என்னது லியோனி செத்துவிட்டாரா?



 இந்த நிமிடம் நீங்கள் உங்களது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருக்கக்கூடும்.அல்லது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு செல்லும் வழியில் டிராஃபிக் நெரிசலில் பூச்சி மாதிரி நகர்ந்து கொண்டிருக்கக் கூடும்.அப்போது உங்கள் மனதில் என்ன இருக்கும் என்று பாருங்கள்.உங்களது வீடு பத்திரமாக இருக்கிறது.மனைவி குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்கள்.ஆபீசில் உங்களது வேலை பத்திரமாக இருக்கிறது.அடுத்த மாதம் சம்பளம் வந்ததும் கார்டை செமயாக தேய்த்து விடலாம் என்பது போன்ற சாமானியனின் நம்பிக்கை எதனால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.உங்களது வீட்டில் உள்ளவர்கள் உங்களை நம்பி இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கிறீர்கள்.சாயந்தரம் ஆபீஸ் வேலை எல்லாம் முடிந்து வீடு திரும்பியதும் கதவைத் தட்டப்போகும்போதே கதவூ திறந்து கொள்ள உள்ளேயிருந்து முன்டா பனியன் பூப்போட்ட டவூசருடன் ஒருத்தன் உங்கள் வீட்டில் நிற்கிறான்.உங்கள் அன்பே அன்பான மனைவி அவனுக்கு தேங்காய்சட்னியூடன் பஜ்ஜி சுட்டுப் போட்டு அவன் கன்னத்தைக் கிள்ளுகிறாள்.அவன் அவளை வேறு இடத்தில் கிள்ளுகிறாள்.உங்களைப் பார்த்ததும் அலட்சியமாத் திரும்பி-
"யாருய்யா.முப்பாத்தமன் கோவிலுக்கு கூழ் ஊத்த டொனேஷனா.தரமுடியாது.பிசியா இருக்கேன்.பார்த்தில்ல கிள்ளினதுக்கே சிணுங்கறா.அடுத்த வேற இடத்துல ........னும்";(வேணும்னா பீப் சத்தம் போட்டுக்கங்க) என்று சொல்ல உங்கள் மனைவி உங்களைப் பார்த்து-
"யாருங்க இந்த ஆள்...லவ் பண்ணத் தெரியாத உதயநிதி ஸ்டாலின் மாதிரியே இருக்கான்"என்று கதவைச் சார்த்தினால் என்ன தோன்றும்.அத்தனை நம்பிக்கைகளும் சரியூமில்லையா.
 மேற்படி சீன் கூட தமிழ்ல ஃபெரடரிக் ஃபார்ஸைத் போல ஜல்லியடித்துக் கொண்டிருந்த எழுத்தாளரின் நில்லுங்கள் ராசாவே கதை போல இருக்கிறதல்லவா.
 தட்ஸ் இட்.
 வீடு பத்திரமான இடம்.அது உங்களது வீடு.உங்களது மனைவி என்பது நிஜம் அல்ல.அது உங்களது நம்பிக்கை.தினப்படி அந்த வீட்டில் வசிப்பது உங்கள் மனைவியூடன் அந்தாள் போல கிள்ளவோ லவ்வவோ செய்தது இதனால் உங்களது மனதில் உங்களது வீடு பற்றியூம் உங்கள் மனைவி பற்றியூம் பதிவூ செய்யப்பட்டிருப்பவை எல்லாம் வெறும் டேட்டாக்கள்.அதாவது செய்திகள்.
 சரி இப்போது மேட்டருக்கு வருவோம்.மேட்டர் என்பது ரொம்பத் தப்பான வார்த்தையாகிப் போனது கூட செய்திகளின் அடிப்படைதான்.காளை மாட்டை ஓடவிட்டுப் பாயலாமா வேண்டாமா என்பது கூட செய்திதான்.நாளைக்கு காளை மாடு பழசாகிப் போய் வேறு செய்தி உங்களைப் பிடித்துக் கொள்ளும்.
