“அழகிய பெண்கள்” --விஜயநிலா


 கதைக்குள்ளே போகும்முன் ஒரு க்ளோஸ்அப் காட்சி:


   அவள் அந்த மங்கலான வெளிச்சமுள்ள அறைக்குள் வந்தாள்.வெள்ளை நிற குர்தா,பைஜாமா அணிந்திருந்தாள்.உள்ளே ஏதும் அணியவில்லை.முகத்தில் அப்பாவித்தனம்.உதடுகளில் மட்டும் அநியாய செக்ஸ் அப்பீல் இருந்தது.உடைகளை மெல்லக் கழற்றினாள்.சுவரோரம் மண்டியிட்டு உட்கார்ந்தாள்.கால்களைக் கட்டிக் கொண்டு மெல்ல முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள்.கூந்தல் ஒருபக்க மார்பை அருவி போல மறைத்துக் கொண்டது.அவள் கண்களில் என்னவோ ஒரு சேதி இருந்தது.
  அவளெதிரே இருந்த ஒரு கரம் துரிகையைப் பிடித்து கான்வாசில் அவளை முழுநிர்வாணமாக வரைஆரம்பித்தது.அந்த விரல்களின் வரைதலில் எட்வர்ட்மேனட் சாயல் லேசாக இருந்தது.
  அப்புறம் அவள் செத்துப் போனாள்.இன்னொரு நாளில்.இன்னொரு இடத்தில்.
                                                   _______         _______
  மார்ச்சுவரியில் அந்த முழுநிர்வாண உடலைப் பார்த்ததும் திகைத்துப் போனான் காவலாளி நடராஜன்.ஐஸ்பெட்டிக்குள் எப்படி இந்த பிணம் வந்தது.இதன் உடலில் எந்த சீட்டும் இல்லையே.யார் டாக்டர்.எப்போது வந்தது இது.ஆக்சிரன்ட்டா?கற்பழிப்பா?வேறெதுவமா?
 வெளியே ஓடிப்போய் டாக்டர் சிவனிடம் சொன்னான்.
என்ன நட்ராஜ் நமக்குத் தெரியாம ஹாஸ்பிடல்ல பிணமா,பாடி கண்டிஷன் எப்படியிருக்கு.வழக்கமா வேளச்சேரில இருந்து நெஃப்ரோஃபோபியாகாரன் ஒருத்தன் வருவானே.அவன்கிட்ட தள்ளி விட்டு காசு பார்த்துருவமா?”
டாக்டர்.இது நம்ம ஹாஸ்பிடல் பிணம் இல்லை.இளசா அழகான பொண்ணு.எவனோ கொலை பண்ணி இங்க கொண்டு வந்து ஒளிச்சி வைச்சிருக்கான்னு நினைக்கறேன்
வெளியில இருந்து வந்த பிணமா.நாம சிக்கல்ல மாட்டிக்க வேணாம்.போலீசை கூப்பிடுவம்என்றார் சிவன்.

 விசாரணைக்காக வந்திருந்த இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் அந்த உடலைப் பார்த்ததும் புரிந்து கொண்டார்.இது நிச்சயம் சாதாரணமாக ஒரு பெண்ணின் உடலல்ல.உடலின் அமைப்பே இது மாடலிங் செய்யூம் பெண் என்று காட்டுகிறது.உடலின் எந்த பாகத்திலும் கூடுதலாக ஒரு மி.கிராம் கூட சதை இல்லை.உடலில் வனப்பு வசீகரமாக இருக்கிறது.ஆனால் முகத்தில் மட்டும் ஏதோ ஒரு சோர்வூ.இவள் எப்படி இறந்திருப்பாள்.எந்த தடயமும் உடலில் இல்லையே.முதலில் அட்டாப்சி ரிப்போர்ட் வரட்டும் பார்த்துக் கொள்வோம்.இங்கே கொண்டு வந்து உடலை போடுவதற்கு என்ன காரணம்.இன்னும் இது போன்ற உடல்களை கொண்டு வந்து போடுவார்களா?
 வெளியே வந்தார்.
