ஜிலுஜிலுவென்று கல்லுரரி மாணவிகள்


  சண்முகநாதன் என்ற என் முன்னாள் மாணவர் முகப்புத்தகத்தில் கேட்டிருந்தார்.எது உங்களை எழுதத் தோன்றியது.எழுவது எப்படி உங்களது ஆதர்சமாகியது என்று.
  எழுதவேண்டும் என்று திட்டமெல்லாம் போட்டு நான் எழுத வரவில்லை.பத்தாவது வரைக்கும் கிரிக்கெட்தான் ஆதர்சமாக இருந்தது.தெருவில் குச்சி நட்டு ஆடுவதிலிருந்து ஒரு தனி ஸ்டைல் வைத்திருப்பேன்.அது ஆஃப்ஸ்பின்னா வேறு எதுவூமா என்று பாட்ஸ்மன் யோசிப்பதற்குள் விக்கட் கீப்பருக்கு பந்து போய் விடும்.அது கபில்தேவ் காலம்.பள்ளிக்கூடத்தில்  கிரிக்கெட் ஆடுவது என்றால் அத்தனை சுலபமில்லை.ஏக பாலிட்டிக்ஸ் இருக்கும்.கிரிக்கெட் ஸ்டம்ப் அளவிற்கு வெடவெடவென்றுதான் இருப்பேன்.ஆனால் ஆங்கிலப்படம், கிரிக்கெட் இரண்டும் இருந்தால் போதும் என்று வாழ்க்கை பரபரவென்று போய்க்கொண்டிருந்தபோது  டிஸ்ட்ரிக்ட் மாட்ச்.அதற்கு தேர்வாவது என்பது எம்ஜிஆரை நேரில் பார்த்து கட்டிப்பிடித்துக் கொள்வதைப் போன்றது.அத்தனை கடினம்.அதற்கு முன் வாய்ப்பாக டோர்னமன்ட் எல்லாம் போக வேண்டுமென்ற அடிப்படை அறிவெல்லாம் அப்போது கிடையாது.
 சொந்தக்காரரில் ஒருத்தர் ரயில்வே எம்ப்ளாயி.ரயில்வேயில் வேலை பார்ப்பவர்கள் என்றால் வேலையே இல்லாமல் காலாட்டிக் கொண்டு உட்கார்ந்து கான்ட்டீனில் போன்டா சாப்பிடுபவர்கள் என்று அப்போது அர்த்தம்.இப்போதும் அப்படித்தான் என்று சிலர் பதிவை வாசித்துக் கொண்டு சிரிப்பது கேட்கிறது.அவர் கால்பந்துக்கான டோர்னமன்ட் அமைத்து செம பந்தாவாக வலம் வந்தார்.கன்ட்டோன்மன்ட்டில் அவர் வீடு ஜேஜே என்றிருக்கும்.தெப்பக்குளம் பிஷப்ஹீபர் பள்ளிக்கூடத்தில் மாட்ச் நடக்கும்.ப்ளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு போய் கூட்டமாய் உள்ளே விழுவார்கள்.அவரும் அவரது பசங்களும் பண்ணும் பந்தா எனக்கு எரிச்சலைக் கிளப்பி என்னை கிரிக்கெட் பக்கமாக திருப்பி விட்டது.
அவருடைய பையன் கேம்ப்பியனில் படித்துக் கொண்டிருந்தான்.நான் ஆர்சி என்ற சாதாரணர்களின் பள்ளியில் படித்தேன்.ப்ளஸ்டுவில் செயின்ட்ஜோசப்பிற்கு மாறி பஸ் நெடுக தென்பட்ட பெண்களால் கவிதைக்கு மாறியது வேறு கதை.
ரயில்வேகாரர் தன் பையனை புட்பாலில் உலகச் சாம்ப்பியன் ஆக்குவது என்று முடிவூ கட்டி அவனுக்கு டிரைனிங் எல்லாம் கொடுப்பார்.ஆனால் அந்தப் பையனுக்கு எதுவூம் செட் ஆகவில்லை.அப்புறம் சிபாரிசில் கோல்போஸ்ட்டில் கோலியராகவே கடைசி வரை அந்தப் பையன் நின்று கொண்டிருந்தார்.
