தொடர்கதை: "அவள்-இவள்..." -விஜயநிலா


                                                                         (5)
 லேசாக கண்விழித்துப் பார்த்த அஞ்சலிக்கு தான் தவறான இடத்தில் வந்து மாட்டிக்கொண்டு விட்டோம் என்று தோன்றியது.தப்பிக்க முடியூமா?எதற்காக என்னை இந்த கிரிட்டிகல் கேர் யூனிட்டில் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்.என் வலது உள்ளங்கையில் ரேகைதானே அழிந்தது.அதனாலென்ன.நான்தான் நன்றாக இருக்கிறேனே.
இல்லை.அப்புறம் ஏன் நான் மயக்கத்திற்கு போனேன்.என்னவோ தப்பு.ப்ளட் டெஸ்ட்டிற்கு என் உடலிலிருந்து இரத்தம் எடுக்கப் பயன்படுத்திய சிரிஞ்சில் ஏதாவது மயக்க மருந்து தடவியிருந்திருப்பார்களா?
சே.சே.இருக்காது.
ஆனால் என்னவோ தப்பு என்று மனதிற்குள் நிரடலாக இருக்கிறதே.நான் இங்கே அட்மிட் ஆகியிருப்பது வருணுக்குத் தெரியூமா?ஏன் அவர் வந்து என்னைப் பார்க்கவில்லை?
மெல்ல எழுந்து உட்கார முயற்சி செய்தாள்.
அப்போது உள்ளே ஒரு டூட்டி டாக்டர் வந்தாள்.ஒல்லியாக உயரமாக இருந்தாள்.தலைமுடி பொன்னிறம் கலந்த மாதிரி இருந்தது.கழுத்தில் ஸ்டெத் மாட்டியிருக்கவில்லை.கைகளற்ற ரவிக்கை அணிந்திருந்தாள்.கோட் மாட்டிக்கொள்ளாமல் சாதாரண பெண் போல இருந்தாள்.அஞ்சலியின் பெட்டின் கால்மாட்டில் மாட்டியிருந்த பேட் எடுத்து எழுதியிருந்த பிரிஸ்கிரிப்ஷன்களைப் படித்து விட்டு உதட்டைப் பிதுக்கினாள்.
"ஹாய்..ஹவாயூ..நல்லா இருக்கிய அஞ்சலி"என்றாள் பளீர் சிரிப்புடன்.
"எனக்கு என்ன ஆச்சு டாக்டர்.என் கைல ரேகை மட்டும்தான காணாமப்போச்சு.இதுக்கு எதுக்கு இத்தனி சீரியசான ட்ரீட்மன்ட்"
"ஒண்ணும் பயப்படத் தேவையில்ல.எல்லாம் சரியாயிடும்"என்றாள் அலட்சியமாக.அப்போதுதான் ஞாபகம் வந்தது அஞ்சலிக்கு.இதற்கு முன் இருந்த லேடிடாக்டருக்கும் ஒரு கையில் ரேகைகள் இல்லாமல் இருந்ததே.
"டாக்டர்.நேத்திக்கி இங்க வந்த லேடிடாக்டருக்கும் வலது உள்ளங்கையில ரேகை இல்லாம இருந்ததே"
"நேத்திக்கா..யூமீன் யெஸ்டர்டே அஞ்சலி"
"ஆமா.நேத்து என்னை இங்க அட்மிட் பண்ணப்ப ஒரு பொண்ணு இருந்தா.அவ லேடிடாக்டராகத்தான் இருக்கனும்"
"மைகாட்.அது நடந்து பத்து நாளாச்சும்மா.பத்துநாளைக்கு முன்னால நீ யவனாவைப் பார்த்திருக்க.யவனா டாக்டர்தான்"
"என்னது.பத்துநாளா..நான் பார்த்தது நேத்திக்கி இல்லையா?"
"பத்துநாளா நீ இங்கதாம்மா இருக்கே"
"பத்துநாளா இருக்கேனா..அந்த டாக்டர் கையில நான் பார்த்தது.அவளுக்கு ரேகையே இல்லையே.."
"அவ வொர்க்கிங் டைம்ல கிளவூஸ் போடறது பழக்கம்.அதைப் பார்த்து பயந்திருக்கே.உனக்கு ஒண்ணும் இல்லை.எல்லா டெஸ்ட்டும் எடுத்திட்டுதான் இருக்கம்"
"பத்துநாளா டெஸ்ட் எடுத்திட்டே இருக்கிங்களா.."என்ற அஞ்சலிக்கு முதல்முறையாக உயிர்பயம் வந்தது.என்னவோ தப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.இங்கே இருந்தால் டெஸ்ட் எடுத்தே கொன்று விடுவார்கள்.முதலில் இங்கிருந்து தப்பிக்க வேண்டும்.அதுசரி.ஏன் வருண் வந்து பார்க்கவில்லை.இன்னுமா என்னை வந்து பார்க்காமல் இருக்கிறார்.அந்த வினோதியோடு..ச்சே..அந்த தாமரையோடு மீட்டிங் மீட்டிங் என்று போய்க்கொண்டிருக்கிறாரா?
வருண் டாக்டர்பிரதாப்பின் எதிரே அமர்ந்திருந்தான்.அவர் அமைதியாகப் பார்த்தபடி சொன்னார்.
"பயப்படத் தேவையில்லை.அவங்களுக்கு எந்த பிரச்சனையூம் இல்லை.இன்னும் இரண்டொரு நாள்ல வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிரலாம்"
"அவ கையில.."
"அதுல எந்த ப்ராப்ளமும் இல்லை.டிப்ரஷனால கூட சமயத்துல அப்படி ஆகும்.உடல்ல பாடி மெட்டபாலிசத்துல ஏதாச்சும் பிரச்சனையான்னுதான் சந்தேகப்பட்டோம்.அதெல்லாம் எதுவூம் இல்லை.உங்க அஞ்சலி நார்மலாதான் இருக்காங்க"
"அப்ப வர்றேன் டாக்டர்.தாங்க்ஸ்"என்று வெளியே வந்தான்.நான்காவது மாடியில் இருக்கிறது சிசியூ யூனிட்.அங்கேதான் அஞ்சலி இருக்கிறாள்.மூன்றாவது மாடியில் காரிடார் வழியாக நடந்தால் அங்கே குறுக்கே ஒரு சந்து பிரிவது போல ஒரு துணைகாரிடார் பிரியூம்.அதில் ஏறி சாய்வான பாதையில் நான்காவது மாடிக்கு சென்று விடலாம்.
சென்றான்.நான்காவது ப்ளோரை அடையூம்போது வழியில் லாபரேட்டரி இருந்தது.அதற்குள்ளிருந்து ஒரு பெண்ணின் கை நீண்டு அவனை உள்ளே இழுத்தது.
உள்ளே சன்னமான வெளிச்சம்.அந்த பெண் தன் ஆபீசில் பணிபுரியூம் தாமரை போலவே இருந்தாள்.ஒருவேளை தாமரைதானோ.
"நீ..எப்படி தாமரை இங்கே"
"நான் தாமரை இல்லை.உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்னுதான் இழுத்தேன்."
"சொல்லு.தாமரை இல்லைன்னா அப்ப நீ யாரு"
"என் பேரு முக்கியமில்லை.நான் சொல்றதை கவனமா கேட்டுக்கங்க.இன்னிக்கி நைட்டுக்குள்ள நீங்க உங்க மனைவி அஞ்சலியை வீட்டுக்கு இல்லேன்னா எங்கேயாவது கூட்டிட்டுப் போயிடுங்க.அவங்க உயிருக்கு ஆபத்து"
"என்னம்மா சொல்ற"
"ஆமா.பத்துநாளா அவளை சும்மா கிரிட்டிக்கல் கேர் யூனிட்ல படுக்க வைச்சி டெஸ்ட் எடுத்திட்டு இருக்காங்க.நாளைக்கு அவ தலையைப் பிளந்து அவளோட மூளையை படம் எடுக்கப் போறாங்க.அதுல என்னவோ சிக்கல் இருக்கு.ஏற்கனவே நாலு பொண்ணுங்க இது மாதிரி வந்து அட்மிட் ஆகி மூளையை வெளியில எடுத்ததும் உடம்பு துடிச்சி இறந்துட்டாங்க.அதை சத்தமில்லாம அமுக்கிட்டாங்க"
"இதை போலீஸ்ல ரிப்போர்ட் பண்ண முடியாதா"
"முடியாது.இவங்க பண்றது மத்திய அரசால அங்கீகரிக்கப்பட்ட ரகசிய ஆராய்ச்சி.என்னவோ தகிடுதத்தம் பண்ணி அப்ருவல் வாங்கியிருக்காங்க.ஏதாவது இதைப் பத்தி வெளியில பேசினிங்கன்னா உங்க உயிருக்கும் ஆபத்து"
"அப்ப என்ன பண்றது"
"உங்க மனைவியை கூட்டிட்டுப் போயிருங்க"
"எப்படி"
'எப்படியாவது.ஆனா உடனே செய்யனும்"
"சரி நான் போய் அஞ்சலியை பார்த்துட்டு வந்துர்றேன்"
"எதுவூம் சந்தேகப்படும்படியா நடந்துக்க வேணாம்.சும்மா பார்க்கற மாதிரிப் போய் பாருங்க"
"சரி" என்று வெளியே வந்த வருண் திரும்பினான்.
"அதெப்படி நீ என் ஸ்டாஃப் தாமரை மாதிரியே அச்சு அசலா இருக்கே"என்றபடி உள்ளே பார்க்க அந்த பெண்ணைக் காணவில்லை.
இங்கேதானே இருந்தாள்.என்னிடம்தானே பேசிக்கொண்டிருந்தாள்.எங்கே போய் விட்டாள்.இந்த லாபரேட்டரிக்கு வேறு ஏதேனும் எக்ஸிட் இருக்கிறதா?
யோசித்தவாறே நின்று கொண்டிருந்த வருணை தள்ளிக்கொண்டு வருவது மாதிரி ஒரு குள்ளமான குண்டான பெண் உள்ளே வந்தாள்.
"ஆரு..இங்கன எல்லாம் வரக்கூடாது.இது ரெஸ்ட்ரிக்டட் ஏரியா.தெரியூமா சார்"என்றாள்.
"இங்க இப்ப ஒரு பொண்ணு என்கூட பேசிட்டு இருந்தாங்க.திடீர்னு காணலை.அதான்.இந்த லாபுக்கு வேற ஏதாவது வழி இருக்கா எமர்ஜன்சி எக்ஸிட் மாதிரி.."
"அதெல்லாம்இல்லை.இந்த ஒரு வழிதான் இருக்கு.சட்டுனு வெளியில போங்க சார்.டாக்டர்ஸ் வர நேரமாச்சு.என்னைத்தான் திட்டுவாங்க"
வெளியே வந்தான்.சிசியூ யூனிட்டிற்கு வந்தான்.அங்கே அனுமதி பெற்றுவிட்டு உள்ளே எட்டிப் பார்த்தான்.
அஞ்சலி மலங்க மலங்க விழித்தபடி படுத்துக் கொண்டிருந்தாள்.கண்ணாடி சன்னல் வழியாக சைகை காண்பித்தான்.
அவள் பார்த்த மாதிரி தெரியவில்லை.அங்கு வெளியில் அமர்ந்திருந்த டூட்டி டாக்டரோ நர்ஸோ எழுந்து போனதும் உள்ளே வந்தான்.