 குள்ளநரிப்பார்வையோடு டாக்டர் சிவனும்,காவலாளி நடராஜனும் பின்தொடர்ந்தார்கள்.
இன்ஸ்பெக்டர்.இது கொலையா.எதற்காக பிணம் இங்கே வந்தது
பிணம் வரலை.கொண்டு வந்து போட்டிருக்காங்க.உங்க கண்கள்ல இன்ஹிபிஷன்ஸ் தெரியூதே மிஸ்டர் சிவன்
அது வந்து..ஒண்ணுமில்லை.என் பார்வையே அப்படித்தான்என்று ஒதுங்கினார்.
 ஸ்டேஷனுக்கு வந்த ஜெயராஜூக்கு ஃபோன் வந்தது.
என்ன சொல்றிங்கம்மா.உங்க ஹாஸ்பிடல்ல பிணமா?இதோ வர்றேன்என்று கிளம்பியவர் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற தனியார் மருத்துவமனைக்குள் வந்தார்.அவர்களது ஸ்பெஷல் வார்டில் ஒரு பிணத்தை கிடத்தி விட்டு சென்றிருக்கிறார்கள் என்று சொன்னாள் சீஃப் டாக்டர் சுனிதாகபூர்.
என்ன சொல்றிங்க டாக்டர்.ஒரு பிணத்தை எப்படி பேஷன்ட்டா அட்மிட் பண்ண முடியூம்.அதையெல்லாம் ரிஜிஸ்ட்ரேஷன் போதே பார்க்க மாட்டாங்களா
உண்மையை சொல்லிர்றேன் இன்ஸ்பெக்டர்.எங்க ஹாஸ்பிடலோட நிலைமை சரியில்லை.காசு கொடுத்தா யாரை வேணும்னாலும் அட்மிட் பண்ணிக்க கூடிய நிலைமையிலதான் நாங்க இருக்கம்.ஆனா ஒரு உறுத்தல்
என்ன
நிர்வாணமா அட்மிட் செய்யப்பட்டு கிடந்த பொண்ணோட உடம்பில ஒரு துளி ரத்தம் கூட இல்லை.அவளோ கையில நரம்பை துண்டிச்சி ரத்தத்தை ஸக் பண்ணி எடுத்திருக்காங்க
வ்வாட்என்று அதிர்ந்த ஜெயராஜ் முந்தைய மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது-
ஆமா இன்ஸ்பெக்டர்.அந்த பிணத்தோட உடல்ல ரத்தமில்லை.முழுசா எல்லா ரத்தத்தையூம் எடுத்திருக்காங்க.நாங்கதான் பேஷன்ட் உடம்புல ரத்தத்தை தெரியாம எடுத்து விற்கிறௌம்னா எங்களை விட கில்லாடியா இருக்காங்க.சே.நான் உண்மையை உளறிட்டேனே என்றார் சிவன் பயத்துடன்.
 மறுபடி ஸ்டேஷனுக்குச் செல்லும் வழியிலேயே இன்னொரு சேதி.வயர்லெஸ்ஸில் உடனே வருமாறு அழைத்தார்கள்.ஒரு ஆன்மிக குருகுலத்தின் தியான மண்டபத்தில் ஒரு பெண்ணின் முழு நிர்வாண உடல் கிடத்தப்பட்டிருப்பதாக சுவாமிஜி சொல்லியிருப்பதாக.
 அந்த இடத்திற்கு போனபோது சிறிய கூட்டம் இருந்தது.பத்திரிகைக்காரர்கள்,சுவாமிஜியின் பிரதான சிஷ்யர்கள் என்று நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
வாங்க இன்ஸ்பெக்டர்.யார் கொண்டு வந்து போட்டாங்கன்னு தெரியலை.முழுநிர்வாண உடல்.ஆனா உடல்ல பொட்டு ரத்தம் கூட இல்லை
இருங்க.சில கேள்விகள் கேட்கனும்.இது தனியார் இடம்.இங்க ஒரு பெண்ணோட உடலை எப்படி கொண்டு வர முடியூம்
டொனேஷன் கொடுக்கறதா சொன்னா யாரா  இருந்தாலும் கேள்வி கேட்காம உள்ள விடுவம் சார்.அஃப்கோர்ஸ் இது எங்களோட பலவீனம்தான்.
