சிறுகதை: காரணம் ஆயிரம் - விஜயநிலா


ஒரு முன்கதை:

   உமாசங்கர் பத்திரிகை நிருபராக இருந்தவன்.ஒன்றிரண்டு கவிதைகளை அவன் வேலை செய்த பத்திரிகை பிரசுரம் செய்ததில் காதல்கவிதை மன்னன் என்ற அடைமொழியூம்,நாலைந்து பாக்கெட் சைஸ் கவிதைத்தொகுப்பும் வெளிவந்து விட,ஜோல்னா பையையூம்,ஜிப்பா,ஜீன்ஸையூம் துறந்து விட்டு,காட்டன் சட்டையூம்,கார்ட்ராய் பான்ட்டுமாக சில படங்களுக்கு உதவி டைரக்டராய் பணியாற்றியவன்.கடைசியாக வேலை பார்த்த படத்தில் அவன் அமைத்த ஸீன்களுக்கு மிரண்டு போன டைரக்டர் நீ நீந்த கத்துக்கிட்டே.தனியா படம் பண்ற வழியைப்பார்என்றதும் கதைகளை சுமந்து கொண்டு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கியவன் ஸ்நேகலதாவை எளிதாக கவர்ந்து கொண்டு விட அவளது சிபாரிசால் ஒரு பிரம்மாண்டமான படத்தை போனவாரம் நட்சத்திர ஹோட்டலில் துவக்கினான்.ஸ்நேகலதாவூடன் கை கோர்த்து நடந்தான்.ஸ்நேகலதாவூடன் அதே ஹோட்டலில் டிஸ்கஷன்கள் நடத்தினான்.ஸ்நேகலதா மெல்லிசான குழல்விளக்கு வெளிச்சத்தில் அவன் மார்பில் பரவியபடி கைகளைக் கவர்ந்து கொண்டு கண்களுக்குள் கண்களைச் செலுத்தி  'எலிஸா ஆக்டன்.. ஐ லவ் தீ" என்று உதடுகளைக் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறான்.அடுத்த வாரம் ஸ்விட்சர்லாந்துக்கு படத்தை துவக்குவதற்காக ஸ்நேகலதாவூடன் போய் விசா வாங்கி வந்தான்.அன்றிரவில் அவன் உதடுகளில் ஆவேசம் ஏதும் வராதவளாக நிதானமாக ஸ்நேகலதா 'மார்க்கெட் அட்வூட்டை" உதடுகளால் எழுதிக் கொண்டிருந்ததை மறுநாள் காலையில் கண்ணாடி சன்னல் வழியே உள்ளே வந்த வெளிச்சம் பிடித்து இழுக்கும் வரை அனுமதித்தான்.அன்று முழுக்க தான் எடுக்கப்போகும் கதையை சீன் சீனாக அவளிடம் விளக்கிக் கொண்டிருந்தபோது அவள் எதையூம் கேட்க விரும்பி தன்னை குறுகுறுவென்று பார்;;ர்ர்த்துக் கொண்டிருந்ததை ரசித்தான்.அப்புறம் ஒரு மழைநேரத்து இரவில் இதழ்கள் பிரிபடாமல் ஸ்நேகலதாவூடன் செத்துப் போனான்.


இப்போது கதை:

