கால்சென்டர் யூவதிகளும் கார்ப்பரேட் குரங்குகளும்...



  எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.தினம் ரயில் ராதிகாவூம் ரம்யாகிருஷ்ணனும் வீட்டுக்கு வந்து விடுவார்கள்.ர.கி. கலக்டராக இருந்தாலும் பயந்த கரப்பான்பூச்சி மாதிரி விழித்துக் கொண்டு நிற்பார்.சோலையம்மாவூம் மதன் மச்சானும் கிச்சுக்கிச்சு மூட்டுவார்கள்.
 "ந்தா..உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கங்க" என்று ராதிகா ரிப்பீட் டயலாக்குடன் பகுத்தறிவூ ஆன்மீக ஜோதிட தந்திர எபிசோடை தந்து கொண்டே இருப்பார்.அதிலும் ஒரு நாள் ஒரு டயலாக் வந்தது.
"அப்படி இப்படி கிடந்தாதான் அது வீடு.அசையாம கிடந்தா அது மாடு"
 இந்த டயலாக்கிற்கு இன்று வரை அர்த்தம் புரியவில்லை.இலக்கிய பிஸ்கோத்துகள் கரம் மசாலா சீரீயல்களுக்கு வஜனம் எழுதினால் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.
 ஸாரி நான் டாபிக் மாறுகிறேன்.
 முதலில் ஒரு சின்ன குறுஞ்செய்தியில்தான் பிரச்சனை ஆரம்பித்தது.
 உங்களது அடையாள அட்டையூம் முகவரிச் சான்றதழையூம் சமர்ப்பிக்குமாறு டெலிகாம் துறை ஆர்டர் விட்டிருப்பதால் உடனே இரண்டு நாட்களுக்குள் இதனை செய்து முடிக்கவூம் என்று வோடஃபோன்காரர்கள் எஸ்எம்எஸ்ஸியிருந்தார்கள்.
 அவசரவேலையெல்லாம் இல்லை.இரண்டு மாதம் டைம் கொடுத்தாலே நாமெல்லாம் கடைசிநாளில் போய் கடைசி ஆளாக க்யூவில் நிற்போம்.இரண்டாவது நாள் லோக்கலில் உள்ள வோடஃபோன் மினி ஸ்டோரில் போய் சொன்னால் அங்குள்ள பெண் உங்க சிம் பழசாயிருச்சி என்றார்.
 சிம்மா சிம்புவா என்று கேட்க நினைத்து அடக்கிக் கொண்டேன்.அப்புறம் அங்கே உட்கார்ந்திருந்த ஒரு அனிருத்..ஸாரி ஒரு ஆசாமி நீங்க போனஜென்மத்து சிம் ஏதும் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார்.
 அப்படின்னா?
 புரிந்தது.
 என்னிடம் உள்ள சிம் பிபிஎல் சிம்.இதை வாங்கி பதினேழு வருடங்கள் ஆகிறது.அப்புறம் பிபிஎல்லை ஹச் நாய் வந்து தின்றதும் ஹச்சில் இருந்தேன்.அதன்பின்தான் ஹச் போய் இப்போது வோடஃபோன்.
 புது சிம் தர்றௌம்.ஆனா குறைந்தபட்சம் ஏதாவது ஒரு அமவூன்ட்டிற்கு ஈசி பண்ணனும் அப்பதான் இரண்டு மணி நேரத்துல ஃபோன் வேலை செய்யூம் என்றார் அந்த பெண்.
 குறைந்தபட்சம் என்றால்?
 ஒரு இருபது ரூபாய்க்கு பண்ணிடுங்க என்றார்.
 அப்புறம் வீட்டுக்கு வந்தால் ஃபோன் மந்தமாகத்தான கிடந்தது.அவூட்கோயிங்கும் இல்லை.இன்கமிங்கும் இல்லை.கடன்வாங்கிய ஆசாமியாக இருந்தால் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.அப்படி ஏதும் இல்லை.எனது வோடஃபோன் எண் எனக்குத் தேவையாக இருந்தது.காரணம் நெட்பாங்க்கிங் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு இந்த நம்பருக்குத்தான் ஓடிபி அனுப்புவார்கள்.
