'சின்னச் சின்னதாய்
நீ
பார்க்கும் பார்வையில்
லேசாகிப் போகிறது மனது
அப்புறம்
என்றைக்காவது
நீ கண்ணில் தென்படாவிட்டால்
அன்றைய தினம் முழுக்க
என்னை
தொலைத்து விட்டு தேடிக்கொண்டே
இருக்கிறேன்
அப்புறமாய்
நீ வந்ததும்தான்
நான் இங்கே இருப்பதையே
உணர முடிகிறது
என்றைக்கேனும் எங்கேனும்
உட்கார்ந்து
கைகள் பற்றிக்கொள்ளும் ஆசையூடன்
கண்கள் பற்றிக்கொள்ள
பேசிக்கொண்டிருக்க
ஆசை வாட்டியெடுக்கிறது
அப்புறம்..அப்புறம் என்றே
நழுவிக்கொண்டு செல்கிறாயே
அங்கே பார்
உன் மனதும் என் மனதும்
ஒன்றாகக் கிடக்கின்றன
உலகை மட்டுமல்ல
உன்னையூம் என்னையூமே
மறந்தபடி'

'உன் மௌனம்
எப்போது கலையூமென்று
எதிர்பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை
பேசப்பிடிக்கவூமில்லை
சும்மா
பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை
எங்கோ தொலைவில்
பார்த்துக் கொண்டு
சிட்அவூட்டில் அவ்வப்போது அமர்ந்திருப்பாயே
அது போல்
அமர்ந்து கூட பார்த்து விட்டேன்
விரல்கள் தானாக
செல்பேசிக்கு தாவின
அழைத்ததும் எடுப்பாய்
ஆனால் பேசமாட்டாய்
அப்படியே வைத்திருப்பாய்
அது போதும்
நேரில் பேசும் மௌனம்
செல்பேசியிலும

பேசத்தானே செய்கிறது'
Previous
Next Post »