தைப்பொங்கல்


 எழுத்தாளர்கள் பந்தாடப்படுகிறார்கள்.பத்திரிகையாளர்கள் அவர்கள் தவறு செய்தால் அது தவறில்லை.ஆனால் எழுத்தாளன் தவறு செய்தால் மிக அதிகமாக கோபப்படுகிறார்கள் என்றொரு எழுத்தாளர் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார்.
 முதலில் எழுத்தாளன் என்ற வார்த்தையை தடை செய்ய வேண்டும்.எழுத்தாளன் என்பவன் எழுத்தை ஆள்பவன்.என்றைக்கு எழுத்தாளன் எழுத்தை ஆள்பவனாக இருந்திருக்கிறான்.மன்னர் காலம் தொட்டு காலம் காலமாக பல்லை இளித்து பாடல் பாடி பரிசில் பெற்று வயிறு வளர்த்தவனே எழுத்தாளன் என்பதால் இனி 'எழுத்துக் கூலி" என்று அழைப்பதுதான் பொருத்தமான இருக்கும்.சகலதுறையையூம் விட்டு வைக்காமல் 'எப்படி" என்ற தலைப்பில் புத்தகம் போடும் பதிப்பகத்தில் எழுதும் எழுத்துக் கூலிக்கு ஒரு ஃபாரத்திற்கு(ஒரு ஃபாரம் என்றால் 16 பக்கங்கள்) என்று எண்ணி கால் கடுக்க நிற்க வைத்து விளிம்பு நிலை மனிதர்களுக்கு இனாம் கொடுப்பதைப் போல கொடுத்து கணக்கு தீர்த்து அனுப்பி விடுவார்களாம்.அந்த பதிப்பகத்தில் நான் காசு வாங்கிக் கொண்டுதான் புத்தகம் எழுதிக் கொடுத்தேன் என்பது வேறு கதை.
 இரு பத்தாண்டுகளுக்கு முன்னால் ரொம்ப முன்னால் ஒரு பெரிய வாரஇதழின் சைடில் உள்ள சின்ன வாரஇதழில் ஒரு இளைஞர் ஆசிரியராக இருந்தார்.அவரிடம் ஆர்வமாக ஓடிப்போய் தொடர்கதை எழுத வாய்ப்பு கேட்பேன்.அப்போது அவர் சொன்ன பதில் ஒரு பாடம்.இன்னும் நன்றாக நினைவிருக்கிறது.
'தபாருங்க விஜயநிலா.நீங்க இப்ப புதுமுகம்.நாங்களா யாருக்கும் வாய்ப்பு தரமாட்டம்.நீங்க வேற பத்திரிகையில எல்லாம் போய் எழுதிட்டு உங்க பேர் வெளியில தெரிய ஆரம்பிச்சா அப்பதான் நாங்க போடுவம்"
அதாவது உனக்கு வாய்ப்பு கிடையாது.உன் பேரைப் போட்டா விக்கும்னா எதை வேண்டுமானாலும் எழுது போடறம்.இதுதான் சாராம்சம்.நானும் சிரமேற்கொண்டு இந்த கருத்தை எடுத்துக் கொண்டு மற்ற பத்திரிகைகளில் முயற்சி செய்வேன்.டைம்டேபிள் வைத்துக் கொண்டு எழுதுவேன்.மாதம் ஒரு முறை சென்னை வந்து பத்திரிகை அலுவலங்களுக்கு சென்று பார்த்து வருவேன்.அப்படிப்பட்ட முயற்சியில் சத்யா ஸ்டுடியோவில் தாய் வாரஇதழ் இருந்தது.அங்கே போனபோது புரட்சித்தலைவரின் வளர்ப்பு மகன் அப்பு என்கிற ரவீந்திரன் 1990ம் ஆண்டு பொங்கல் இதழில் எனக்கு ஒரு க்ரைம் தொடர் எழுத வாய்ப்பு கொடுத்தார்.