 மறுநாள் போய் கேட்டபோது அந்த பெண் தனது ஃபோனிலிருந்து மேலிடத்திற்கு முயற்சித்தார்.அவரும் தமிழுக்கு எண் 2ஐ அழுத்தவூம்.சால்ஜாப்புக்கு எண் 10ஐ அனுப்பவூம் தட்டிக்கழித்தலுக்கு எண் 11ஐ அழுத்தவூம் என்பது போலத்தான் முயற்சிக்க வேண்டியிருந்தது.
 இது வேலைக்கு ஆகாது என்று புரிந்து போனது.
 இன்னொரு ஏரியாவை சிட்டிக்குள் இருக்கும் இடத்தைச் சொல்லி அங்கே போனா முடிச்சிக் கொடுத்துடுவாங்க என்றாள்.
 எடுரா வண்டியை.
 அங்கே போனால் கூட்டம் விலையில்லா சாமான்கள் வாங்க வந்தவர்கள் போல முண்டியடித்தது.உள்ளே விட செக்யூரிட்டி ஆசாமி மறுத்தார்.
 முதல்ல டோக்கன் வாங்கனும் என்பதுதான் அங்கே முதல் சம்பிரதாயமாம்.பாதியளவூ ஏடிஎம் மெஷின் போன்ற இயந்திரத்தில் வேலை செய்யாத செல்ஃபோன் எண்ணைக் கொடுத்து டோக்கன் வாங்கினால் டோக்கன் எண் 140.
 வரிசையாக நாலைந்து பெண்களும் அதற்கு எதிரே ஆண்களுமாக புல்மேக்அப்பில் ஆளுயர தம்மாத்துரண்டு மேசையில் சன்னமான குரலில் கஸ்டமர்களை கஷ்டமர்களாக்கிக் கொண்டிருந்தார்கள்.
 என் முறை.
 விஷயம் சொன்னதும் அந்த நபர் சொன்னார்.
"மினி ஸ்டோர்ல எல்லாம் முடியாது சார்.உங்களது ப்ரீபெய்டு நம்பர்.இதை நாங்க வேணா போஸ்ட்பெயிடா மாத்தித் தர்றௌம்.பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்னா இன்னும் அஞ்சு கிலோமீட்டர் துரரத்துல இருக்கற வோடஃபோன் ஹெட் ஆபீஸ் போங்க"
 அந்த வோடஃபோன் ஹெட் ஆபீஸில் நிசப்தம்.
 ஆளே இல்லை.
 ஆனாலும் மெஷினிடம் கெஞ்சிக் கூத்தாடி டோக்கன் வாங்க வேண்டுமாம்.
 வாங்கி விட்டு சென்றால் அங்குள்ள பெண் சொன்னார்.
 நேற்று வாங்கிய புது சிம் வேலை செய்யாது.இன்னொரு புது சிம் தர்றௌம்.ஆனா ரூ 175 தந்துரனும்.இதுவரை அக்கவூன்ட்ல உள்ள பணத்தை ரொம்ப கவனமாக 'காந்திக்கணக்குக்கு" மாத்திருவம்.அந்த பேலன்ஸ் பணம் திரும்பக் கிடைக்கHது என்றார்.
 ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு மூணு ரூபா கால் டிராப்பிற்கு தருவதற்கே அழுது புரண்டு மண்ணுல விழுந்து அலறி டிராய்க்கு எதிரா கேஸ் போட்டிருக்கற செல்ஃபோன் கம்பெனிகள்தானே.சரி போகட்டும்.பேலன்ஸ் பணம்  முன்னுரரு ரூபா போனா பரவாயில்லைன்னு காத்திருந்தேன்.
 இரண்டு நாட்கள்.
 117க்கு கால் பண்ணி நாந்தான் இன்னாருன்னு சொல்லி என்னை அடையாளப்படுத்திக்கனுமாம்னு நைட் 12 மணிக்கு எஸ்எம்ஸ் அனுப்பறான் வோடஃபோன்காரன்.அதற்கு மறுநாள் முழுக்க 117க்கு ஃபோட்டா போகவேயில்லை.
 அதற்கு மறுநாள் ஒரு கால்சென்டர் பெண் எடுத்தாள்.
 நீங்கதானே?
 இது உங்க அட்ரஸ்தானே?
 இது உங்க நம்பர்தானே?
 அது நானே கொடுத்த ஜெராக்ஸ் காப்பி.அதை நிரூபிக்கவா இத்தனை பம்மாத்து என்று இளையராஜா மாதிரி எரிச்சல்படாமல் பதில் சொல்ல நம்பர் ஆக்டிவேட் ஆகி விட்டது.
