப் பையங்க மாதிரி அடங்கிடுவாங்க பாருங்களேன்"
 குளிரூட்டப்பட்ட ஆடிட்டோரியத்தில் சன்னமான குரலில் ஷப்னா சிலைடுகளைப் புறக்கணித்து பேச ஆரம்பித்தாள்.கூட்டம் முதலில் தயங்கி அப்புறம் அவளை கண்கொட்டாமல் பார்க்க ஆரம்பித்தது.இன்டர்வெல்லில் ஹை டீ.
 கேக் கடிக்க ஆர்வமானவர்கள் கேக்கை மறந்து அவளை பார்வையால் கடித்துக் கொண்டிருந்தார்கள்.
 அன்றைக்கு யூனிவர்சிட்டி முழுக்க கவர்ந்து கொண்டாள் ஷப்னா.
சாயந்தரம் சிரிப்புடன் வந்தார் லால்சந்த்.
"வர்சடி மானத்தை காப்பாத்திட்ட ஷப்னா.வா உன்னை நான் டிராப் பண்றேன்"
"வேணாம்.என் நானோ இருக்கு"என்ற ஷப்னா ஆரஞ்சு வண்ண நானோவை எடுத்துக் கொண்டு சன்னமான வேகத்தில் சாலையில் புகுந்தாள்.
 போக்குவரத்து அதிகமில்லை.
 ஒரு திருப்பம் வந்தது.
 நாலைந்து மஞ்சள் லாரிகள்.ஒரு ஆம்புலன்ஸ்.அப்புறம் ஒரு ஆம்னி வேன் என்று போக்குவரத்து சோகையாக இருந்தது.
 அடுத்த வளைவில்...
 முதலில் ஷப்னா அந்த சிவப்பு நிற ஷைலோவை கவனி..க்..க..வி..ல்..லை.
 சட்டென்று நானோ கால்களால் உதைத்த ரப்பர் பந்து போல உருண்டது.அப்புறம் முன்புறம் சப்பையாக நசுங்கி சாய்ந்தது.
 உள்ளே-
 சீட் பெல்ட் அணிந்திருந்தும் எந்த பிரயோஜனமும் இன்றி செத்துப் போயிருந்தாள் ஷப்னா.
 வாயோரம் வழிந்த ரத்தக்கோடுகள் ஒரு ?--மாதிரி தெரிந்தது.
இப்போது என்னைப் பற்றி.நான் எப்போதும் என் இரண்டு கண்களால் பார்ப்பதை விட என் காமராவின் வ்யூஃபைண்டர் வழியாகப் பார்ப்பதைத்தான் விரும்புவேன்.என் ஃபீல்டு ஆஃப் வ்யூவில் சிக்குகிற எல்லாவற்றையூம் படமெடுப்பேன்.இல்லை இப்போதைய இளைஞர்கள் போல எனக்கு வைல்டு லைஃப் ஃபோட்டோகிராபியில் ஆர்வம் இல்லை.எதை வேண்டுமானாலும் எடுப்பேன்.
 என் பெயர் மணிமாறன் (எனக்கு 1000ல் ஒருவன் எம்ஜிஆர் பிடிக்கும்.அதனால் மணிமாறன்!) சுருக்கமாய் எல்லோருக்கும் எம்எம்.

  மணிமாறன் என்ற நீளமான பெயரை ஒரு தரம் ஒரு ஆர்ஜேதான் அழைத்தாள்.எம்எம்மே எனக்கு வசதியாக இருக்கிறது.
என்னிடம் கனான் 5டி மார்க்3 இருக்கிறது.இதற்கு முன்பு மார்க்2 வைத்திருந்தேன்.மார்க்3 எளிதாக இருக்கிறது.வினாடிக்கு 30 ஃப்ரேம் வரை எடுத்துத் தள்ளக் கூடிய வசதி இதில் இருக்கிறது.இதில் என்னைக் கவர்ந்தது 22எம்பி ஃபுல் ஃப்ரேம் சிமோஸ் சென்சார்.நிக்கானில் 36எம்பி இருந்தாலும் எனக்கென்னவோ கனானை எதுவூம் அடித்துக் கொள்ள முடியாதென்று தோன்றுகிறது.