   ஸ்நேகலதா நடிகை.பத்து வருடங்களாக தமிழ்படவூலகையூம்,தெலுங்குப்படவூலகையூம் கதி கலங்க வைத்துக் கொண்டு வருகிறாள்.அருகே வந்து வழியூம் ஹீரோக்களை ஆங்கிலத்தால் அறைவாள்.உமாசங்கர் முதன் முதலாக ஒரு பத்திரிகைக்காக பேட்டி எடுக்க வந்தபோதே ஹ்யர் இஸ் மை மேன்என்று ஒரு எண்ணஅலை அவளது மார்புகளுக்குள் ஓடியது.அப்போதே முடிவூ செய்து விட்டாள்.முதன்முறையாக உமாசங்கர் தயக்கமாக அவளது உடலை ஐடியா இல்லாமல் ஆங்காங்கே ஸ்தம்பித்து அணுகியபோது-
என்னை உன் உணர்வூகளால் கொளுத்தி விடு சங்கர்.அட நான் கூட உன் மாதிரி கவித பேசறேனில்லஎன்று சிரித்தாள்.
"என் மனசு பூராவூம் ஸ்கிரீன் ப்ளே எழுதறதுல இருக்கு லதா.டட்லி நிகோலஸ்னு ஒருத்தன் எழுதியிப்பான் பாரு.அந்த மாதிரி எழுதனும்.'தி இன்ஃபார்மர்' படம்."
"டட்லி தெரியூமா உனக்கு.இன்ட்ரஸ்ட்டிங்.ஹீரோ கால்ஷீட்டும் காமடியன் கால்ஷீட்டும் சிக்கின உடன பூஜை போட்டு படத்தை தேத்தற டைரக்டரா வந்திருவியோன்னு நினைச்சேன்.அகதா கிறிஸ்டியோட கதையைக் கூட அந்தாள் படம் எழுதியிருக்கான்.'அன்ட் தென் தேர் வேர் நன்'னு அது போல ஒரு த்ரில்லர் பண்ணனும்னு எனக்கு ஆசை.எங்க.காமராவை கழுத்துக்கு கீழயே வைக்கறதுல குறியா இருக்கானுங்க.அப்புறம் என் உதட்டுல கவித எழுதுவியா உன் உதட்டால"

    இப்போது ஸ்நேகலதா சிரிக்கக் கூட தோன்றாமல் கால்களை விரித்துக் கொண்டு தரையில் கிடந்தாள்.இதழோரம் இரத்தம் கோடாக வழிந்திருந்தது.அருகில் உமாசங்கர் தவம் செய்து களைத்தவன் போல மல்லாந்திருந்தான்.இரண்டு உடல்களையூம் காமராக்கள் சுட்டுத்தள்ளின.
யார் முதல்ல பார்த்தது.வரச்சொல்லுங்கஎன்றார் இன்ஸ்பெக்டர்.
நாந்தாங்கய்யா.சமையல்வேலை பார்க்கறேன்.ராணின்னு பேரு.வூட்டோட இருக்கேன்.அம்மாவூம்,அய்யாவூம் கண்ணாலம் கட்டிக்கிடறதா இருந்தாங்க.எதுக்காக செத்தாங்கன்னு தெரிலிங்கய்யாஎன்று ஒரு பாட்டம் அழ ஆரம்பித்தாள்.
சாரி நீ போ.பெருமாள் இங்க வாங்க.பாடி பொஸிஷன் பார்த்தா ஸ்ட்ராங்குலேட் மாதிரி தெரியலை.க்ளீன் தற்கொலைதான்.ஆனா காரணம் என்ன.நேத்து வரைக்கும் சந்தோஷமாதான் இருந்தாங்களாம்.ஷாப்பிங் எல்லாம் போயிருக்காங்க.ஃபாரின்ல ஷீட்டிங் நடத்தறதுக்கு விசா எல்லாம் வாங்கியிருக்காங்க.பின்ன எதுக்காக தற்கொலைன்னுதான் புரியலை
 இருவரது உடல்களும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டதும் அங்கிருந்து கிளம்பினார் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ்.வீட்டின் எதிரே சொற்ப கூட்டம் கூடியிருந்தது.உமா சங்கர் வெத்து ஆள்.ஆனால் ஸ்நேகலதா பெரிய நடிகை.அவள் எப்படி இவனை கல்யாணம் பண்ணிக்கொள்ள இருந்தாள்.
இந்த கவிதப் பயலுக எல்லாம் பொண்ணுங்க மனசை ஈசியா கவூத்துருவானுங்க சார்.மானே தேனோ,பொன்மானேன்னு வார்த்தை.இலவசமா கிடைக்கற வார்த்தையில பொண்ணுங்களை தடவிருவானுங்கஎன்றார் பெருமாள்.
   “அவ ரூமை போய் பார்க்கனும் பெருமாள் மறுபடி.ஏதாவது டயரி கிய்ரி கிடைக்குமான்னு.இந்த பய ஏதாவது மரணவாக்குமூலம் எழுதி வைச்சிருக்கானா.இல்லைன்னா இந்த மரணமே ஒரு கொலையாக ஏன் இருக்கக் கூடாது
என்ன சொல்றிங்க சார்
ஆமாய்யா.இவன் வேலை செய்துகிட்டிருந்த இயக்குநர் ஒரு சாதாரண மசாலா படம் எடுக்கற மினிமம் கேரன்ட்டி ஆள்.ஆனா இவன் ஒரு பிரம்மாண்ட படம் எடுக்கப் போறது தெரிஞ்சி பொறமையினால கொலை செய்திருக்கலாமில்ல
சான்சே இல்லை சார்.அந்த ஆள் நல்ல மனுஷன்.இவனுக்கு அவர்தான் சான்சே வாங்கிக் கொடுத்திருக்கார்
அப்ப படத்துல யார் யார் நடிக்கறாங்க.படத்து ஹீரோவூக்கு இந்த பொண்ணு மேல லவ் அல்லது லஸ்ட் இருந்து அதனால ரெண்டு பேரையூம் தீர்த்திருக்கலாமே
ம்கூம் இதுவூம் சரி வராது.அந்த ஹீரோ கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த ஆள்.ஒவ்வொரு படம் முடியூம்போதும் டைரக்டருக்கு கார்,அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு மோட்டார்பைக் வாங்கிக் கொடுத்து அசத்தற ஆள்
அப்ப அதுவாத்தான் இருக்க முடியூம்
எது
ஸ்டேஷனுக்குப் போனதும் சொல்றேன்என்று பியஸ்டாவை ஸ்டேஷனுக்குத் திருப்பினார் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ்.
                                                                __          __           __
  