உடல்ல ரத்தமில்லைன்னு எப்படி தெரியூம் உங்களுக்கு.நீங்க என்ன மருத்துவம் தெரிஞ்சவரா
யோகா தெரியூம்.முகத்தைப் பார்த்தே நோய்நொடி என்னன்னு சொல்லிருவேன்
சொல்லிட்டு டொனேஷன் கேட்பிங்க.சரிதானா சுவாமிஜிஎன்றார் ஜெயராஜ்.தலை குனிந்தார் சுவாமிஜி.
 வெளியே வந்தார்.
 மனதில் கணக்குகள் போட்டுக்கொண்டே வந்தார்.
 பெண்ணின் பிணங்கள்.
 இளம் பெண்ணின் உடல்கள்.
 மாடலிங் செய்பவர் போன்ற உடல்கள்.
 உடலில் முழுதாக இரத்தம் எடுக்கப்பட்டுள்ளது.ஏதாவது மாந்திரிகக் கூட்டமா?ரேகை,புதையல்,சிவனடியார்...சே.நான் ஏன் அபத்த டிவி சீரியல் போல யோசிக்கிறேன்.
 இதை லாட்ரலாக யோசிக்க வேண்டும்.கொலைகாரன் எதையோ மறைமுகமாக உணர்த்த விரும்புகிறான்.அல்லது மறைமுகமாக ஏதோ தடயத்தை விட்டு விட்டுச் சென்றிருக்கிறான்.
 யாரவன்?
 வீட்டிற்கு வந்தார்.
 மதிய உணவருந்தும் வேளையில் சாப்பாட்டில் மனம் பதியவில்லை.ஜமுனா அவர் தலையில் தட்டினாள்.
சாப்பிடுங்க.இப்பவூம் கேஸ் பத்தி யோசனையா
ஆமா.ஒரு புதிர் போல இருக்கு. மாடலிங் அழகிகள்.கொலை பண்ணி வெவ்வேறு இடத்துல நிர்வாணமாக போட்டிருக்கான்.உடல்ல சொட்டு ரத்தம் இல்லை.
அது சரி அந்த பொண்ணுங்களை காணம்னு யாரும்தேடினாங்களா.அந்த பொண்ணுங்கள்ளாம் யாரு.எந்த ஊரு
இது நல்ல கேள்வி.இது வரைக்கும் யாரும் புகார் கொடுக்கலை.ஸோ இந்த பொண்ணுங்க எல்லாம் தப்பான பொண்ணுங்களா இருக்கலாம்.இருந்தாலும் அந்த தப்பான பொண்ணுங்களுக்கும் தங்கறதுக்கு ஒரு இடம் அபார்ட்மன்ட்,ஹாஸ்டல்னு இருந்திருக்கும்.தேடனும்.யார் யார் காணாமப் போனாங்கன்னு தேடனும்
சரி தேடலாம்.இப்ப சாப்பிடுங்க முதல்லஎன்றபடி உள்ளே போன ஜமுனா எதேச்சையாக நெற்றியை தொட்டுப் பார்த்து விட்டு ஸ்டிக்கர் பொட்டு எங்கோ விழுந்திருக்கிறது என்று ஓடிப்போய் நிலைக்கண்ணாடியில் ஒட்டி வைத்திருந்த சிவப்புப் பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டிக் கொண்டபோது முகத்தை சுழித்தார் ஜெயராஜ்.
எத்தனை தரம் சொல்லியிருக்கேன்.கண்ணாடியில பொட்டை ஒட்டாத
சரிஎன்றவள் அருகே சுவற்றில் இருந்த குடம் சுமந்த ராஜஸ்தானி பெண்ணின் நெற்றியில் அந்த பொட்டை ஒட்டினாள்.அதைக் கண்டதும் அருகே வந்தார்.