 உலகைப் பொறுத்தவரை அத்தனை பேருக்கும் அசுரப்பசி என்பது செய்திகளை அள்ளி மூளைக்குள் திணித்துக் கொள்வதில்தான் இருக்கிறது.சென்னை வெள்ளத்தின் போதாவது சோஷியல் நெட்வொர்க்கிலிருந்து வெளியூர் ஆட்கள் தொடர்பு கொண்டார்கள்.யாரும் உங்களை தொடர்பு கொள்ள முடியாது.நீங்களும் யாரையூம் தொடர்பு கொள்ள முடியாது என்ற நிலை வந்தால் உங்களுக்கு என்ன ஆகும்.நிச்சயமாக பைத்தியம் பிடிக்கும்.இதையே வேறு மாதிரியூம் யோசிக்கலாம்.செய்திகள் வந்து குவிந்து குவிந்து ஒரே மாதிரியான செய்திகளே வந்து அலுப்புத் தட்டுவது போல அமைந்து விட்டால் உதாரணமாக நீயாநானா நேர்படபேசு அஞ்சனாரங்கன் ராதிகா சீரியல் போல திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக மொனாடனஸாக அமைந்து விட்டால் அப்போது புதவிதமான செய்தி எங்கே எங்கே என்று கேட்டு உங்களது மூளையில் அரிப்பெடுக்கும்.மீடியாக்களுக்கும் இந்த அரிப்பு இருக்கிறது.அதனால் செய்திகள் வந்ததும் மிளகாபஜ்ஜி போல பரபரவென்று செய்திகளை விற்றுத்தீர்ப்பதில் அவசரம் காட்டகிறார்கள்.இப்போதெல்லாம் அலுவலகக் கான்ட்டீனிலும் டீக்கடைகளிலும் அது பஜ்ஜியா போன்டாவா என்று தெரியாத ஏதோ ஒரு ஹைபிரிட் வஸ்துவை கடித்துக் கொண்டே யாரும் லோக்கல் சானலையோ மியூசிக் சானல்களையோ போடுப்பா என்று சொல்வதில்லை.நியூஸை போடுப்பா.த்தாரி..நேத்திக்கு அந்த சேனல்ல வேற மாதிரி பேசினான்.இன்னிக்கு இந்த சானல்ல வந்து என்ன பேசுதுபாரு பயபுள்ள.திரியறான்கடா விவாதம் பண்ணியே சாவேன்னு...என்ற கடுப்புடன்தான் அமர்கிறார்கள்.
 எந்த மாதிரி செய்திகளை மக்கள் விரும்பிப்படிக்க விரும்புகிறார்கள் என்ற ரகசியம் தெரிந்து விட்டால் மீடியாக்கள் இது போல மொன்னை செய்திகளை திரித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.மக்கள் என்ன மாதிரி செய்திகளை விரும்புகிறார்கள் என்று எந்திரத்தனமாக எழுதுவதற்கு இப்போது வழி வந்து விட்டது.
 அதாவது செய்திகளை அல்காரிதம் கொண்டு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி எழுதவது.
 அல்காரிதம் என்றால் பெரிய க.சூத்திரம் இல்லை.இதை இதை என்ன முறையில் இந்த வரிசைக்கிரமத்தில் செய்து முடிக்க வேண்டுமென்று கம்ப்யூட்டரை தாஜா செய்யப்படுத்தும் எழுத்துமுறை.ஒரு ப்ளானிங் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
 லியோனி செத்துவிட்டார் என்று எவனாவது வாட்ஸ்அப்பியிருந்தாலோ சன்மியூசிக் அஞ்சனா ரங்கன் நாட் இம்ப்ரஸிவ் என்று பேஸ்புக்கில் எவனாவது அதிகம் சலம்பியிருந்தாலோ அதன் ஹிட்ஸை கணக்கில் வைத்துக் கொண்டு லியோனியையூம் அஞ்சனாவையூம் பற்றி தலா ரெண்டு ரெண்டு பத்தி செய்தியை கம்ப்யூட்டரே எழுதி விடும்.ரிப்போர்ட்டர் வேண்டாம்.தமிழில் எழுதும் செய்தியை சரிபார்த்து பிடிவாதமாய் ரிஜெக்ட் செய்யூம் மலையாள சீஃப் ரிப்போர்ட்டர் வேண்டாம்.அதற்கும் மேலே உட்கார்ந்து கொண்டு அட்டுழியம் செய்யூம் வடக்கத்திய சீஃப் எடிட்டர் ஆசாமியூம் வேண்டாம்.கம்ப்யூட்டரே சரிபார்த்து கம்போசிங் செய்து அச்சுக்கோ நெட்டிற்கோ அனுப்பி விடும்.