உள்ள வரலாமா சார்என்ற குரல் கேட்டு டேபிளிலிருந்து எழுந்தான் தனியார் டிடெக்டிவ் விஜய்.கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த அவனது உதவியாளினி சுமி தலையை பக்கவாட்டில் அசைத்துப் பார்த்தாள்.அறை வாசலில் ஒரு பெண் நின்றிருந்தாள்.அந்த இடத்தையே ஆயிரம் வாட் வெளிச்சத்தால் அலம்பி விட்ட மாதிரி புதுசாக இருந்தாள்.
ஐம் வந்தனா.எங்க அண்ணனையூம்,அண்ணியையூம் காணலை.ஸாரி அவங்க ஒரு கார் விபத்துல அடிபட்டு செத்துட்டாங்க.அந்த விபத்து கொலையாக இருக்கலாம்னு ஒரு சந்தேகம்
உட்காருங்க.சுமி நான் பேசிட்டு இருக்கேன்.நீ ரெக்கார்டு பண்ணு.என்றதும் சுமி முறைத்தாள்.வந்தனா சுமியை தயக்கமாகப் பார்த்து விட்டு சொன்னாள்.
என் அண்ணன் பேரு அனில்குமார்.நெய்வேலியில இன்ஜினியர்.நல்ல வேலை.கல்யாணமாகி ஒரு மாசம்தான் ஆகுது.லவ் மேரேஜ்.கார்ல போகும்போது அடி பட்டு ஸ்பாட்லயே அவூட்.ஆனா என் உள் மனசில என்னவோ சந்தேகம்
என்ன சந்தேகம்
அவங்க ரெண்டு பேரும் அத்தனை சந்தோஷமா இருந்தாங்க.இந்த சந்தோஷம் நிலைக்கனுமே.ஏதாவது விபரிதமா நடந்துடுமோன்னு நான் கூட அடிக்கடி நினைச்சிருக்கேன்.அது மாதிரியே ஆகிப்போச்சு.
நாங்க கண்டுபிடிக்கறம்.உங்க அண்ணன்,அண்ணியோட ஃபோட்டோ இருக்கா
பென் டிரைவ்வை நீட்டினாள்.வாங்கி லாப்டாப்பில் செருகிக் கொண்டாள் சுமி.

