'அருகில்தான் அமர்ந்திருந்தோம்
ஆரம்பத்தில்
இடைவெளி இருநுரறு கிலோமீட்டர் இருந்திருக்கும்
கண்கள்
மெல்ல யோசித்தன
அப்புறம்
கண்சிமிட்டலில் மெல்ல
தொலைவில் பார்ப்பதாய் பாசாங்கு செய்தன
அவளின் மௌனமும்
எனது மௌனமும்
ரொம்பத் தெரிந்தது போல பேசிக்கொள்ள
ஆரம்பித்து விட்டன
கடைசியில்
இறங்க வேண்டிய இடம் வந்தே விட்டது
பை..பார்க்கலாம்..
என்றே கையசைக்கக்கூட மறந்து போய்
விடைபெற்றௌம்
செல்ஃபோன் எண்ணோ பேஸ்புக் ப்ரொஃபலோ
டிவிட்டர் ஐடியோ
ஏதும் வாங்கிக்கொள்ளாதது
தேவையில்லை
என்றன
அவள் போனபின்னும்
பேசிக்கொண்டிருந்த
இருவரது மௌனங்களும்'

'முன்னெப்போதோ
 முகம் திருப்பிக்கொண்டு
லேசாய் கோபித்துக் கொண்டும்
சென்றிருப்பாய் போலிருக்கிறது
அந்த தினத்திலிருந்து
பூக்கின்ற பூக்களின் முகத்தில் எல்லாம்
சின்னதாய்
ஒரு சுருக்கம் தென்படுகிறதே
அறிவாயா
சின்னதாய் ஒரு புன்னகையை
அனுப்பித்தான் வையேன்
அத்தனை பூக்களும்
உன் புன்னகை ஒத்தடத்திற்கான
ஏங்கிக்கொண்டிருக்கிறதாம்'
"சின்னதாய்
செல்லக் கோபங்கள் வரும்போதெல்லாம்
உன்
கண்கள் மௌனவிரதம் கொண்டு விடுகின்றன
ஆனால்
உன்
இதழ்கள் பார்க்க ஆரம்பித்து விடுகின்றன
பழிப்பு காட்டியபடி
பேசவா
பேசாதிருக்கவா'
'கோபித்திருக்கும்போதோ
இல்லை
சோகமாய் அமர்ந்திருக்கும்போதோ
அல்லது
ஏதும் பேசாதிருக்கும்போதோ
அருகே வந்து
இரு கைகளாலும்
கன்னங்களை பற்றிக்கொண்டே
கண்களுக்குள் பார்ப்பாயோ
அப்படியே
என்றௌ உறங்கிக்கிடந்த
கருப்பை ஞாபகத்தில் வரும்
உறைந்து போகிறேனா
இல்லை
கரைந்து போகிறேனா
என்றே தெரியாமலிருக்கும்போது
தோன்றுவது ஒன்றேதான்
கடவூளும்
அவ்வப்போது மாறுவேடத்தில் வருதுண்டோ
உன்னைப் போல'

'ஒன்றுமில்லை
உன் பெயரைத்தான் உச்சரித்தேன்
சுட்டெரித்துக் கொண்டிருந்த
வெய்யிலும் கோடையூம் விலகிப்போய்
மழையை இழுத்துக் கொண்டு
மேகங்கள் திரண்டு
வந்துவிட்டன
கூடவே
குளுகுளுவென்ற காற்றும்
கன்னத்தை வருடிச் செல்ல துவங்கி விட்டது
கோடைமழை என்று
யாரோ சொல்லிச் சொல்லி
மாய்ந்து போகிறார்கள்
இன்னொரு முறை
உச்சரிக்கவா உன் பெயரை
சில்லென்று
ஆலங்கட்டி மழை வந்து விழட்டுமே'


Previous
Next Post »