 பள்ளிக் கூடத்தில் பிடிமாஸ்டரின் கை கால்களில் எல்லாம் விழத் தேவையில்லாமல் சும்மா பார்த்தாலே தேமே என்று நிற்கும் தோற்றம் பிடித்துப் போய் என்னை டிஸ்ட்ரிக்ட் டீமில் நுழைத்து விட குட்டைப் பிடியூம் நெட்டைப் பிடியூம் அப்புறம் பட்டிக்காட்டுப் பிடியூம்(அந்த மூன்று பிடிமாஸ்டர்களுக்கும் அதுதான் பட்டப்பெயர்.இன்று வரை அவர்கள் பெயர் நினைவில் இல்லை) முயற்சி செய்ய- எதிர்த்து ஆடப்போவது ஸ்ரீரங்கத்து டீம் என்றதும் டேய் சூப்பர்டா தோசிப்பசங்களை ஆஃப்ஸ்பின் போட்டு அடிச்சிடு என்பான் வகுப்புதோழன் செல்வராஜ்.
 அப்போதெல்லாம் திருச்சி வேறு டீம்.ஸ்ரீரங்கம் வேறு டீம்.ஸ்ரீரங்கத்து டீமில் உயரமாக வெள்ளையாய் பாப்பாரப் பசங்க இருப்பார்கள்.அவர்களை முடுக்குத் தெருவிலும் அடையவளைஞ்சானிலும் போக்கிரிப் பசங்க தினம் வெறுப்பேற்றி விட்டிருப்பதை அவர்கள் கிரிக்கெட்டில் பந்தை அடிப்பதிலும் வெறித்தனமாக பந்து போடுவதிலும்தான் காண்பிப்பார்கள்.எனக்கும் ஸ்ரீரங்கத்துப் பசங்க மேல் லேசாய் ஒரு காண்டு இருந்தது.காரணம் கிருஷ்ணமூர்த்தி என்றொரு ஆசிரியர் பள்ளிக் கூடத்தில் இருந்தார்.வகுப்புக்கு வரும்போது வராந்தாவில் கிரிக்கெட் போலிங் போல கைகளைச் சுழற்றிக் கொண்டே வருவார்.பிராமணர்.அதனால் பிராமண மாணவர்களாக் பார்த்து டீமில் நுழைத்து விடுவார்.ஜீவா படத்தில் சுசீந்திரன் காட்டியதெல்லாம் பச்சா.அதை விட அதிக பாலிட்டிக்ஸ் பள்ளிக்கூட கிரிக்கெட்டிலேயே இருந்தது.அதனால் எனக்கும் ஸ்ரீரங்கத்து டீம் வந்தால் போலிங் போட்டு அவர்கள் காலை உடைக்கவேண்டுமென்ற இட்ச் இருந்தது.
 ரயில்வேகார ஆசாமியின் மகனுக்கு நானும் சளைத்தவனில்லை என்று கிரிக்கெட்டில் ரகசியமாக நான் முன்னுக்கு வந்து கொண்டிருந்தது ரயில்வேகார மாமாவிற்கு(எனக்கு தாத்தா முறை வேண்டும்.என் அப்பாவிற்கு அவர் தாய்மாமா)தன்னுடைய லுரனா மோபட்டில் எங்கள் வீட்டிற்கு நான் இல்லாத நேரம் பார்த்து 'என்னப்பா உன் பையன் உருப்படாமப் போயிட்டிருக்கானே உனக்கு ஏதாவது தெரியூமா.படிப்பை விட்டுட்டு கிரிக்கெட் ஆடப்போறானாமே.இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு அடுக்குமா.அவ்வளவூதான்.நான் சொல்றதைச் சொல்லிட்டேன்.பார்த்து சூதானமாக கவனிச்சுக்க அவனை" என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
சூதானமாக என்ற வார்த்தைதான் இங்கே கீவேர்டு.
 டிஸ்ட்ரிக்ட் டீமில் ஆடப்போகிறேன் என்பதை அப்பாவிடம் சொல்ல வேண்டுமென்ற குஷியூடன் வீட்டுக்கு வந்தேன்.வந்ததும் வராததுமாக அப்பா பேட்டை எடுத்துட்டு வாடா என்றார்.
