கண்மணி அப்புறம் பொன்மணி...

இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் ஆட்டோ வாசகம் போல பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் புதுக்கவிதை எழுதுவது ஒரு சின்ட்ரோம் போல ஆகி விட்டது.வயிற்றில் வசவசவென்று கண்டதையூம் அடைத்துக் கொண்டபின் ஜெலுசில் போட்டுக் கொள்வதைப் போல எழுதுகிறார்கள்.பொதுவாக இவ்வகை புதுக்கவிதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
அவநம்பிக்கை:
'எஸ்எம்எஸ் அனுப்பி
விரல்களே தேய்ந்து விட்டன
ஆனாலும் அவள்
கண்டுகொள்வதே இல்லை!
சமூக கோபம்:
அய்யா!
ஸ்பெக்ட்ரம் ஊழல்
பழசாகி விட்டது
அடுத்து ஊழலுக்கு
ரெடியாகவிட்டீர்களா?
அல்லது காதலிக்க துணிவில்லாதவர்கள் எழுதும் காதல் கவிதைகள்:
'நீ பூ
நான் நார்
சேர்ந்து
கட்டிக் கொள்வோம் வா'
ஒரு காலத்தில் ஜோக்கிற்கு பதிலாக பத்திரிகைகளில் ஃபில்லர் மேட்டராப் பதிப்பிக்க ஆரம்பித்தார்கள்.அப்புறம் இணையம் வளர்ந்ததும் வலைப்பூ வசதி வந்ததும் ஆள் ஆளுக்கு கட்சி துவங்குவது போல ப்ளாக் ஆரம்பித்து கவிதைகளை நாமக்கல்,பல்லடம் பக்கத்து கோழிகள் முட்டையிட்டுத் தள்ளுவது போல எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
கவிதை எழுதுவது சுலபம்.ஆனால் கவிதையாக சிந்திப்பதுதான் கடினம்.உள்ளே கோபக்கனலோ அல்லது காதல்புனலோ அவசியம் இருந்தே ஆக வேண்டும்.அப்படி எழுவதுதான் கவிதை.நல்ல கவிதையை எழுத முழுநீள வெள்ளைத்தாள்தான் வேண்டுமென்பதில்லை.ஒரு சினிமா ஏடிஎம் கார்டில் கையெழுத்துப் போடும் இடத்திலோ அல்லது ஒரு ஐடிகார்டின் பின்புறத்திலோ எழுதி விடலாம்.சைட் அடிக்கும் கணவான்கள் எல்லாம் கவிதை எழுத வந்து விட்டதுதான் கொடுமை கலந்த வேடிக்கை.
'படிக்கட்டில்
உருண்டு வரும்
வார்த்தைகள்
அல்ல
கவிதை
அப்படி உருண்டு வருவது
வார்த்தைகளுக்கு பதிலாய்
ஒரு குழந்தையோ குமரியோ
விழுவதை கற்பனை செய்யூங்கள்
பார்த்ததும் பதறிப்போவோமல்லவா
அது போல
படித்ததும்
பதற வைப்பதுதான் கவிதை'
ஆனால் ஜீன்ஸ்,பெர்முடா,பியர் டின் கவிஞர்கள் எழுதும் கவிதைகளில் ஒரு வித சினிக்(cinic) காணப்படுவதை  கண்டால் சிரிப்பு வருகிறது. உதாரணமாக
‘தாத்தா
வெள்ளிக்கிழமை செத்துப் போனார்.
சனிக்கிழமை கிடா வெட்டி
சாராயத்துடன் நல்ல சாப்பாடு’ என்று கவிதை அமைகிறது.
இங்கே தேவர்பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பா தேவரைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.கவிதைக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்று வெளிநடப்பு செய்து விடாதீர்கள்.அவரிடம் கதை சொல்ல வரும் கதாசிரியருர்களுக்கு ஒரே ஒரு கன்டிஷன்தான் போடுவாராம்.சினிமாவூக்கான கதையை ஒரே வரியில் சொல்ல முடியூமா என்று.அப்படி ஒரே வரியில் சொல்ல முடிந்தால் அந்தாள் கதையை ஒழுங்காக எழுதி விடுவான் என்பது அவரது நம்பிக்கை.டைரக்டர் சசி முதன் முதலாக படம் இயக்க வந்தபோது ஒரே வரியில் கதை சொல்லித்தான் சூப்பர்குட் பிலிம்ஸில் சான்ஸ் வாங்கினாராம்.வானத்தில் பறப்பவளுக்கும்(கதாநாயகி ஏர்ஹோஸ்டஸாம்) பூமியில் கனா காண்பவனுக்கும்(சுவர் ஓவியம் வரைபவனாம்) இடையில் ஏற்படும் காதல் என்று சொன்னாராம்.
அதனால் எழுதுங்கள்.
மூன்றே வரிகளில் எழுத முடியூமா என்று பாருங்கள்.
'அவள்
பூ
அவன்
ஆஷ் ட்ரே அருகே
நகர்த்தி வைத்தான்
குப்பைக் கூடையை'
இது போல அர்த்தபுஷ்டியூடன் ஆரம்பத்திலேயே எழுதிப் பழகினால் படிப்பவர்களுக்கு மைக்ரேன் வந்து விடலாம்.சற்று புரிகிற மாதிரி
சற்று எம்பதியூடன்(empathy)
'மாதாமாதம்
வரும் வலி நின்று போனது
நிம்மதியாக
இருக்குமென்று
அவள் அமர்ந்தபோது
வீட்டுக்கடன்
பெண்ணின் கல்யாணத்திற்கு
வாங்கிய கடனுக்கான இஎம்ஐக்களுக்கு
மட்டும்
என்றும் மெனோபாஸ் வருவதேயில்லை
லேசாய் வலித்தது

மனதில்"என்று எழுதிப் பழகுங்கள்.எழுதுவதில் உள்ள மற்ற வித்தைகளை பிறகொருநாள் பார்க்கலாம் மனதிற்கும் மழையோ உற்சாகமோ வரும்போது.
Previous
Next Post »