சிறுகதை: "விண்வெளியைத் தாண்டி வருவாயா?" -- விஜயநிலா



           அவன் பெயர் ஜார்த்திக்.அவளைப் பார்த்த நிமிடத்தில் பிரமித்துப் போய் விட்டான்.யாரவள்?தேவதை?பிசாசு?டிஜிட்டல் மாயம்?இல்லை ஏதாவது கனவா? அல்லது பாப்மேயரின் அட்லான்டிஸ் போன்ற கதைகள் எதிலாவது சிக்கிக் கொண்டிருக்கிறேனா?
 புரியாமல் பார்த்தான்.
 அவள் அவனது வீட்டிலேயே மாடிபோர்ஷனில் குடிவந்திருந்தாள்.உடன் ஒரு வயதான அம்மா மட்டும்தான் இருந்தாள்.அப்பா அம்மா என்று யாரும் இல்லை.
அவனைப் பார்க்கும் போதெல்லாம் புன்னகைப்பாள்.ஆனால் பேச மாட்டாள்.
 இன்று அவளை விடக்கூடாதென்று அவள் காலையில் கிளம்பும்போது பின்தொடர்ந்தான்.வேகமாக நடந்தான்.ஒரு திருப்பத்தில் அவள் குலுங்கியபோது ட்ராம் ஃப்ளாப் ஹார்வெஸ்ட் (TRAM flap)செய்யப்பட்டிருந்தது போலிருந்ததை அலட்சியப்படுத்தி அவளை அணுகியபோது அவளே திரும்பினாள்.
 அவள் பெயரைச் சொல்லவில்லையே.அவள் பெயர் லிஸ்ஸி.
 எங்கே சொல்லுங்கள்.லி..ஸ்..ஸி..லிஸ்ஸி.
 தித்திப்பாக இல்லை?அதுதான் அவனது குழப்பமும்.
 ஊரில் எத்தனையோ பெண்கள் இருக்கும்போது தான் மட்டும் ஏன் லிஸ்ஸியின் பின்னால் அலைகிறௌம் என்று.
லிஸ்ஸி கேட்டாள்:
"ஜார்த்திக்.வாட் யூ வான்ட்"
"சே.சே.நான் ரொம்ப டீசன்ட்டுங்க.வாட் யூ வான்ட்டுன்னு கேட்டா உடனே இளிச்சிட்டு கேபி.கருப்புன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.ஆக்சுவலா..நான் உங்களை.."
"நானும் ஐ திங்க்.. ஐ திங்க்..னு இழுக்க மாட்டேன்.சொல்லு ஜார்த்திக் என்ன உன் கவலை.எதுக்காக என்னை பின் தொடர்ற"
"சே.நான் கேஎஃப்சியில அவிச்ச முட்டை கிடைக்குமான்னு இல்லைன்னா கரண்டி ஆம்லெட் கிடைக்குமான்னு ச்சே.நான் வர வர சந்தானம் மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்...  பார்க்க வந்தேங்க.நான் உங்களை லவ் பண்றேன்.லவ்வூங்க.இந்த சினிமால எல்லாம் ஃபாரின் லொக்கேஷன் போய் ஆடுவாங்களே.பழைய பாலச்சந்தர் படத்துல எல்லாம் காபியில ஃபோட்டோவை போட்டுக் குடிப்பாங்களே.இன்னும் புரியலையா.லவ்வூங்க..நீங்க ஊருக்குப் போனா யாராச்சும் ஒரு  துணைக்கு அழைச்சிட்டு அந்த ஊருக்கே போய் எட்டிப் பார்த்து புட்டு கடலை எல்லாம் சாப்பிடுவாங்களே அந்த லவ்வூங்க"
"ஜார்த்திக்.யூஆர் மிஸ்டேக்கன்.நான் உன்னை விட வயசுல பெரியவ"
"அதனால என்னங்க.நமக்குதான் நல்ல வேதியியல் இருக்கே அதுவூம் குறிப்பிட்டு சொல்லனும்னா பிசிக்கல் கெமிஸ்ட்ரி..."
"பார்டன்"
"நான் பாட்டு எல்லாம் பாடனுமான்னு தலைதளபதிகாரனை கேட்கமாட்டேங்க.எனக்கு இங்க்லீஷ் தெரியூம்.ஐ மீன் நமக்குள்ள ஒரு அற்புதமான கெமிஸ்ட்ரி இருக்குன்னு சொல்ல வர்றேன்"
"சாரி.எங்க தேசத்துல சாரி ஊர்ல சாரி வீட்ல அலவ் பண்ணமாட்டாங்க"
"அதுக்கென்னங்க.அலவ் பண்ணாதான் தப்பு.நான் ஊர்ல எத்தனையோ அழகான பொண்ணுங்க இருக்கறப்ப இந்த லிஸ்ஸி பின்னால சுத்தறேனே உங்களுக்கு பரிதாபமா தெரியலையா"
"ப்ச்"
"ப் மட்டும் எடுத்திருங்களேன்"
"பார்டன்"
"சாரி ஐயாம் ஜோக்கிங்."
"நானே சொல்லிர்றேன்.நான் நாளைக்கு கிளம்பறேன்.நீங்க என்னை பார்க்க முடியாது"
"நீங்க எங்க இருந்தாலும் நான் வருவேன்"