வர்றேன் சார்
என்ன விஜய் இது.எப்பவூம் பொண்ணுங்களைக் கண்டா டன் டன்னா வழிவே.இந்த பொண்ணுகிட்ட அமைதியா இருந்திட்டேஎன்றாள் சுமி.
அவளே ஏற்கனவே வழிஞ்சிட்டுதான இருந்தா.ஸாரி தளும்பிட்டுதானே இருந்தா.சோக கேஸ் வேற சொல்லிட்டு இருந்தா.அப்ப போய் வேண்டாமேன்னு பார்த்தேன்.நீ கவனிக்கலையா சுமி.பீட்ஸா கொடுக்கற பொண்ணுங்க மாதிரி அவ தன்னோட தொடையில தன் செல் நம்பரை எழுதிக்காண்பிச்சிட்டா.நைட் அவகிட்ட பேசனும்
நான் ரிசைன் பண்ணிருவேன்
பண்ணேன்.நாலைஞ்சி பிகர்கள் வெயிட்டிங்ல இருக்கு
மவனே உன்னை கொன்னுட்டுதான்டா ரிசைன் பண்ணுவேன்என்று அவன் முதுகில் மொத்தினாள்.
இன்னும் கொஞ்சம் அடி சுமி.இதமா இருக்கு
வ்வாட்.அடிச்சா இதமா இருக்கா?”
ஆமா நீ கைகளால அடிக்கும்போது கைகளுக்கு இடையில தளதள,கொழுகொழுன்னு சில பல அம்சங்கள் என் மேல சூப்பரா படுதில்லை.ஸ்பா ஒத்தடம் மாதிரி.இதுக்காகவே சண்டை போடலாம்
கேசை கவனி.ஓபி அடிக்காதஎன்ற சுமி நீளமாக பேச ஆரம்பித்தாள்.
"இந்த ஜெடமானது அதன் கர்ம வினைகளை அனுபவித்தே தீர வேண்டும். மன நிலையில் நாம் ஜீவன் முக்தர்கள் ஆனாலும் உடல் நிலை வேறு அல்லவா? உடல் நமது உடமைப் பொருள். அது நாம் அல்ல. ஆனால் அது நம்முடைய வாகனம். அதன் வினையை அதுவே அனுபவிக்க வேண்டும். ஆனால், அப்பொழுது ஜீவன் முக்தர்கள் அந்த அனுபவத்தில் இருக்க மாட்டார்கள். ஏனெனில் உலகிலுள்ள எல்லா உடலையும் போல இந்த உடலை பாவிப்பார்கள். அவர்கள் நிலை ஒரு ஸம பாவனையில் இருக்கும். அதாவது "நான்" எல்லாற்றிலும் உள்ளேன், எல்லாம் என் வசம் என்ற நினைவில் இருப்பார்கள்."என்றாள் சுமி.
  "என்ன சொல்ற.கதை வசனம் புரியலை.ஏதாவது சாமியாரினியாகறதுக்கு திட்டமா. ஒரு கோடி ரூபா கொடுத்தா இப்பெல்லாம் மடாதிபதியாகிடலாமாம்.ஃபேஸ்புக்ல இதான் ஹாட் டாக்.இது என்ன வசனமழை பொழியற"என்றான் விஜய்.
"இதுதான் ஜீவன் முக்தர்களுக்கான டெஃபனிஷன்.ஒரு புஸ்தகத்துல போட்டிருந்தது.எதுக்கும் உதவூம்னு எடுத்து வைச்சேன்"
"சரி.மத்த விபரங்களைப் பார்ப்போம்"
 வந்தனா கொடுத்த விபரங்களை மறுபடி கம்ப்யூட்டரில் பார்த்தான்.அந்த அண்ணன்-அண்ணியைப் பார்த்தபோது ஒரு ஒற்றுமை தெரிந்தது.அதை கவனித்து விட்டு கூக்குரலிட்டாள் சுமி.
விஜய் இவங்க ரெண்டு பேரோட முகத்தையூம் பாரேன்.தம்பதியர் மாதிரியே தெரியலை.முகத்துல ஒரே மாதிரி சாயல் தெரியூது.சம்திங் வினோதமா படுது எனக்கு
எனக்கும் வினோதமா படுது.ஸாரி நான் அதுகளைச் சொல்லலை.ஐம் சீரியஸ்.ரெண்டு பேருமே ஆண்கள்னு நினைக்கறேன்.யாரோ ஒருத்தா; பெண்ணாக பால் மாறியிருக்கனும்.எதுக்காக.ஆனா எதுக்காக ஆக்சிரன்ட்ல அனாமத்தா செத்துப் போகனும்என்றபோது அருகே இருந்த செய்தித்தாளில் எல்ஐசியின் ஜீவன்வர்ஷா பாலிசி விளம்பரம் கண்ணில் பட்டது.அலட்சியப்படுத்தி வந்தனாவின் அண்ணனின் முகத்தையே பார்க்க ஆரம்பித்தான்.
                                                           __              __             __