நான் எப்போதும் காமரா பற்றித்தான் பேசிக்கொண்டே இருப்பேன்.இதனால் நான் எடுத்த படங்களை விட இழந்த காதலிகளே அதிகம்.எனக்கு என் காமரா இருந்தாலும் போதும்.வேறு எதுவூம் தேவையில்லை என்று நினைத்தேன்.
அப்போதுதான் அவள் திடீரென என் ரகளையான தினவாழ்வில் குறுக்கிட்டாள்.
அவள்?
"ஹாய்..அயாம் நீல்"என்றாள்.
"நீல்?"என்றேன் அவள் நீட்டிய கையை குலுக்குவதா வேண்டாமா என்ற குழப்பத்தில்.லீமெரீடியனில் ஒரு திரைப்பட அறிமுக நிகழ்ச்சி.அங்கு லன்ச் பிரேக்கின்போது தட்டுக்களில் சிக்கனை எடுத்துக் கொள்ள துவங்கியபோது வந்திருந்தாள் இந்த நீல்!
"என் முழுப்பெயர் நீலாயதாட்சி.நல்ல தமிழ்பெயர்.ஆனா இத்தனை புராதன பெயர் என் புரொபஷனுக்கு பொருந்தாது.அதனால நீலான்னுதான் முதல்ல பேரை சுருக்கினே;.அப்புறம் அதுவூம் சுருங்கி நீல்னு ஆயிருச்சி.உங்களைப் பத்தி ஃபோட்டோகிராஃபி ஜர்னல்ல படிச்சிருக்கேன்.உங்க படங்கள்ல டெப்த்தும் கலரும் பேசுது"என்றாள்.
புத்திசாலியானப் பெண் என்று புரிந்தது.அவள் மார்பைப் பார்த்தேன்.அவள் பெயருடன் அவள் பணியாற்றும் தொலைகாட்சியின் பெயரும் இருந்தது.
"நீங்க காம்பியரிங் பண்ற பொண்ணா.காத்துல கையை நீட்டி சுடுவிங்களா.சுமார் இருபது வருஷத்துக்கு முன்ன மெட்ரோ ப்ரியா துவங்கி வைச்ச தப்பாட்டம் அது"என்றேன்.
"குட் ஜோக்.நான் கான்சப்ட் ஹெட்.இந்த படத்து டைரக்டர் அசிஸ்டன்ட்டா இருந்தப்பவே தெரியூம்.எங்க சேனல்லதான் சனிக்கிழமை ஏழுமணிக்கு சிரிப்பு நிகழ்ச்சி நடத்திட்டு இருந்தான்.அவனுக்காக வந்தேன்.வந்த இடத்துல உங்களைப் பார்த்ததும் மைகாட் எனக்கு என்னவோ போல இருக்கு.ஹார்ட் அட்டாக் எல்லாம் வராதில்ல?
"பார்டன்?"
"உங்களை பார்த்ததுல கொஞ்சம் த்ரில்லிங்கா இருந்தது.இது என்ன காமரா கனானா"
"காமரா பத்தி பேசாதிங்க.காமரா பத்தி பேசித்தான் நான் இருபத்தியோரு கேர்ள்ஃப்ரன்ட்ஸை இழந்திருக்கேன்.இந்த காமரா கனான் 5டி மார்க்3" என்று ஆரம்பித்தபோது பின்னால் ஒரு ஆன்ட்டி உஷ்ஷ்ஷ் என்றாள்.