என்ன.என்ன பண்ணப் போறிங்க.வேண்டாங்க.இப்ப வேண்டாம்
அடச்சே நகர்ந்துக்க.படத்துல ஏன் பொட்டை ஒட்டனும்.படத்துல பொட்டை ஒட்டினா நல்லா நேச்சுரலா இருக்கே.படத்துல ஒட்டினா நேச்சுரலா இருக்கே.அட..அப்படி போவூதா கதை..என்று பின்னுக்கு நகர்ந்தவர் யூனிஃபார்மை மாட்டியபடி வெளியே வந்தார்.
 ஸ்டேஷனில் லாப்டாப்பை உற்றுப் பார்த்தவாறே வந்தவர் கூகுள் சர்ச் இன்ஜினில் மாடலிங்,இரத்தம்,ஓவியம்,ஓவியர்கள்,ஓவியக்கண்காட்சி என்று தேடிக் கொண்டே இருந்ததில் ஒரு மாடலின் முகம் சுவாமிஜியின் ஆசிரமத்தில் செத்துக் கிடந்தவளின் முகம் போலவே இருந்தது.அதை துரத்திக் கொண்டே மவூசை செலுத்தியதில் அவளைப் பற்றிய விபரம் கிடைத்தது.
 அவள் கடைசியாக உபேந்திராவூக்கு மாடலிங் செய்துள்ளாள்.
 உபேந்திர மிகப்பெரும் ஓவியன்.நிர்வாண ஓவியம் வரைவதில் நிபுணன்.தனி ஆள்.அபார்ட்மன்ட்டில் தனியாக இருக்கிறான்.
 உபேந்திராவின் அபார்ட்மன்ட் கதவூ தட்டப்படுதவற்குள் திறந்தான்.
 அவள் உள்ளே வந்தாள்.
 வசீகரமாக இருந்தாள்.குர்தாவூம்,பைஜாமாவூம் அணிந்திருந்தாள்.உள்ளே ஏதும் அணியவில்லை.அவளை தலைசாய்த்துப் பார்த்தவன் சிரித்தான்.
யார் நீ
மாடலிங் பண்றேன்.உங்க முகவரி சாட்ல கிடைச்சது.என்னை வரைய தயாராஎன்று சரசரவென்று உடைகளைக் களைந்து முழுநிர்வாணமானாள்.
சுவரோரம் உட்கார்என்றவன் துரிகையை எடுத்துக் கொண்டு போர்டுக்குப் போனான்.சட்டென்று எழுந்து துப்பாக்கியை உயர்த்தியபடி உடைகளை எடுத்துக் கொண்டாள்.
யார் நீ.என்றான் நடுக்கத்துடன்.
க்ரைம் பிராஞ்ச் ஆபீசர்.எதுக்காக மாடலிங் பண்ண வர்ற பொண்ணை கொலை செய்து இரத்தத்தை எடுத்தே.சொல்லுஎன்றதும் ஒப்புக் கொண்டான்.
சொல்றேன்.எங்க அப்பா ரொம்ப நல்லவா;.என் அம்மா அழகானவள்.தான் மாடலிங் செய்து பெரிய ஆளாகனும்னு எங்கப்பாவை உதாசீனப்படுத்தி மாடலிங்ல பெரிய ஆளானா.அப்பா மனசு நொந்து செத்துப் போனதை கண்ணெதிர்ல பார்த்தேன்.அப்ப முடிவூ பண்ணினேன்.இத்தனை நாள் உயிரோட இருந்த எங்கப்பா போனவாரம்தான் செத்துப் போனார்.அதிலிருந்து மாடலிங் செய்ய வர்ற தப்பான பொண்ணுங்களை இரத்தத்தை உறிஞ்சி அந்த இரத்தத்தை பெயின்ட்டாக படம் வரைய பயன்படுத்தினேன்.நீ கண்டுபிடிச்சிட்டேஎன்றான்.
கண்டுபிடிச்சது இன்ஸ்பெக்டர் ஜெயராஜ்.வா மச்சான் போவம்.வெளிய ஜீப் தயாரா நிக்குதுஎன்றதும் தலைகுனிந்தபடி நடக்க ஆரம்பித்தான்.

                                                       ---------------------
Previous
Next Post »