 ஆனா என்ன ஒரு சிக்கல்தான அக்கவூன்ட்ல பேலன்ஸே இல்லை.
 புதுநம்பர்(அட அதே நம்பர்தான்) வாங்கினா ஒரு ரூபா ரெண்டு ரூபான்னு அக்கவூன்ட்ல போட்டு விட மாட்டாங்களா? இதுக்கு அந்த ஏர்டெல் பொண்ணு பரவாயில்லையே.புதுப்படத்தை எல்லாம் செல்லுல காட்டுமாமே!
 சரின்னு ரீசார்ஜ் பண்ணலாம்னு பேடிஎம் மாதிரி தர்ட்பார்;ட்டி வைப்சைட் வழியா ரீசார்ஜ் அனுப்பி ஜோரா ஃபெயில் ஆகுது.ஆனா பணம் வாலட்டுக்கு வந்திருது.
 அப்புறம் இதென்னடா கஷ்டகாலம்னு வோடஃபோன் வெப்சைட் வழியாகவே ஐடி கிரியேட் பண்ணி அங்கிருந்து ரீசார்ஜ் பண்ணினா பணம் பாங்க்ல டெபிட் ஆகுது.ஆனா ரீசார்ஜ் ஆக மாட்டேங்குது.அதான் சொன்னாங்களே.அந்த காந்திக்கணக்குக்குத்தான் நம்ம பணம் எல்லாம்; போகுதுன்னு புரிஞ்சது.
 வோடஃபோன் கஸ்டமர் கேரை கூப்பிட்டு பேசனும்னா ரீசார்ஜ் பண்ணினாதான் முடியூமாம்.சும்மா தேமேன்னு 199ஐ கூப்பிட்டா அதில அவங்ளோட ப்ளான்களைப் பத்திதான் கேட்டுக்க முடியூம்.
 இன்னொரு நம்பர் பிஎஸ்என்எல் இருக்கு.இதையே முழுசா பயன்படுத்திக்கலாம்கற முடிவூக்கு வந்தபோது இன்னொரு ப்ராப்ளம் வேற டெமைன்ல.
 கார் இன்சூரன்ஸ் இந்த வாரம் ரின்யூவ் பண்ணனும்.அதுக்கு டீலரே ஒரு அமவூன்ட் கோட் பண்ணியிருந்தான்.ஹூன்டாய்காரன் கிட்ட வந்து தோள் கை போட்டு பேசுவான்.ஆனா ஆள் அசந்து மறந்தா பாக்கெட்டோட பணத்தைப் பிடுங்கிடுவான்கறது முந்தைய அனுபவம்கறதால கிராஸ் செக் பண்ணிக்கலாம்னு ஐசிஐசிஐ லாம்பார்டுக்கு வெப்சைட்ல போய் ரிக்வெஸ்ட் கோட் கொடுத்தா நம்பருக்கு வா.பேசுங்கறான்.
 பேசினா பாதி விஷயம் ஐசிஐசிஐக்காரனுக்குப் புரியவேயில்லை.கான்வென்ட்ல படிச்ச கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்றான்.
 அப்புறமா நானா புரிஞ்சிக்கிட்டது ஆன்லைன் இன்சூரன்ஸ் பத்திதான் அவனுக்குத் தெரியூம்.ஆஃப்லைன் இன்சூரன்ஸ் பத்தி இவனுக்குத் தெரியாதுன்னு டீலரையே கூப்பிட்டா பவ்யமாக வந்து செக் வாங்கிட்டு போயிட்டான்.
 இந்த கேப்ல மெயிலா போட்டுத் தள்ளறான் ஐசிஐசிஐ லாம்பார்டுகாரன்.அப்பா சாமி இன்சூரன்ஸ் ரின்யூவ் பண்ண செக் கொடுத்தாச்சு.டீலரே வாங்கிட்டுப் போயிட்டான்.இதான் செக் நம்பர் இத்தோட ஆளை விட்ருன்னு சொன்ன இன்றைக்கு ஒரு ஆள் ஐசிஐசிஐல இருந்து ஃபோன் பண்ணி-
'என்ன கையப் புடிச்சி இழுத்தியா" ரேஞ்சுக்கு இன்சூரன்;ஸ் ரின்யூவ் ஆகலைன்னு புகார் பண்ணினிங்களாமே.உங்க பாலிசி நம்பரை தேடிட்டிருக்கறான்.
