'காமடி த்ரில்லர்
சைலன்ட் த்ரில்லர்
மதுரப்பக்கத்து த்ரில்லர்
கதை திரைக்கதை வசனமே இல்லாம த்ரில்லர்
இப்படி
எந்த படம் வேணும்னாலும்
எடுத்துக்கங்கப்பா
ஆனா
சூப்பரா இருக்கு
கோக்கும் பாப்கார்னும் பர்கரும்
அப்புறம்
நாலாவது வரிசையில
திரும்பித் திரும்பிப் பார்த்த
பொண்ணும்
ஆனா படம்?

அதை யாரு பார்த்தா"

'இன்னும்
எத்தனை காலம்தான்
இலவசங்களை வாங்கித் தொலைப்பது
வாசலில் நிற்கும்
இராப்பிச்சை குரல் கூட
ஏளனம் செய்வது போலிருக்கிறது'


'எம்பிபிஎஸ் பட்டமும்
எம்டியூம் இன்னும் பிற டிப்ளமாவூம்
பத்து வருடங்களில் முடித்தாலும்
தெருமுக்கில் கிளினிக்
வைத்து
முப்பது ரூபாய்க்கு மேல்
வாங்க முடியவில்லை
ஐடி கம்பெனியில்
அறுபது எழுபது வாங்கும்
விடலைகள் மீதுள்ள கோபத்தில்
கிடைத்த தொற்றல் கிழவரின்
புஜத்தில்
சிரிஞ்சியை அழுத்திக் குத்தினார்
லோக்கல் டாக்டர்'

'யாருமே இல்லாத
காட்டில் சிக்கினால் மட்டுமல்ல
இன்றைக்கு
யாருமே அழைக்காவிடில்
செல்ஃபோனை பார்க்கும்போது கூட
தனிமையாக
பயமாக இருக்கிறது'

'எத்தனை தரம்
தேடினாலும் கிடைப்பதேயில்லை
எங்கேயோ எப்போதோ
தொலைத்துவிட்ட அறியாமை'

'அரக்கப்பரக்க கிளம்பி
அசந்து களைத்து
வருவதில்
நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றே
பெரும்பாலான நாட்கள்
தலையணைகள் பேசிக்கொள்கின்றன'

Previous
Next Post »