"வாங்க எம்எம்..நாம அப்படி போய் உட்கார்ந்து பேசுவம்"
"நீல்..இந்த பெயர் நல்லா இருக்கு"
"பெயர் மட்டும்தானா.நானும் நல்லாவே இருக்கேனே.சைட் அடிக்க மாட்டிங்களா"
"வ்யூ ஃபைன்டர்ல மட்டும்"என்றேன்.
"என்ன விஷயமா என்கிட்ட பேசனும்னு கேட்க மாட்டிங்களா"என்றாள்.
"சொல்லுங்க"
"எனக்காக ஒரு ப்ரைவேட் அசைன்மன்ட் செய்யறிங்களா.ஐ மீன் ஃபோட்டோ எடுத்து தரனும்"
"எதை"
'ஒரு சீக்வென்ஸை.என்னன்னு அப்புறம் சொல்றேன்.இப்போதைக்கு எதுவூம் சொல்ல முடியாது.ஏன்னா எனக்கே இந்த விஷயம் சில மணிநேரங்களுக்கு முன்னதான் ஃப்ளாஷ் ஆச்சு.உங்க ஃபீஸ் எவ்வளவூன்னு சொல்லுங்க"
"ஃபீஸா..எதுவூம் தர வேண்டாம்.என்ன வேலைன்னு தெரிஞ்சு எனக்கு ஆர்வம் வந்திருச்சின்னா ஃபீஸ் ஒரு பொருட்டே இல்ல"
"ஃபீஸ் வாங்கமாட்டேன்னு சொல்லிட்டு அப்புறம் உதட்டைக் கேட்க மாட்டிங்களே ப்ளீஸ் ப்ளீஸ் ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கவான்னு"என்று சிரித்தாள்.அவள் மார்புகள் லேசாக ஆடின.உள்ளே எதுவூம் அணியவில்லை போலிருக்கிறது.அவள் கண்களில் எதுவோ பளிச்சென்று தோன்றி மறைந்தன.பின்னாலிருந்து எவனாவது அமெச்சூர் காமராக்காரன் ஃப்ளாஷ் அடித்திருந்திருப்பான்.
"ஒரு மரணத்தை நேர்ல இருந்து படம் பிடிக்கனும்"என்றாள் பொதுவாக.
"ஏன் யாராவது பெரிசு உசிர் விடாம அடாசுத்தனம் பண்ணுதா.பால் ஊத்தறப்ப செத்துப் போறதை படம் பிடிக்கனுமா."
"இல்லை.இது இயற்கையான மரணம் இல்லை"
"அப்ப கொலையா?"என்றேன்.
"ஆமா"என்று மறுபடி சிரித்தாள்.
"என்ன சொல்ற நீல்.யார் யாரை கொலை பண்ணப்போறா.எதுக்கு அதை படம் எடுக்கனும்.இதில டிஆர்பி ரேட்டிங்கை ஏத்தறதுக்காக ஏதாவது தப்பிதமான ப்ளான் இருக்கா.இப்பெல்லாம் நைட்ல போலீஸ்காரங்க வந்து சத்தமே இல்லாம என்கவூன்டர் பண்ணிட்டுப் போய் ஆஸ்பத்திரியில படுத்திர்றாங்க.பார்த்து ஏதாவது ஏடாகூடமாகிடப்போகுது"
"பயமா இருக்கா எம்எம்'என்றாள்.
'ச்சே.பயந்தவன் காமராவை எடுக்கக் கூடாது..இதில ஏதுhவது ஜேம்ஸ்ஹாட்லித்தனம் இருந்து மாட்டிவிடப் போகுதோன்னு ஒரு சின்ன சந்தேகம்"
'அவ்வளவ்தானா..நான் இருக்கேன்.கொலை நடக்கற சமயத்துல நானே அந்த இடத்துக்கு அழைச்சிட்டுப் போறேன்.அதுவரைக்கும் என்னை கான்டாக்ட் பண்ண வேணாம்.எங்கயூம் வெளியூருக்கு போறதானா சொல்லிட்டுப் போங்க மிஸ்டர் எம்எம்"
"இப்ப நிசமாகவே தோணுது"என்றேன்.