உடனே ஓடினேன் அந்த பத்திரிகை ஆசிரியரிடம்.
அவர் சொன்னார்.இது பத்தாது.இன்னும் பெரிய பத்திரிகையில வரனும்.
பெரிய பத்திரிகைன்னா?
அவரே சொன்னார்.நிறைய காப்பி விக்கனும்.உதாரணமா தினமலர் வாரமலர் மாதிரின்னார்.போதாதா தினமலர் வாரமலருக்கு படைப்புகள் அனுப்பி படைப்பு யூத்தம் துவங்கினேன்.கோயமுத்துரரில் க்ரைம்கதை மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் வாசகர் பேரவையின் 5வது ஆண்டுவிழா அதே 1990ல் நடக்க அங்கே போனபோது வாரமலர் அந்துமணி அவர்களின் அறிமுகம் கிடைத்தது.அதன்பின் தினமலர்-கதைமலர் இதழில் தொடர்ந்து சிறுகதைகளும் அதையடுத்து 1992ல் ஒரு க்ரைம் தொடரும் வந்தவூடன் மறுபடியூம் மடவாத்து போல அதே கண்ணாடிக்கார ஆசிரியரிடம் போய் காட்டினேன்.
போதாது.வாரமலர்லயே வரனும்.அப்பதான் எங்க இனிப்புப்பத்திரிகையில போடச் சொல்ல முடியூம் என்றார்.மறுபடியூம் உழைப்பு.நம்பிக்கை.விடாமுயற்சி.
வாரமலரில் எனது முதல் தொடர்கதை வந்தே விட்டது.இப்போது போய் கேட்டால் அந்த ஆசாமி சொன்னார்.
இன்னும் மைலேஜ் வேண்டும்.பேனாவில கேஸ்ட்ரால் போட்டு எழுதுங்க.மாதநாவல்ல எல்லாம் பேர் வரனும்.
மாதநாவல்னா பாக்கெட் நாவல்தானே.அங்கே போய் கேட்டால் அது வேறு கதை.ஹைப்பர் பிபிக்கே ஹைப்பர் பிபி வந்த மாதிரி சீறுவார் பா.நா.அசோகன்.அவரிடம் தொடர்ந்து சிறுகதைகள் அனுப்பி அப்புறம் பாக்கெட் நாவலிலும் என் நாவல் வர மறுபடி போய் இனிப்புப்பத்திரிகை ஆசிரியரிடம் போய் கேட்டால் அவர் சொன்ன பதில் பெரும் அதிர்ச்சி.
நானெல்லாம் சொன்னா எங்க போர்டுல கேட்க மாட்டாங்க.
பின்ன எதுக்கய்யா இத்தினி தரம் அலைய விட்டே.பேசாமல் இந்தாளிடம் ஒரு டேர்ம்ஸ் பேசி லம்ப்பா லஞ்சமா ஏதாவது கொடுத்திருக்கனும் என்று தோன்றிதை  வாய் வரை வந்து சொல்லாமல் வந்து விட்டேன்.
 இந்த மனிதர் பற்றி இப்போது ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.
 இவர் ஒரு உலகமகா தீர்க்கதரிசி.
 கணிப்புச் செம்மல்.
 இவரது இனிப்புப்பத்திரிகையில் இவர் ஒரு தரம் கேள்வி பதில் எழுதியிருந்தார்.அது 1980களில் அப்போது நான் பள்ளி மாணவன் என்றாலும் இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது.
 கேள்வி இதுதான்:நேற்று எம்ஜிஆர் - சிவாஜி.இன்று கமல்-ரஜினி.நாளை யார்?
 இதற்கு இந்த மாமனிதர் எழுதிய பதில் இதுதான்.
 நாளை சக்கரவர்த்தி-ராஜேஷ்.
 அப்போது சக்கரவர்த்தி ராஜேஷ் போன்றவர்கள் தைப்பொங்கல் போன்ற படங்களில்(தைப்பொங்கல் என்றதும் ஆஆஅ.ராஜா படத்தில் சந்தானம் பரிந்துரைத்த தைப்பொங்கல் படத்தின் ஞாபகம் வருகிறதா? சக்கரவர்த்தியூம் நடிகர் ராஜேஷூம் அருமையான நடிகர்கள்தான்.அவர்களது திறமையை நான் குறைத்து மதிப்பிடவில்லை.நான் சொல்ல வருவது நாளைய பிரான்ட்டுகளாக நாளைய மார்க்கெட் லீடர்களாக இவர் குறிப்பிட்டு கணிக்கும் திறமையைப் பற்றி.
 அட அடாசுப் பையா.
 உன்னிடம் வந்து அலைந்ததே தவறு.பேசாமல் ஏதாவது சினிமா கம்பெனியில் போய் டீகிளாஸ் கழுவியிருந்தால் இந்நேரம் எதையாவது சினிமாவில் கற்றுக் கொண்டிருந்திருக்கலாம்.சாதித்தும் இருந்திருக்கலாம்.
 அப்புறம் என்னை எழுத்துலகத்திலிருந்து வீழ்த்தும் முயற்சியாக ஒரு எழுத்தாளர் முயன்றார்.அவருக்கு கை கொடுத்தது ஒரு வதந்தி.எதேச்சையாக ஒரு மாதநாவலில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு உதவி ஆசிரியரிடம் ஒரு கேள்வியைக் கேட்டு விட்டேன்.நமக்கு நாக்கில்தானே திருநள்ளாறு!
 இந்த மாதிரி மாதநாவல் கொண்டு வர்றது ரொம்ப ஈசி போலருக்கே.ஒரே ஒரு கதைதான்.அதுக்கு ஒரு ரைட்டர் கிடைச்சுர்றார்.அட்டைப்படத்துக்கு ஏதுhவது ஃபாரின்புக்ல இருந்து எடுத்துப் போட்டுக்கலாம்.அச்சடிச்சு வாழைப்பழம் மாதிரி பெட்டிக்கடைகள்ல தொங்கிட்டுட்டா போதும்ல.
 அந்த ஒடிசலாக இருந்த பையன் என்னை ஒரு மாதிரி பார்த்த பார்வை எனக்கு அப்போது புரியவில்லை.மிக அழகாக லேசர் வெல்டிங் செய்து விட்டான்.
 எனக்கு வாய்ப்பளித்த நாளிதழின்; இணைப்பிதழ் ஆசிரியர் அந்த பெரிய மாதநாவல் ஆசிரியர் மற்றும் அந்த கணிப்புத்திலகம் ஆகிய மூன்று பேரும் எப்போதும் ஒன்றாகச் சுற்றுவார்கள்.
 ஒரு எழுத்தாளக் கூலிப் பய பத்திரிகை ஆரம்பிக்கப்போகிறானாம்.இவனை வளர விடலாமா?போட்டு அமுக்கு என்று கண்சிமிட்டி விட்டார்கள்.இது தெரியாமல் நான் சென்னையில் ஒரு இன்டர்வ்யூவிற்கு (இன்ஜினியரிங் தொடர்பான வேலைக்கு.பத்திரிகையில் அல்ல) சென்றபோது திருவல்லிக்கேணியூம் ராயப்பேட்டையூம் சந்தித்துக் கொள்ளும் ஒரு இடத்தில் இருந்த உறவூக்கார பாடாவதி ஆசாமியின் வீட்டில் தங்கியிருந்தேன்.பக்கத்தில் பொடி நடையாக நடந்தால் திருவல்லிக்கேணியில் மாதநாவல் ஆபீஸ்களாக வரும்.வழியில் இருந்த அந்த மாதநாவல் ஆபீசில் போய் பார்த்தபோது அந்த 'படுபாவி'ப்பையன் என்னைப் பார்த்து சூப்பராகச் சிரித்தான்.பற்ற வைத்து விட்டேன் என்று.அப்போதும் புரியாமல் அவரிடம் பேசி விடைபெற்று விட்டு அந்த பெரிய மாதநாவல் ஆசிரியரைப் போய் பார்த்தேன்.முகவாயை சொறிந்தபடியே மிகவூம் விழித்து விழித்து பேசினார்.ரொம்பவூம் யோசித்தார்.விடைபெற்று கிளம்பியபோது நானும் வர்றேன்.நீங்க போற பக்கம்தான் போகனும்.ஆட்டோல போலாம்.ஜீப்பை சர்வீசிற்கு விட்டிருக்கேன் என்றார்.அப்போது பச்சைக்கலரில் மாருதி ஜிப்ஸி வைத்திருந்தார் அவர்.
 நானும் எதார்த்தமாக அவருடன் கிளம்பி நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்தால் இங்கே ஏதாவது நான் மாதநாவல் ஆபீஸ் போட்டிருக்கிறேனா என்று வேவூபார்ப்பதற்காக வந்திருக்கிறார் என்பது என் மடபுத்திக்கு அப்புறம்தான் உரைத்தது.
 இன்னொரு சமயம்.
 ஒரு கடிதம் வந்திருந்தது எனக்கு.
 அதன் சாராம்சம் இதுதான்.
'விஜயநிலா.
நீங்கள் வாய்ப்பு கேட்டு அடிக்கடி கடிதம் எழுதுவதை தவிருங்கள்.கணவனாகிய என்னிடம் மனைவியாக நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டால் வாய்ப்புகள் தானே தேடிவரும்' என்று தன் லெட்டர் பேடில் தன் கைப்பட கடிதம் எழுதி கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார்.இந்த கடிதத்தின் ஸ்கேன் காப்பி பத்திரமாக இருக்கிறது.இதனை வெளியிட விரும்பவில்லை.காரணம் இந்த மாதநாவல் ஆசிரியர் இப்போதும் முகப்புத்தகத்தில் என் நண்பர்கள் பட்டியலில் இருக்கிறார்.
என்னது கணவனான அந்த ஆளிடம் மனைவியாக நானா?
டேய் நானும் ஆம்பளைடா..சும்மா எழுதியிருந்தாரா இல்லை ஒருவேளை நிசமாகவே அந்த ஆளு 'அவனா நீ' டைப்பாக இருக்குமா?
 போங்கடா நீங்களும் உங்க இலக்கியமும் நாவலும் என்று என் டைப்ரைட்டரை(அப்போது கம்ப்யூட்டர் கிடையாது.தட்டச்சுதான்) பேரிச்சம்பழக்காரனுக்குப் போட்டு விட்டு மைக்கள்டக்ளஸ் படத்திற்குப் போய் விட்டேன்.டிஸ்க்ளோஸர்.ஷாரன்ஸ்டோன்.படமும் 'கணவனாகிய என்னிடம் மனைவியாக நீ" டைப் படம்தான்.ஆனால் பெண்ணுக்கும் ஆணுக்கும் டீல்.
 அன்று எறிந்தவன்தான்.
 அப்புறம் எழுதவேயில்லை.
 மூன்று மாதம் முன்பாக எதேச்சையாக முகப்புத்தகத்தைப் பார்த்தபோது பழை நட்புகளின் முகங்கள் தெரிய மறுபடி உள்ளே வந்தேன்.இப்பவூம் எழுதலாமா தொடர்ந்து என்று தயக்கமாக இருக்கிறது.
பின்குறிப்பு:
இன்னொரு பத்திரிகையில் ஆம்ப்ரோ பிஸ்கெட் ஆசாமியால் அலைக்கழிக்கப்பட்ட கதை விரைவில் தனிப்பதிவாக வெளிவரும்.
Previous
Next Post »