 ஆகா.புது பேட் ஏதும் கிடைக்கும் போலிருக்கு என்று எடுத்து வந்தேன்.
"கொண்டாடா அதை"என்று எடுத்துச் சென்று பின்பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த விறகு அடுப்பில் செருகினார்.
"போடா.போய் படிக்கற வழியப்பாரு.கிரிக்கெட் ஆடறானாம் கிரிக்கெட்.பெரிய கப்பில்தேவ்வூ இவரு"
 அந்த கணத்தில் முடிவூ செய்தேன்.
 இனி கிரிக்கெட் என் வாழ்க்கை இல்லை என்று.இன்று வரை நான் கிரிக்கெட் மாட்ச் பார்ப்பதில்லை.எப்போதாவது கடைசி ஓவர் பரபரப்பாக இருந்தால் என்ன என்று எட்டிப்பார்ப்பதுடன் சரி.இப்போது கூட தோனி கோலி போன்றவர்கள் பெயர்தான் தெரியூம்.அதுவூம் அவர்கள் விளம்பரங்களில் வருவதால்.
 டீன் ஏஜ் பருவம் என்பது அப்பா அம்மாவின் நிழலில் இருந்து விலகி தனக்கென ஒரு புது அடையாளம் தேடும் பருவம்.அப்படி தனி அடையாளத்தை தேடிக்கொள்ளாவிட்டால் ஹார்மோன்கள் வேறு திசையில் இழுத்துக் கொண்டு போய் நாசமாக்கி விடும்.
 எனக்கான அடையாளம் எது என்று தடுமாறிக் கொண்டிருந்தபோது ஆர்சியிலிருந்து ப்ளஸ்டுவிற்கு செயின்ட்ஜோசப்பிற்கு மாறினேன்.அதே ரயில்வே மாமாதான் எனக்கு ப்ளஸ்டு சீட் வாங்கிக் கொடுத்தார்.உள்குத்து இருந்தது.ஆர்சியில் விளையாட்டு போன்ற கோ - எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிடிஸை ஊக்குவிப்பார்கள்.எனக்கும் ஆதர்ச வாத்தியாராக சிங்கராயர் என்றொரு மனிதர் அங்கே நான் என்ன செய்தாலும் ஆஹா என்பார்.என்னை மேலே கொண்டு வர விரும்புவார்.செயின்ட் ஜோசப் கதை வேறு.அப்போது செயின்ட்ஜோசப் கல்லுரரியில் சிகே சாமி என்ற சர்வாதிகார பாதிரியார் இருந்த காலம்.அதனால் செயின்ட்ஜோசப் பள்ளியில் படிப்பை தவிர வேறு ஏதாவது செயலில் ஈடுபட்டால் விரலை உடைப்பார்கள்.எச்எம் ரூம் எதிரே அந்தமான் என்றொரு இடத்தில் நாள் முழுக்க முட்டி போட வைப்பார்கள்.
 என்னை அந்த கெடுபிடிப் பள்ளியில் சேர்த்து விட்டு ரயில்வே மாமா தன் பையனை புட்பாலில் சீரியசாக அடுத்த கட்டங்களுக்குச் செலுத்த விரும்பினார்.அந்தப் பையன் கோல்போஸ்ட்டை விட்டு நகரவில்லை.
 செயின்ட்ஜோசப்பிற்கு நான் பஸ்ஸில் செல்லவேண்டும்.கண்ட பஸ்ஸில் போனால் பையன் கெட்டு விடுவான் என்று(இதுவூம் ரயில்வே மாமாவின் உள்குத்து) 79 என்ற பஸ்ஸில் தன்னுடைய சேல்ஸ்டாக்ஸ் ஆபீசின் செல்வாக்கைப் பயன்படுத்தி என் அப்பா ப்ரீபாஸ் வாங்கிக் கொடுத்திருந்தார்.
 அந்த பஸ்ஸில் ஃபிலோமினாஸ் பள்ளி மாணவிகள் மற்றும்  ஜிலுஜிலுவென்று ஹோலிகிராஸ் கல்லுரரி மாணவிகள்  வருவார்கள்.போதாதா?ஹார்மோன்கள் என்னை 'கவித டிபார்ட்மென்ட்டிற்கு' டிரான்ஸ்ஃபர் செய்து விட்டது.