"என்ன"
"ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கலாமான்னு.அங்க சைடுல பாருங்க.காதுல கடுக்கன் மாட்டின தலை கலைஞ்ச ஒருத்தன் ஒரு பொண்ணை எங்க தடவிட்டு இருக்கான் பாருங்க.கே.வி.ஆனந்த் படம் மாதிரி"
"ச்சே.எல்லா ஆண்களும் பர்வர்ட்தான்"என்று எழுந்து விட்டாள்.
"அப்புறம்.."
"அப்புறம்.."
"எப்ப மீட் பண்றது.."
"நானே சொல்றேன்.ஸாரி நானே வருவேன்'என்று என் பதிலுக்கு காத்திராமல் வெளியேறினாள்.
அவள் போனபின்தான் கவனித்தேன்.அவளது ஐடிகார்டு கீழே விழுந்திருந்தது.அதை எடுத்துப் பார்த்தேன்.அவளது பெயரும் அவள் பணியாற்றும் சேனலின் பெயரும் இருந்தது.இதை அவளிடம் கொடுப்பது எப்படி.அவள் செல் நம்பரை கூட வாங்கி வைத்துக் கொள்ளவில்லையே.அங்கே அவளது சேனல்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன்.
யாருமில்லை.
அப்புறம் அவளது சேனலுக்கு தொலைபேசி செய்தேன்.
நீலாயதாட்சி என்ற பெண்ணின் ஐடிகார்டு என்னிடம் இருப்பதாய் சொன்னேன்.அவளது எண் கொடுத்தார்கள்.அந்த எண்ணில் முயன்றபோது அந்த நீல் சற்று கரகரப்பான குரலில் பேசினாள்.
எங்காவது பொது இடத்தில் கொண்டு வந்து ஐடிகார்டு தரமுடியூமா என்றாள்.ஐடிகார்டு இல்லாமல் ஒவ்வொரு செக்க்ஷனுக்கும் கண்ணாடிக்கதவூகள் வழிவிடாமல் அடம் பிடிக்கும் என்றாள்.
 அவளை அண்ணாசாலை தர்ஹா அருகில் வரச் சொன்னேன்.
வந்தாள்.
வந்தவள் நீல் என்கிறா நீலாயதாட்சி இல்லை.
மிக்க நன்றியூடன் என் கையிலிருந்த ஐடிகார்டை வாங்கிக்கொண்டாள்.
"நீங்க.."என்றேன் சந்தேகமாக.
'நீல்.முழுப்பேரு நீலாயதாட்சி.."
"அப்ப காலைல இருந்து லீமெரீடியன்ல வைச்சி நான் பார்த்தது.பேசினது.."
"நான் இன்னிக்கி முழுக்க சேனல்ல எடிட்டிங் சூட்லதானே இருந்தேன்.எங்கேயூம் வெளியில போகலையே"என்று பதில் சொல்லி விட்டு டாக்சியில் ஏறிப்போய் விட்டாள்.
நான் தர்ஹா அருகில் என்ன செய்வதென்று புரியாமல் நின்றிருந்தேன்.
அப்புறம்...
என் வழக்கமான விளம்பரப்பட வேலைகளில் நான் நீலாயதாட்சியை ஏறக்குறைய மறந்திருந்தபோது இன்னொருநாள் இரவூ வந்தாள்.ரெஸ்டாரென்ட்டில் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்திருந்தேன்.என் டேபிளில் எதிரே வந்து அமர்ந்து விட்டு சொன்னாள்.
"கண்டு பிடிச்சிட்டிங்களா.நான் சேனல்ல இல்லைன்னு.அந்த கார்டை நான் கீழ கிடந்து எடுத்தேன்.உங்ககிட்ட பேசறதுக்கு ஏதாவது ஒரு அடையாளம் எனக்கு தேவைப்பட்டுச்சி.அதனாலதான்..ஸாரி..ஸாரிப்பா.."என்றாள்.