"பார்க்கலாம்"என்ற லிஸ்ஸியை அடுத்தநாள் வீட்டில் காணவில்லை.
அம்மாவிடம் கேட்டபோது அவள் எங்கேயோ சொந்த ஊருக்குப் போய் விட்டாள் என்று சொன்னாள்.
அவள் அறையைக் குடையலாம் என்று அம்மாவூக்குத் தெரியாமல் போய் பார்த்தபோது அதிர்ந்து போனான் ஜார்த்திக்.
அவள் அறையில் நிறைய யூஎஃப்ஓ பற்றிய புத்தகங்கள் இருந்தன. வொய்ட்ஸ்மோர் ஒரு ஓரத்தில் கிடந்தார்.'the gods have landed' கம்ப்யூட்டரை குடைந்தால் அதில் ஏதோ ஒரு கிரகம் பற்றி கட்டுரை இருந்தது. ஏன் ஏன்சியன்ட் கார்பன் மிஸ்ட்ரி!
நாம் நினைப்பது மட்டும் சரியாக இருக்குமானால் இவள் மனுஷப் பிறவியே அல்ல என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
கரெக்ட் என்றது கம்ப்யூட்டா;.
'நண்பா.லிஸி எங்கள் கிரகத்து அழகான பிரஜை.அவளை நீ அடைய முடியாது.எங்களது கிரகம் பால்வீதியில் இருக்கிறது.அதை நீ அடைவது சிரமம்.அப்படியே வந்தாலும் இங்குள்ள பெண்கள்அதை அனுமதிக்க மாட்டார்கள்.
புரியாமல் குழம்பினான்.காலக்ஸியில் எங்கோ அவளது கிரகம் இருக்கிறது.இது போன்ற சயன்ஸ் பிக்ஷன் சமாச்சாரத்தை காமராமேன் ரத்னவேலுவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.நாமே இப்போது ஒரு உதவி இயக்குநராகத்தானே பணியாற்றி வருகிறௌம்.அந்த கிரகத்திற்கு சென்று லிஸ்ஸியை சந்தித்து வந்தபின் அதை ஒரு சயன்ஸ்பிக்ஷன் படமாக  பன்பிக்சர்ஸூடன் இணைந்து தயாரித்து விட வேண்டும்.ஆனால் 'அங்குள்ள பெண்கள் அனுமதிக்க மாட்டார்கள்' என்று ஏன் முட்டாள் கம்ப்யூட்டர் சொல்கிறது.
அடுத்த இரண்டு நாட்களில் அவன் உதவி இயக்குநராக பணியாற்றும் யூனிட்டின் காமராமேன் மணேஷை அழைத்துக் கொண்டு கள்ளராக்கெட்டில் ஏறி மேலுலகம் சென்றான்.
சரியாக லிஸ்ஸியின் கிரகத்திற்கு போய் நின்றது அந்த ராக்கெட்.அந்த கிரகத்தின் பெயர் கூட 'ஆழப்புழா சென்ட்டுவாரி' என்றிருந்தது.ஆல்பா சென்ட்டுவாரி என்றுதானே சுஜாதா எல்லாம் சயன்ஸ்பிக்ஷன் கதைகளில் கிரகத்திற்கு பெயர் வைப்பார்.இதென்ன ஆழப்புழா சென்ட்டுவாரி.எதுவாக இருந்தால் என்ன.போறம்.லிஸ்ஸியைப் பார்க்கிறௌம்.அவளை இழுத்துக் கொண்டு ராக்கெட்டில் பூமிக்கு திரும்பறம்.
அங்கே போனபோது-
அவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.ஆனால் ஒரு குழப்பம் என்ன வென்றால் அங்கே மணமகன் யார் என்று பார்க்க முடியவில்லை.
நேராக அவளிடம் போனான்.
"இங்கேயூம் வந்து விட்டாயா ஜார்த்திக்.பார்த்து.இங்க உள்ளவங்க எல்லாம் பூமி மனுஷங்க மாதிரி கிடையாது.வெட்டிருவாங்க"
"நாங்களும் தில்லாதான் வந்திருக்கம்.சொல்லுங்க மணேஷ்"என்றான்.
மணேஷ் பொறுமையாக அவனது காதலை பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா அளவூக்கு விரிவாக விளக்கினார்.அதன் சாராம்சம் இதுதான்.பிரபஞ்சத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கறப்ப இவன் ஏன் லிஸ்ஸி லிஸ்ஸின்னு உருகறான் என்பதுதான்.
அப்போது சில பெண்கள் வந்தார்கள்.