    “பெருமாள்.இங்க பாருங்க விஷயம்.இந்த உமாசங்கர் எடுக்கப் போற படத்தோட பேரைப் பாருங்க.என்றார் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ்.
ஒரு ஜீவன் அழைத்தது.ஒரு ஜீவன் துடித்ததுஎன்ற விளம்பரம் தென்பட்ட தினகரன் பேப்பரை காண்பித்தார்.அதில் ஸ்நேகலதாவூம் அந்த ஹீரோவூம் நிழல்களாக கட்டிப்பிடித்தபடி இருந்தார்கள்.இந்த விளம்பரத்தில் என்னவோ சேதி இருப்பதாக மனதில் பட்சி சொல்லியது.அந்த விளம்பரத்தை மீண்டும் ஒரு முறை உற்றுப் பார்த்தார்.அதன்பின் மற்ற கேஸ்களில் மூழ்கிப்போனார்.மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வடை மடித்துக் கொண்டு வரப்பட்ட கிழிந்த தாளை படித்துக் கொண்டிருந்த பெருமாள் திரும்பினார்.
சார் இத பாருங்களேன்இந்த சாமியார் என்ன சொல்றாருன்னு.புது மாதிரி க்ரின் ஹவூஸ் எஃபக்ட் வந்திருக்காம்.ஓஸோன் லேயர்ல ஓட்டை பொல்யூஷனால மட்டும் வரலையாம்.மனிதர்களோட காமம்,பொறாமை,அழுக்காறு அப்படி இப்படின்னு இன்னும் என்ன என்னமோ கெட்ட எண்ணங்களால ஓஸோன் கெட்டுடுச்சாம்.இப்படியே விட்டா சுனாமி போல பல இயற்கை சீரழிவூகள் வருமாம்.இதை தடுக்கறதுக்கு ஜீவன் முக்தர்கள்வேணுமாம்
என்ன முத்தம்
ஜீவன் முக்தர்களாம்.நல்ல ஆத்மாக்கள் தங்களை தியாகம் செய்யனுமாம்.ஆனா உயிர்தியாகம் தற்கொலை வாயிலாக இருக்கக் கூடாதாம்.நல்லவங்க தானா விபத்துல சிக்கி மரண நிலை அடையனுமாம்.அந்த ஆத்மாக்கள் பூமியை காக்கற ஜீவன்முக்தர்களாக மாறுவார்களாம்.பூமி சுபிட்சமாகுமாம்
                                                      __            __               __