"எதுக்கு இந்த டிராமா"
'சரி.மன்னிச்சிடுங்க.நாம அசைன்மன்ட்டை எப்ப வைச்சிக்கலாம்.."
"என்ன அசைன்மன்ட்?"
"ஒரு கொலை நடக்கறதை ஃபோட்டோ ஷூட் பண்றது பத்தி பேசினமே"
"அதுவூம் கூட ஏன் பொய்யா இருக்கக்கூடாது?"
"நீங்க என்னை நம்பலைல மிஸ்டர் எம்.எம்"என்றாள்.
"நம்பறேன்.ஆனா எதுக்காக கொலை.யார் யாரை கொல்லப்போறாங்க.இது ஏதாவது சதிவலையா.. எனி ட்ராப்?"
"எதுவூமில்லை.என்னை நம்பலாம்.காரன்ட்டியா கொலை நடக்கப்போவூது.அதை நாம தடுக்க முடியாது.ஃபோட்டோ எடுத்துக்க நினைக்கறது சும்மா ஒரு ஆர்வத்துக்காக"
'எங்க கொலை நடக்கப்போவூது"
'நானே வந்து சொல்வேன்"என்றாள்.அப்புறம் எழுந்து போனாள்.
இன்னொருநாள்-
நான் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் வந்து நின்றாள்.அவளது கையில் இருந்த புத்தகத்தை கவனித்தேன்.
எரிக் டிரெக்ஸ்ளரின் 'நானோ டெக்னாலஜி' புத்தகம் வைத்திருந்தாள்.
ஆமாம் இவளது பெயரை கேட்டுக்கொள்ளவில்லையே.இவள் பெயர் நீலாயதாட்சி இல்லையென்றால் வேறு என்ன பெயர் இவளுக்கு.
"ஹாய்..என் பேர் யமிஷா..நம்ம அசைன்மன்ட் துவங்கியாச்சு.கொலை நடக்கப்போறதை படம் எடுக்கனும்னு சொன்னேன்ல.இதுல ரெண்டு சுவாரஸ்யம் இருக்கு"
"என்ன 2"என்றேன்.
"முதலாவது இந்த கொலை ஒரு பழிக்கு பழிவாங்கற கொலை"
"சரி அப்புறம்?"
'இரண்டாவது இந்த கொலையை செய்யப் போறது உயிருள்ள மனுஷனில்ல"
"பார்டன் மீ"என்றேன்.
"ஆமாம்பா.இந்த கொலையை பண்ணப் போறது ஒரு ஆவி.செத்துப் போன ஆளோட ஆவி"
"எ..என்ன சொல்ற யமிஷா.சினேரியோ புரியலை எனக்கு"
"உட்கார்.புரியறாப்ல சொல்றேன்.பயப்படாத உட்காரு.உன் காமரா ரெடியா இருக்கா.உட்காரு"
அவள் பேச்சுக்கு கட்டுப்பட்டவனாக அமர்ந்தேன்.
அவள் சொன்னது முதலில் எனக்குப் புரியவில்லை.புரியப் புரிய சூழ்நிலையின் விபரீதம் என் முதுகுத் தண்டில் ஜில்லிட துவங்கியது.
அவள் சொன்னது இதுதான்.
ஒரு பெண்ணை யாரோ ஒரு ஆள் கொலை செய்து விடுகிறான்.செத்துப் போன பெண்ணுக்கு தான் ஆவியானதும் தன்னைக் கொன்றது இவன்தான் என்று தெரிகிறது.அப்புறம் ராமநாராயணன் படம் மாதிரி அந்த ஆவி நேடியாகவோ இல்லை இன்னொரு உடம்பிலோ புகுந்து கொண்டு வந்து கொன்றவனை கொலை செய்து பழி தீர்த்துக் கொள்கிறது.இது வழக்கமாக கதைகளில் வருவது.
