ரிப்பீட்டு....ரஜினி சொன்னபடி...



  தெரிந்தோ தெரியாமலோ பொருளாதாரத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்ட பணியில் இருப்பதால் கண்ணெதிரில் நடக்கிற சில கண்ணுக்குத் தெரியாத நிகழ்வூகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.அவற்றில் ஒரு கவலைதான் அவர் எந்த நாடுகளுக்கு வேண்டுமானாலும் போய் வரட்டும்.ஆனால் இந்தியாவின் கோர்ப்பசேவ்வாக மாறிவிடக்கூடாதே என்று நினைக்கத் தோன்றுகிறது.
  இந்த 2016ம் ஆண்டைப் பற்றி பலரும் பலவிதமான ஜோசியங்கள், ஆருடங்கள் எல்லாம் சொல்லி முடித்தபின்புதான் இந்த டாபிக்கைத் தொட வேண்டுமென்று பொறுமையாக இருந்தேன்.இருபது ஆண்டுகளுக்கு முன்னால் மாணிக்பாட்ஷா பாடியது நினைவூக்கு வருகிறதா?
 எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ என்று.
 அந்த எட்டு ஃபேக்டர் இப்போது வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது.சுருக்கமாகச் சொன்னால் இந்த 2016ம் ஆண்டு கிட்டத்தட்ட 2008ம் ஆண்டை ஒத்திருக்கிறது.நடக்கிற சம்பவங்களும் அதே போன்று நடக்கிறது.என் சொந்த வாழ்விலும் 2008ம் ஆண்டு இப்போது ரிப்பீட் ஆகிக் கொண்டிருக்கிறது.
 நீங்கள் கூட கொஞ்சம் ரிவர்ஸ்கியரில் பின்னுக்குப் போய் 2008ம் ஆண்டில் உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கொசுவர்த்தி சுழற்றிப் பாருங்கள்.ஏதாவது ரிப்பீட் விஷயம் நடக்க ஆரம்பித்திருக்கலாம்.உதாரணமாக 2008ம் ஆண்டு உங்களிடம் 'ஐ ஹேட் யூ ஐ ஹேட் யூ' என்று பிரிந்து போன காதலி இப்போது அகஸ்த்மாத்தாக எங்காவது வழியில் சந்தித்து மறுபடியூம் ஐ ஹேட் யூ சொல்ல ஆரம்பிக்கலாம்.எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் அலுவலகத்தில் தானாக கிடைத்த பிரமோஷன் மாதிரி இப்போது ஒரு பிரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்கலாம்.2008ல் நடந்த விபத்தில் தப்பிப்பிழைத்திருந்தீர்களானால் அதே போன்ற ஒரு விபத்து இப்போதும் எட்டிப் பார்க்கலாம்.
 இந்த வருடம் அமெரிக்காவின் வேலையில்லாத்திண்டாட்டம் குறைந்து கொண்டு வருகிறது.நாடு சுபிட்சமாக இருக்கிறது.ஃபெட் ஓப்பன் கமிட்டி மறுபடி  வட்டி விகிதம் உயர்த்த தயார் என்பது போன்ற ஒப்பனை தடவிய வேஷம் கலைந்து போய் அதன் பொருளாதார வீழ்ச்சி வெளிஉலகிற்கு தெரியவரும்.சீனாவே பரவாயில்லை என்கிற அளவிற்கு அருகிலுள்ள ஒன்றிரண்டு ஆசிய நாடுகள் கவிழும்.நம்ம நாட்டில் ஜல்லிக்கட்டு பசுவதை தடுப்பு என்று தகடு தகடு பண்ணிக் கொண்டிருந்தாலும் இந்த வருடம் பின்வரும் விளைவூகள் இருக்கப்போகின்றன.

1.சாப்ட்வேர் ஆசாமிகள் குறைந்தது இரண்டு லட்சம் பேருக்காவது வேலை பறிபோகும் -சரியான ப்ராஜக்ட்டுகள் கிடைக்காததால்.
2.மருந்து விலைகள் முக்கியமாக உயிர்காக்கும் மருந்துகளின் விலைகள் இன்னும் 30 முதல் 40 சதவீதம் ரகசியமாக விலையேற்றப்படும்.இது குறித்து எந்த ஊடகமும், சமூக ஆர்வலரும் வாய் திறக்கமாட்டார்கள்.
3.வருந்தி வருந்தி அழைத்தாலும் வோட்டு போட மக்கள் வரமாட்டார்கள்.வோட்டுகளின் விலை தாறுமாறாக எகிறும்.
4.பூமி அதிர்ச்சியோ சுனாமிக்கு நிகரான இயற்கைப் பேரிடரோ வந்து தாக்கும்.
5.வங்கிகள் திவாலாகும்.
6.டிராப் அவூட் என்று சொல்லப்படும் விதத்தில் முதியோர்களையூம் நோயாளிகளையூம் அவர்கள் வாரிசுகளே வெளியூர்களில் கொண்டு போய் நிர்க்கதியாக விட்டு விட்டு ஓடி வரும் நிகழ்ச்சிகள் சர்வசாதாரணமாகும்.
7.பத்திரிகைகளை யாரும் காசு கொடுத்து வாங்க மாட்டார்கள்.விற்பனை சரிந்து இலவசமாகக் கொடுப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை யோசிப்பார்கள்.
8.குடும்பஸ்தர்களின் செலவினங்கள் இப்போதுள்ளதை விட அவரவர் அளவில்  60 சதவீதம் கூடுதலாக அதிகரிக்கும்.
9.புதிய தலைமை புதிய ஆட்சி என்று மக்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் இதே அரசியல்வாதிகளை அப்படியே வைத்துக் கொள்ளவே விரும்புவார்கள்.
10.திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியிடாமல் வேறு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும்.மால்களும்,சினிப்ளக்ஸ்களும் வேறு வழியில்லாமல் மூடப்படும்.
 மொத்தத்தில் 2016 என்பது சோதனையான வருடம்.ஒரு நிதிச்சுனாமி வந்து கொண்டே இருப்பது மிகச்சரியாகத் தெரிகிறது.ஆனால் மக்கள் இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் பொங்கல் பட்டிமன்றத்தில் சிரித்துக் கொண்டும் சினிமா பார்த்து சீரியல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.அவர்களுடன் கூடவே சிரித்துக் கொண்டிருக்கிறது 'விதி' என்று அறியாமல்.
 வாழ்ந்துத் தொலைப்போம் இந்த 2016ம் வருடத்தை.வேறு வழி?
Previous
Next Post »