 மொக்க மொக்கயாக எழுத ஆரம்பித்து ஹோலிகிராஸ் கல்லுரியில்(பெண்கள் கல்லுரரி.பிரசித்தமான கல்லுரரியூம் கூட) கவிதைப் போட்டியில் பரிசு கிடைக்காவிடினும் அங்கு வந்த பெண்கள் என்னை ஒரு செலிபர்ட்டி போல கிட்ட வந்து பேசி விட்டு (கண்களால் அந்த பெண்கள் பேசியது அதிகம்.சொர்க்கம்!) செல்ல கவிதை பிய்த்துக் கொண்டு விட்டது.அப்புறம் எங்கே சென்றாலும் ஒரு குயர் நோட்டுப்புத்தகத்துடன் அலைய ஆரம்பித்தேன்.இதனைப் பார்த்து கறுவிக்கொண்டே இருந்திருக்கிறார் ரயில்வே மாமா.
 வீட்டுக்கு தெரியாமல் கவிதை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவது லோக்கல் கவியரங்கங்களுக்குச் செல்வது.மேடையில் உளறிக் கொட்டுவது என்று திரிந்து கொண்டிருந்தபோது சினிமா பக்கம் கவனம் திரும்பியது.மதுரையில் யாரோ விசயராஜ்னு ஒரு ஆள் இருக்காராம்.கருப்பா ரஜினி மாதிரி ஃபைட் எல்லாம் செய்வாராம்.அவரை புதுமுகமாக போட்டு சட்டம் ஒரு இருட்டறை என்று சிதம்பரம் என்று ஒருத்தர் படம் எடுக்கிறாராம்.திருச்சி புத்துரர் வண்டிஸ்டாண்டில் இருந்து உள்ளே சந்தில் நுழைந்தால் அந்த சிதம்பரம் சாரின் வீடு.அந்த படத்தில் எஸ்ஏ.சந்திரசேகரன் என்பவர் புது டைரக்டர் என்று ஜமால்முகம்மது கல்லுரியில் ஒரு தமிழாசிரியர்  சொல்ல எப்படியோ யாரையோ பிடித்து அந்த சிதம்பரம் என்ற தயாரிப்பாளரைப் போய் பார்த்து விட்டேன்.முத படம் தம்பி பார்த்து எழுதனும்.கதை டைரக்டரோடது.நீ வசனமும் ரெண்டு பாட்டும் எழுதிக் கொடு.உன் பேரை ஸ்கிரீன்ல போடறம்.ஆனா முத படம்.கொடுக்கறதை வாங்கிக்கனும் என்றார்.
 தலையாட்டி விட்டு சந்தோஷமாக வீட்டுக்கு வந்தால் - அப்போது செங்குளம் காலனியில் இருந்தோம்.மாடியில் வீடு.கீழே லுனா நின்றிருந்தது.ரயில்வேகார வில்லன் உள்ளே இருக்கிறார் போலிருக்கிறது.இந்தாளுக்கு எப்படி தெரியூம்?
சினிமா கினிமான்னு சுத்தினே வீட்டுக்கே வரக்கூடாது என்று வெளியே தள்ளி கதவை சார்த்தினார் அப்பா.அப்போதெல்லாம் தைரியம் கிடையாது.சர்த்தான் போய்யா.நான் சினிமா போய் சம்பாதித்து ஒரே பாட்டில் ஹீரோ ஆகி விடுகிறேன் என்றெல்லாம் போக தைரியமின்றி சத்தமில்லாமல் இரவூ முழுக்க அழுது கொண்டிருந்தேன்.அதே வடலுரரான் கம்பைன்ஸ் சிதம்பரம் தனது அடுத்தபடத்திற்கும் அழைத்தார்.இந்த முறை விஜயகாந்த் இல்லை.முதலில் சம்மதித்து பின் விலகியதால் கராத்தே ரமேஷ் ஒப்பந்தமாகியிருந்தார்.டைரக்க்ஷனும் எஸ்ஏசி இல்லை என்றார்கள்.இந்த முறை வசனம் & முழுபாடல்களும் நானே எழுதவேண்டுமென்றார்கள்.படத்தின் பெயர் நீரு பூத்த நெருப்பு.விஜயகாந்திற்காக வைக்கப்பட்ட டைட்டில்.அங்கேதான் குணச்சித்திர நடிகர் செந்தாமரை நியூமராலஜிப்படி என் பெயரை 'விஜயநிலா' என்று மாற்றினார்.இந்த முறையூம் ரயில்வேகாரர் வித்தையை காட்டி விட்டார்.எனது அப்பாவின் அம்மாவூம் முறை சேர்ந்து கொண்டு குடும்பகௌரவம் என்ற டெம்ப்ளேட் காரணங்கள் சொல்லி என் சினிமாக் கனவை வெட்டி ரோட்டில் வீசினார்கள்.