"இவனோட லவ் இத்தனை வலுவானதுன்னு இப்பதான் புரியூது.இத்தனை வலுவான காதல்னு சொல்றதுக்கு நானுரறுபக்க வசனம் பேசினதுக்கு ஒரு கிஸ் கொடுத்து புரிய வைச்சிருக்கலாம்.என்ன பண்றது எங்க லிஸ்ஸி கொஞ்சம் ஆர்த்தடாக்ஸ்.சரி உங்க ரெண்டு பேருக்கும் நாளைக்கே கல்யாணம்.இங்க ஒரு சர்ச் மாதிரியான புராதன கோவில் இருக்கு.ஆனா கல்யாணம் சிம்பிளாதான் இருக்கும்.விருந்துதான் பலமா இருக்கும்.அதுதான் எங்க கலாச்சாரம்"
"கலான்னதும்தான் ஞாபகம் வருது.கலாமாஸ்டர் நாளைக்கு பாட்டு சீன் சூட்டிங் இருக்குன்னு சொல்லியிருக்கார்.ஜார்த்திக் நான் கிளம்பறேன்"
"இருங்க சார்ர்ர்ர்..லிஸ்ஸி எனக்கே எனக்குன்னு கிடைக்கப் போறா.இதை ஒரு சயன்ஸ்பிக்ஷன் படமா எடுத்தா நீங்கதான் படத்துக்கு காமரா மேன்.ரொம்ப டிராலி ஷாட் எல்லாம் வைக்கக் கூடாது"என்று சிரித்தான்.
 மறுநாள்-
திருமணம்.அந்த பெண்கள் லிஸ்ஸியை அலங்கரித்து அழைத்து வந்திருந்தார்கள்.அப்போது மணேஷூக்கு பொறி தட்டியது.மெல்ல அவன் காதைக் கடித்தார்.
"டேய் பையா.என்னடா இது.கல்யாணத்துக்கு ஒரே பொண்ணுங்க கூட்டமா இருக்கு.ஆம்பிளைங்களே யாரையூம் காணம்.லிஸ்ஸிக்கு அப்பா மாமா தாத்தான்னு யாரும் கிடையாதா"
"அத விடுங்க சார்.எனக்குன்னு லிஸ்ஸி கிடைக்கப் போறா சார்.ஓடிட்டே இருக்கற போது எதிர்க்க வர்ற ஏதாவது ராக்கெட்டுல ஏறினம்னா ஒரு திருப்பம் வரும்னு நீங்க சொன்னது நடக்கப் போவூது சார்ர்ர்ர்.."என்று குதுரகலித்துக் கொண்டிருந்தான் ஜார்த்திக்.
அப்புறம்...
மோதிரம் மாற்றிக்கொண்டார்கள் ஜார்த்திக்கும் லிஸ்ஸியூம்.
அதன்பின்-
அவர்களை தனியறைக்கு மாற்றினார்கள்.
"லிஸ்ஸி ஐ ஐஸ்ட் த்ரில்ட்டு.அடுத்தது அதுதானா..நம்மை தனியா விட்டுட்டாங்களே"
"இல்லை இப்ப வருவாங்க"என்றாள் லிஸ்ஸி.
அந்த பெண்கள் உள்ளே தடாலடியாக வந்தார்கள்.
"எ..என்னது லிஸ்ஸி எல்லார் கையிலயூம் ஒரு பட்டாக்கத்தி இருக்கு.ஏதாவது சாங்கியம் கீங்கியம் செய்யப் போறாங்களா.."
"ஆமா.ஒண்ணு கவனிச்சிங்களா ஜார்த்திக்.உங்க கூட வந்த மணேஷ் கூட கேட்டாரே.இந்த கிரகத்துல ஆம்பிளைங்களே தட்டுப்படலைன்னு..இப்படித்தான் கல்யாணம் முடிஞ்ச பத்தாவது நிமிஷமே நாங்க ஆம்பிளைங்களை கொன்னுருவம்"
"ஏய் பொய் சொல்ற.ச்சும்மா பயமுறுத்தறதான'
"சே.சே.பின்ன எப்படி எங்களோட இனவிருத்தின்னு கேட்கலையே.உங்கள டிஷ்ஷூவை எடுத்து அந்த செல்லை பெண்களோட செல்லோட இணைச்சி செயற்கையா கரு உண்டாக்கி லாப்ல வளர்த்துருவம்.அதுவூம் பெண்சிசுவாகத்தான் இருக்கனும்.ஆணா இருந்தா ப்ரீடிங் பிராசஸ் போதே கொன்னுருவம்.செத்துடு கண்ணா.பிரபஞ்சத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கறபோது இந்த லிஸ்ஸி கையால சாகனும்னு எழுதியிருக்கு உனக்கு"என்று அவன் கழுத்தை சிரித்துக் கொண்டே வெட்டத் துவங்கினாள் லிஸ்ஸி.

                                                  ----------------------
Previous
Next Post »

1 comments:

Click here for comments
June 27, 2017 at 2:44 PM ×

I've read your Anamika novel and short story collection. What's the name of your monthly novel (pocket novel)? Is it available now? Also the name of mini 10 week thordarkathai in Dinamalar? Is it available to read?

Congrats bro சரவணன் you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar