'இது
கனவில்லை என்பதை
அவ்வப்போது
அவளின் ஊடல்தான்
நிரூபித்து வருகிறது'

'அவளது ஃப்ளாட்டிலும்
கோலம் போடுவதென்னவோ வேலைக்காரிகள்தான்
அப்புறம்
அவள் வந்து
கோலத்தை தொட்டதும்
புத்தம் புதிதாகி விடுகிறது'

'வாஸ்து போறாத
ஃப்ளாட் என்றுதான்
வாங்கும்போதே எச்சரித்தார்கள்
எதிர் ஃப்ளாட்டில்
ஒரு தேவதை குடிவந்ததும்
வாஸ்து தோஸ்தாகி விட்டது'

'ராக்கிங் செய்தால்
புகார் கொடுக்கலாமாம்
அவள் கண்கள்
என் இதயத்தை
ராக்கிங் செய்வதை
எங்ஙூனம் புகார் கொடுப்பது?'

'கவிதை எழுத எழுத
கனவூகள் சுகமாகின்றன
எழுதிய கவிதையில்
அவள் வந்ததும்
கனவூகள் நிஜமாகின்றன'

'10ம் வகுப்பு
ரிசல்ட் வரும்போதெல்லாம்
பள்ளிக்கூடத்து
சினேகிதியின் முகம்
வந்து போவதை
தவிர்க்க முடிவதில்லை'

'அவள்
பார்க்காதபோது
அவளைப் பார்ப்பதில்தான்
த்ரில் அதிகமென்பதால்தான்
பார்க்காதபோது
அவளும் பார்க்கிறாள்
ஓரக்கண்ணால்'

'ரோஜாப்பூக்களைப்
பார்க்கும்போதெல்லாம்
தோன்றுவது இதுதான்
பூக்களை பெண்களும்
முட்களை ஆண்களும்
சமமாகப் பிரித்து

எடுத்துக் கொள்கின்றனர்'
Previous
Next Post »