    “என்ன சுமி இது விபத்தல்ல.பூமியைக் காக்கும் சிறு முயற்சின்னு டாஷ்போர்டுல எழுதியிருக்கான் வந்தனாவோட அண்ணன்.இதை யாரும் கவனிக்கலையாஎன்றான் விஜய் வொர்க்ஷாப்பில் வைத்திருந்த அந்த காரை பார்த்தபடி
                                                      __            __               __

    “நல்லவர்கள் இத்தனை நாட்கள் ஆண்டது போதும்.இந்த பூமியில் தீயசக்திகள் உருவாக வேண்டும்.அதற்கு நிறைய ஆத்மாக்கள் வேண்டும்.அப்போதுதான் ஆச்சர்யங்கள் நிகழும்.வாய்ப்பில்லாதவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.நீ தற்கொலை செய்து கொள்வதாக ஒத்துக்கொள்.நாளையே உனக்கு பிரம்மாண்டமாய் ஒரு புதுப்படம் கிடைக்கும் என்று வொயின்ஷாப்பில் அந்த கறுப்புஅங்கி அணிந்தவன் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது.என்னாச்சர்யம்.எனக்கு படம் கிடைத்து விட்டது.இந்த ரகசியத்தை ஸ்நேகலதாவிடம் சொன்னால் அவளும் கூட தற்கொலைக்கு ஒத்துக் கொள்வாள்.வாழ்க நெகட்டிவ் எனர்ஜிஎன்று எழுதியிருந்தான் உமாசங்கர் தன்னுடைய டாப்லெட் கம்ப்யூட்டரில்.அதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் திகைத்துப் போனார்.
 “ஸார்.ஒரு சிக்கலான ஆச்சர்யம்.இதுவரைக்கும் வெவ்வேறு விபத்துக்கள்ல ஆயிரம் பேர்கள் செத்துப் போயிருக்காங்க.அதுவூம் ஒரே வாரத்துல.என்றான் டிடெக்டிவ் விஜய்.
ஸார்.இன்னொரு ஆச்சர்யம்.இதுவரைக்கும் வெவ்வேறு இடங்கள்ல ஆயிரம் பேர்கள் தற்கொலை செய்துகிட்டிருக்காங்க.அதுவூம் ஒரே வாரத்துலஎன்றார் சப்இன்ஸ்பெக்டர் பெருமாள்.
 ஆயிரம்-ஆயிரம்.
 1000/1000
    அப்படியானால்..அப்படியானால்...
 கணக்கு நேராகி விட்டது.ஜீவன் முக்தர்களும்,அஜீவன் முக்தர்களுமாக ஒரே எண்ணிக்கையில் இருப்பதால் பூமியின் இன்றய நிலையில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்று கேசை முடினார் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ்.
ஒரு பின்கதை:

 வேலை கிடைக்காத தனக்கா இரண்டு லட்சரூபாய் சம்பளத்தில்,அதுவூம் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஐடிதுறையில் வேலை என்று மிரண்டு போன சத்யன் தனியறைக்குப் போய் வாழ்க நெகட்டிவ் எனர்ஜி என்று கத்தி எடுத்து தன் கழுத்தை தானே அறுத்துக் கொள்ள ஆரம்பித்தான்.
பி.கு:இந்த கதையை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள்..அட..ஏன் எழுந்து விட்டீர்கள்.எதற்காக சிட்அவூட் அருகே போகிறீர்கள்.வேண்டாம்.சொல்வதைக் கேளுங்கள்.எதற்காக உயரமான மாடியிலிருந்து நீங்கள் குதிக்கிறீர்கள்?

                                                               -------------------------
Previous
Next Post »