கொல்வதில் இன்னொரு ரகமிருக்கிறது.
செத்துப் போன பெண் இன்னொரு முறை பிறந்து வளர்கிறாள்.ரீஇன்கார்னேஷன்.அப்போது அவளுக்கு போன பிறவியில் தன்னை கொன்றவனை அடையாளம் தெரிகிறது.அவளை கொலை செய்தவனும் இப்போது இன்னொரு பிறவி எடுத்திருக்கிறான்.உடனே அவனை சந்தித்து லவ் டிராமாவோ வேறு ஏதோ நடத்தி அவனை கொன்று விடுகிறாள்.இதையூம் கோடம்பாக்கம் சந்தித்திருக்கிறது.
ஆனால் இப்போது இவள்சொன்னது முற்றாக வேறு வகை க்ரைம்.
அது சாத்தியமா என்று புரியவில்லை.
 ஒரு கார்விபத்தில் சட்டென்று உடல் நசுங்கி செத்துப் போன ஷப்னா(கதையின் ஆரம்பத்தில் வந்தவள்.நினைவிருக்கிறதா?) செத்துப் போனபின் தன் வாழ்க்கை பற்றி யோசிக்கிறாள்.
 ஏற்கனவே ஷப்னா ஃப்யூச்சராலஜி என்ற எதிர்காலவியல் துறையில் ஆர்வமுள்ளவள்.அது பற்றி நிறைய படித்துள்ளவள்.அதனால் அவள் தன்னுடைய அடுத்தடுத்த பிறவிகள் பற்றி யோசித்ததில்-
 அவள் மறுபடி பிறந்து வளர்ந்து அடுத்த பிறவியில் ஒரு யூவதியாக உருமாறியபின் அவளை ஒருத்தன் வழியில் எதிர்பட்டு பலாத்காரமோ என்னவோ செய்ய முயன்று அவளை மாடியிலிருந்து தள்ளி விட்டு கொன்று விடுகிறாள்.
 அதாவது அடுத்த பிறவியில் ஷப்னா செத்துப் போய் விடுகிறாள்.அப்போது அவளுக்கு நினைவில் தேடலாக இருக்கிறது.தன்னை இப்போது கொலை செய்தவன் போன பிறவியில் எங்கே என்னவாய் இருந்திருப்பான் என்று ரிவர்ஸில் யோசித்துக் கொண்டே வந்ததில்-
 அவன் பெயர் எம்.எம்.என்கிற ஃபோட்டோகிராஃபர் மணிமாறன் என்று தெரிகிறது.அதனால் என்னிடம் வந்திருக்கிற இவள்-
"பார்த்தாயா..கொலையை படம் பிடிக்கிற அசைன்மன்ட் த்ரில்லா இருக்கில்ல.அதுவூம் இந்த கொலையை பண்ணப்போறது ஒரு ஆவி.அதாவது அடுத்த ஜென்மத்து ஆவி..செத்துடு ராசா.."
அட..அவள் கைகள் ஏன் சிஜி பண்ணின மாதிரி நீளளளளமாகிறது.
என் கழுத்தில் அவள் கைகள் இறுக்க-
காமராவை குழந்தையைப் போல கையாண்டேன்.ரெஸொல்யூஷனை 5760x3840வூக்கு மாற்றினேன்.22.3மெகாபிக்ஸலுக்கு தயார்படுத்தினேன்.ஷட்டர் ஸ்பீடை வினாடிக்கு 1/8000க்கு செட் செய்தேன்.
என் கைகள் தன்னிச்சையாக காமராவை இயக்க-
நான் செத்துப் போவதை நானே படம் எடுக்க ஆரம்பித்தேன்.


                                                 ------------------------------------
Previous
Next Post »

1 comments:

Click here for comments
Unknown
admin
October 4, 2015 at 1:09 PM ×

MIRATTAL KATHAI

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar