'எதையூம் யோசிக்காமல்
கண்களை மூடிக்கொண்டிருந்தால் கூட
வந்து
அமர்ந்து விடுகிறாய்
மனதிலும் மனதினுள்ளே மடியிலும்
ஞாயிறுகளில்
எந்த சேனலை வைத்தாலும்
கைகள் ரிமோட்டை அநிச்சையாய்
அழுத்திக் கொண்டே இருப்பது
வேறு சேனல்களை பார்ப்பதற்காக அல்ல
அடுத்தடுத்த சேனல்களின் பின்னால்
உன் முகத்தை
எங்கேனும் காண முடியூமா என்ற
ஆதங்கத்தினால்தான் என்று
புரிந்த சமயத்தில்
மனதில் ஏதோ கேட்டது
ரிமோட்டை எதற்கு பாடாய்படுத்துகிறாய்
என்று
உன் வீட்டில் யாரோ

திட்டிக்கொண்டிருப்பது...'

'நீ பேசாதபோது கூட
வருத்தமேதும் ஏற்படுவதில்லை
உன் கண்கள்
மௌனமாக இருப்பதைத்தான்
எப்போதும் தாங்கிக்கொள்ள முடிவதில்லை
நீ வருவதே தெரியாமல்
வருவாய் வந்து நிற்பாய்
நீ வந்திருப்பதை
சன்னல் குருவிகளும் பட்டாம்பூச்சிகளும்
சொல்லிவிடும்
ஆனால்
நீ வந்திருப்பதை
சிறு செருமலில் நீயே சொல்லிவிடுவாய்
ஆனால்
கோபமென்று மனதால் விலகி நிற்பாய்
அதைத்தான்
அவ்வப்போது தாங்கிக்கொள்ள முடிவதில்லை
எத்தனை
கோபம் வந்திருந்தாலும்
முடிவில் தோற்பது
நீயா நானா என்றே தெரியாமல்
பார்வைகள் கை குலுக்கிக்கொள்ள
புன்னகைகள் பரிமாறிக்கொள்ள
கம்பீரமாய்
திரும்பிச் செல்வாயே
எத்தனை தரம் வேண்டுமானாலும்
காத்திருக்கலாம்
இந்த ஒரு தருணத்திற்காக'


'அப்புறம் ஒருநாள்
மழை வந்தது
மழை வருவதற்கு முன்னால்
காற்றும் வந்தது
காற்று வரும்போதே
மேகங்களும் வந்திறங்கின
வண்ணத்துப்பூச்சிகளும்
அங்கே வரிசை கட்டி நின்றன
சின்னதாய் ஒரு துரறல்தான்
திடீரென்று
முத்தமிட்டு விட்டதுபோல்
புல்வெளிகள் சிலிர்த்து நின்றன
மத்தியான வேளையில்
முன்பெல்லாம்
எங்கிருந்தோ குபுக்கென்று கிளம்பிவரும்
ஃபில்டர் காபி வாசம் போல
கொஞ்சம்
மண்வாசனையூம் வந்து கிடந்தது
ஏனிந்த மாற்றமென்று
உற்று நோக்கினேன்
டிவியில் சொல்லிக்கொண்டிருந்தார் ரமணன்
கடலுக்குச்செல்லும் வழியில்
1ம் நம்பரோ 2ம் நம்பரோ இல்லை
மொத்தமாக
143 எண்ணில் கொடியை
பறக்க விட்டுள்ளனராம்
ஏனெனில்
அவள்
இன்றைக்கு அந்த வழியேதான்
வருகிறாளாம்
மழையில் நனைவதென்று
வெளியே வந்து
காத்திருக்க ஆரம்பித்தேன்'
Previous
Next Post »