 அப்புறம் வீட்டுக்கு தெரியாமல் சென்னை ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டிற்கு காமராமேன் படிப்பிற்கு விண்ணப்பத்திருந்தேன்.அதனால் காமரா!டைரக்க்ஷன் படிக்க டிகிரி முடித்திருக்க வேண்டும்.இந்த செய்தி எப்படியோ லீக் ஆகி ரயில்வேகாரர் வரை செல்ல அந்த ரயில்வே மாமா மறுபடி சதி செய்தது.என்னை சென்னைக்கு அனுப்பினால் கெட்டு விடுவேன் என்றும் அங்கே சின்னப் பசங்களை நடிகைகள் வளைத்துப் போட்டு விடுவார்கள் என்றும் என் அப்பாவை மூளைச்சலவை செய்ததும் இல்லாமல் தன் மகன் புட் பாலில் தேறவில்லை என்றதும் என் மாமா ஒருத்தர் அப்போது ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார்.கலக்டராக எல்லாம் இருந்தவர்.அவரைப் பிடித்து தன் மகனை(அப்போது பழைய இயக்குநர் அமிர்தம்தான் இன்ஸ்டிடியூட் பிரின்சிபால்) இன்ஸ்டிட்டியூட்டில் சவூன்டு இன்ஜினியரிங்கில் சேர்த்து விட்டார்.அந்தப் பையன் ஒரு தத்தி.சினி ஃபீல்டில் தேறவேயில்லை.அதே ஐஏஎஸ் மாமாவின் சிபாரிசில் அதே இன்ஸ்ட்டிடியூட்டிலேயே ஆசிரியர் வேலை வாங்கிக் கொடுத்து செட்டில் செய்து விட்டு அப்புறம் பலவருடங்களுக்குப் பிறகு செத்துப் போனார்.
 ஆக கிரிக்கெட் போய் சினிமாவூம் போனது என்பதால் எனக்கான அடையளாத்தை தேடிக்கொள்வதற்காக கதைகள் எழுத ஆரம்பித்தேன்.எல்லோரும் லவ் ஃபெயிலியர் என்றால் கவித எழுதுவார்கள்.நான் ட்ரீம் ஃபெயிலியர் என்பதால் கவிதையை கை விட்டேன்.பத்திரிகைகளுக்கு வீட்டிற்கு தெரியாமலே எழுதி வந்தேன்.கதை பிரசுரமாகி சன்மானம் மணியார்டரில் வந்தால் போஸ்ட்மேனை தெருவிலேயே மடக்கி வாங்கி விடுவேன்.அப்படியூம் குமுதத்திலிருந்து வந்திருந்த சன்மான செக் என் அப்பாவின் கையில் மாட்டி விட மறுபடி குடும்ப கௌரவ டெம்ப்ளேட் காரணங்கள் சொல்லி அடிபட்டேன்.
 இப்போது என்னால் கிரிக்கெட்டிற்கு செல்ல முடியாது.பிரின்ட் மீடியாவின் நீட்சி அவ்வளவூ ஹெல்த்தியாக இல்லை.ஆனால் சினிமா?
 அதுதான் என் கனவூ.
 சினிமாதான் என் வாழ்க்கை என்று புரிகிறது.
 சினிமாவில் வாழ்வதற்கான வாழ்க்கைக்காக காத்திருக்கிறேன்.
 வாய்ப்புகள் வராமலா போய்விடும்.
 வரும்.
 காத்திருப்போம்.
 இன்று இது குறித்த சிந்தனையைக் கிளறி விட்ட மாணவர் சண்முகநாதனுக்கு நன்றியூம் அன்பும்.
Previous
Next Post »