 சிகாகோவில் நரேட்டிவ் சயின்ஸ் என்றொரு பத்திரிகை போன்ற நிறுவனம் இருக்கிறது.இவர்களிடமுள்ள கம்ப்யூட்டர்கள் நெட் வழியாக உலகை அலசி ஆராய்ந்து ஒவ்வொரு முப்பது வினாடிகளுக்கும் பிரபலமாக உள்ள சப்ஜக்ட்டை எடுத்து அந்த சப்ஜக்ட்டில் செய்தியை எழுதி விடுகிறது.
 டென் ஸ்போர்ட்ஸ் போன்ற சானல்கள் இவர்களது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.இந்த நிறுவனத்தை துவங்கி நடத்துபவர் கிறிஸ்டியன் ஹேமன்ட்.(ஹேமந்து என்று இந்தியப் பெயராக வாசித்த விடாதீர்கள்) இவர் 1980களிலேயே இதற்கான ஆதர்ச எண்ணத்தை மனதில் வைத்திருந்தார்.அப்போதுதான் ஆர்ட்டிபிஷல் இன்டலிஜன்ஸ் பற்றி லேசாக யோசிக்க ஆரம்பித்திருந்தார்கள்.யேழ் யூனிவர்சிட்டியில் ரோஜர் ஷாங்க் என்ற ஏஐ (AI) புரொபசரிடம் இது பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்.ஆர்ட்டிபிஷல் இன்டலிஜன்ஸ் என்பது அதன்பின் 1990களில்தான் ஆதர்சமாகி பலராலும் பேசப்பட்டு தோற்றது.நான் கூட 1990 காலகட்டத்தில் ஒரு டாக்டரை அப்படியே நகர்த்தி விட்டு அவரது மூளையிலிருக்கும் அறிவையூம் அனுபவத்தையூம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி கம்ப்யூட்டரை டாக்டராக்க முடியூமா என்று ஆய்வெல்லாம் செய்து ப்ராஜக்ட் ரிப்போர்ட் சமர்ப்பித்திருந்தேன்.நம்ம ஊர் அறிவியல் அரசியல் தெரிந்ததுதானே.நான் சொம்படிப்படிவர்கள் மரபில் வந்தவனில்லை என்பதால் அந்த ஆராய்ச்சி அத்துடன் செத்தது.
 லீவிட்.அது போகட்டும்.கூகுளின் அட்வர்ட் விளம்பரங்கள் கூட இதே அடிப்படையில்தான் செயல்படுகிறது.நீங்கள் என்ன தேடுகிறீர்களோ அது தொடர்பான விளம்பரங்களைக் கண்ணில் காட்டி டபுள் க்ளிக் செய்ய வைத்து காசு பார்ப்பது.இதுவூம் அல்காரிதமிக் முறையிலான விளம்பர வெளியீடுதான்.இதனை ஸ்டூவர்ட் ஃப்ரங்கல் என்பவர் ஒரு ஆன்லைன் விளம்பர நெட்வொர்க்கில் பயன்படுத்தி வந்தார்.இதனை 2008ல் வாங்கிய பிறகுதான் அல்காரித விளம்பரம் வழியாக கூகுள் செம காசு பார்த்து வருகிறது.கூகுளின் வருமானம் முழுக்க முழுக்க அல்காரிதமிக் முறையிலான விளம்பரம்.அதையே செய்தித்தாள்களுக்கு நியூஸ் எழுதப் பயன்படுத்தினால் நம்பர் ஒன் நாளிதழ் ஆகி விடலாம்.
 அவ்வளவூ ஏன்.
 இயக்குநர் ஷங்கர் போன்றவர்கள் எந்திரனில் கதைக்காகவூம் திரைக்கதைக்காகவூம் மெகா சைஸ் உதவியாளர்கள் குழுக்களுடன் உட்கார்ந்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை.ஒரு நெட் ககென்ஷனுடன் ஒரு மேக்புக் ஏர் என்னிடம் கொடுத்து விட்டு தனியாக ஒரு ரிசார்ட்டில் விட்டு விட்டால் ஒரே வாரத்தில் எந்திரன்2.0வில் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை நானும் என் கம்ப்யூட்டரும் மட்டுமே சேர்ந்து எழுதி விடுவோம்.

Previous
Next Post »