"அஞ்சலி எழுந்திரி"என்றான்.
"வந்துட்டிங்களா.நீங்க வந்து என்னைய பார்க்கவே இல்லையே.பத்து நாளாச்சாம் நான் இங்க அட்மிட் ஆகி.என்னால நம்பவே முடியலைங்க"
"பேசறதுக்கெல்லாம் நேரமில்லை.வா அஞ்சலி போவம்"என்று  அவளை ஏறக்குறைய இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.யாரும் கவனித்த மாதிரி தெரியவில்லை.
"அஞ்சலி சில விஷயங்கள் கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு.தாமரை மாதிரியே ஒருத்தியை இங்க லாப்ல பார்த்தேன்.நீ கூட தாமரை மாதிரியே ஒருத்தி உன் கூட படிச்சாள்னு சொன்னியே.அவளா இருப்பாளா"
"அவ மெடிகல் படிக்கலையேங்க.இது வேற யாராவதா இருக்கும்.அந்த பக்கமா போயிரலாம்.அங்க பின்னாடி போறதுக்கு ஒரு வழி இருக்கும்"
"வெயிட் எ மினிட்.உனக்கெப்படி இங்க வழியலெ;லாம் தெரியூம்"
திணறினாள்.
"அ..அது வ..வந்து..நான் சிசியூல மயக்கத்துல கிடந்தப்ப கனவூல இந்த ஹாஸ்பிடல் முழுக்க நடந்து போறேன்.லாபரேட்டரி அப்புறம் இதோ இப்ப நாம நடந்திட்டிருக்கமே இந்த இடம் அப்புறம் இடது பக்கம் திரும்பினா ஹாஸ்பிடலோட பின்புறத்துக்குப் போற இடம் வரும்னு கனவில கண்டேன்.கனவூ இல்லை.நிஜம் மாதிரியே இருந்துச்சி"
"சரி அதை அப்புறம் டிஸ்கஸ் பண்ணிக்குவம்.வா"
அவர்களை யாரும் கவனித்த மாதிரி தெரியவில்லை.கீழே பின்புறமாக இறங்கி வந்து அங்கிருந்த ஒரு டாக்சியை அழைத்தபோது பத்திரிகை படித்துக் கொண்டிருந்த டிரைவர் எழுந்து உட்காரந்து கொண்டு டாக்சியை உறும விட்டான்.
அவர்கள் எதுவூம் பேசாமல் அமர்ந்து கொண்டார்கள்.அஞ்சலி பயந்து போன மாதிரி காட்டிக் கொள்ள விரும்பாமல் தைரியமாக இருப்பது போன்று நடிக்க முயன்று தோற்றாள்.
"எங்க சாரு போகனும்"
சொன்னான்.வீட்டிற்கு போக விருப்பமில்லை வருணுக்கு.காட்டேஜிற்கு போகலாம் என்று நினைத்து இடத்தை மாற்றிச் சொன்னான்.
"சாpயா சொல்லு சாரு.நைட் எல்லாம் துரங்க முடியாம வண்டி ஓட்டி உடம்பெல்லாம் அலுப்பா இருக்கு"
"இசிஆர் பக்கமா போ.சொல்றேன்"
 அவர்களது காட்டேஜ் வந்ததும் இறங்கிக் கொண்டு பணத்தை கொடுத்து டாக்சியை அனுப்பி விட்டு வந்தான் வருண்.அஞ்சலி உள்ளே போய் தளர்வாக நுரைமெத்தையில் அமர்ந்திருந்தாள்.
"என்னாச்சு அஞ்சலி.உடம்பு இன்னும் சரியாகலையா"
"இன்ஃபாக்ட் எனக்கு உடம்புக்கு ஒண்ணுமே இல்லைங்க.டாக்டர்தான் அங்க ரொம் பயமுறுத்திட்டாரு"
"உன்னை டாக்டர் பயமுறுத்தினார்.என்னை ஒரு லேடி லாப்ல பயமுறுத்திட்டா"
"என்ன சொல்றிங்க வருண்"
"ஆமா.உன்னை அங்கேயே விட்டிருந்தா உன்னை டெஸ்ட் பண்றதுக்காக உன் தலையை திறந்து மூளையை வெளியில எடுத்திருந்திருப்பாங்களாம்.சொல்றா அவ"
"உவ்வே"என்றாள் அஞ்சலி.சிரித்தான் வருண்.
"சரி ஏதாவது சாப்பிடறியா.கேட்டரிங்ல சொல்லி கொண்டு வரச்சொல்றேன்"
"வேண்டாம்.சமைக்கறதுக்கான சாமானெல்லாம் இருக்கில்ல.நான் முதல்ல ஸ்ட்ராங்கா காபி போட்டுர்றேன்.தலைவலி சரியாகிடும்.அப்புறம் மெல்ல சாப்பிட்டுக்கலாம்"
"தலைவலிக்குதா.டெஸ்ட் எடுத்திட்டாங்களா அதுக்குள்ள.ஏதாவது எம்ஆர்ஐ எடுத்திட்டாங்களா"என்று அருகே வந்து அவளை நெற்றிப்பொட்டில் கை வைத்துப் பார்த்தான்.அவளை அப்படியே தன் இடுப்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.அவள் கண்களை மூடிக்கொண்டாள்.கண்களை மூடிக்கொண்டே அவன் கைவிரல்களை தன் கைகளில் வைத்து வருடினாள்.மெல்ல அந்த விரல்களில் சொடக்கு எடுத்தாள்.அதன்பின் மெல்லமாய் கண்களைத் திறந்து பார்த்த அஞ்சலி லேசாய் அதிர்ந்து போனாள்.
"எ..என்ன ஆச்சு அஞ்சலி"
"வ..வந்து உங்க..கை.."என்றாள்.
"என் கைக்கு என்ன ஆச்சு நல்லாத்தானே இருக்கேன்"
"இல்லே.உங்க வலது கையில பாருங்க..ரேகையே இல்லை"
"அட..ஆமா இப்பத்தான் நானே கவனிக்கறேன்.எனக்கும் அலர்ஜி ஏதாவது வந்திருக்குமோ..இரு நல்லா சோப்பு போட்டு கைகழுவிட்டு வர்றேன்"என்று கிளம்பின வருணை தடுத்தாள். இடது உள்ளங்கை நன்றாகத்தான் இருந்தது.வலது உள்ளங்கையை கண்ணாடியில் காண்பித்துப் பார்த்தான்.வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தான்.ரேகைகள் சுத்தமாய் இல்லை.
"இருங்க நான் பார்க்கறேன்.கிள்ளறேன் வலிக்குதா பாருங்க"
"ஸ்.ஆ..வலிக்குது.அதெல்லாம் ஒண்ணுமில்ல.நாம வேணும்னே கற்பனை பண்ணி பயப்படறம்னு நினைக்கறேன்.சரியாப்போயிடும்பாரேன்"என்ற வருண் சற்று நிலை தடுமாறின மாதிரி பின்னுக்கு நகர்ந்தான்.அவன் வாய் லேசாக கோணிக்கொண்ட மாதிரி இருந்தது.

"அஞ்சலி எனக்கு என்னமோ ஆவூது பாரு"என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் வாயோரம் இரத்தம் வழிந்தது.அதை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு அந்த வழியூம் இரத்தத்தை நக்கிக் குடிக்க வேண்டும்போல முதல்முறையாய் ஆசை வந்தது.அவன் கழுத்தை கைகளால் வளைத்துக் கொண்டு அந்த இரத்தத் துளிகளின் அருகே முகத்தைக் கொண்டு போனாள்.(தொடரும்)
Previous
Next Post »