 அப்புறம் மறுபடி இளையராஜா ஆகாம பொறுமையா அவனுக்கு விளக்கி தபாருப்பா ஆளை விட்ருன்னதும் 
 அடுத்த ப்ராப்ளம் எதிரே வந்து நிக்குது.
 கோடக் மஹிந்திரா பாங்க்ல தேவையில்லாம ஒரு அக்கவூன்ட் ஆரம்பிச்சிட்டேன்.சரி என்ன பேலன்ஸ் இருக்குன்னு நெட்பாங்க்ல போய் பார்ப்பம்னு  லான்இன் செய்தால் கர்மசிரத்தையாக டைனமிக் ஆக்சஸ் கோடு எல்லாம் (இதே வோடஃபோன் எண்ணுக்குத்தான்) அனுப்புகிறார்கள்.டைனமிக் ஆக்சஸ் கோடு போட்டு லாக் இன் செய்ய முயன்றால் அப்படியே அலாக்காக துரக்கிக் கொண்டு போய் லாக் அவூட் செய்து விடுகிறார்கள்.
  சரின்னு கோடக்கோட கால்சென்டருக்கு ஃபோன் போட்டா தமிழுக்கு என்னத்தையோ அழுத்தவூம்னு சொல்றாங்க.ஆனா அந்த நம்பரை அழுத்தினாலும் சுமார் இங்கிலீஷ்ல ஒரு லேடி வந்து என்ன வேணும்கறாங்க.
 இதாம்பா விஷயம்னு ப்ளாஷ்பேக் சொல்லி முடிச்சதும் ஸ்கிரீன் ஷாட் இருக்கான்னு கேட்கறா.சிம்புகிட்ட சொல்லிருவேன்னு மிரட்டலாமான்னு கூட யோசனை வந்துச்சு.
 அதான் லாக் அவூட் ஆகிடுச்சே.எப்படி ஸ்கிரீன் ஷாட் எடுக்கறது.
 மறுபடி போய் முயற்சி பண்ணு.
 சிஆர்என் நம்பர் போடு.
 பாஸ்வேர்டு போடு.
 டைனமிக் ஆக்சஸ் கோடு கொடுப்பம்.
 லாக்இன் ஆகாம லாக்அவூட் பண்ணிக்கோன்னு வெளியத் துரக்கிப் போடுவம்.இங்கனதான் நீ ஸ்கிரீன் ஷாட் எடுக்கனும்னா அந்த பொண்ணு.
 இங்கதான் மெடுல்லா ஆப்லங்கேட்டா இருக்குன்னு சொல்ற மாதிரி.
 இருங்கடி..சிம்பு இல்லைன்னா அனிருத்கிட்ட சொல்றேன்னு முனகிட்டே ஃபோனை வைச்சிட்டேன்.
 இதில என்ன ஆச்சர்யம்னா கோடக்கால்சென்டர் யூவதிகிட்ட பேசினது ரீசார்ஜ் செய்ய முடியாத அதே வோடஃபோன் நம்பர்ல இருந்துதான்.
 இனி வோடஃபோனுக்கு அவூட்கோயிங் கிடையாதுன்னு வைச்சிக்க வேண்டியதுதான்.
 ஆனா ஒப்புக்குச்சப்பானியா பிஎஸ்என்எல் இருக்கு.என்ன ஒரு சங்கடம்னா பிஎஸ்என்எல் எப்ப கால் பண்ணாலும் இந்த தடத்தில் உள்ள அனைத்து எண்களும் பிசியாக இருக்கும்பான்.இல்லைன்னா சும்மா கவூந்தடிச்சி துரங்கிட்டு இருக்கற ஆளைக்கூட அந்தாள் பிசியாக இருக்கிறார்.அப்புறம் முயற்சி பண்ணும்பான்.
 எனக்கென்னவோ மொபைலை எல்லாம் வீசியெறிஞ்சிட்டு போஸ்டாபீஸ் போய் சாண்டியல்யனோ மங்கையர்மலரோ படிச்சிட்டிருக்கற கவூன்ட்டர்ல இருக்கற பொண்ணுகிட்ட தம்மாத்துரண்டு நீல நிற இன்லான்டு லெட்டர் வாங்கி இனி எல்லாருக்கும் லெட்டரே போடலாம்னு தோணுது.
 இனி பேச வேணாம்.லெட்டர் போட்டுக்குவோம்.
 யாரெல்லாம் வர்றிங்க இந்த ஆட்டத்துக்கு.
Previous
Next Post »