'எதை
சொல்ல விரும்புகிறேனோ
அதைச் சொல்லாமல் இருப்பதால்தான்
நானும்
எதை
சொல்லி விடப்போகிறாயோ
அதைச் சொல்லாமல் இருப்பதால்தான்
நீயூம்
சுவாரஸ்ய கண்ணாமூச்சி தினங்களால்
கட்டிப் போடப்பட்டிருக்கிறௌம்
புவியீர்ப்பு விசையை மீறிய
வேறொரு
ஈர்ப்பு விசையால்!"

'முதன்முதல்
எதிர்பாராமல் பார்த்துக் கொண்டோம்
சிலநாள்
எதிர்பாராமல்
அருகருகே இருந்தும்
பார்த்துக் கொள்ளவில்லை
இன்னொரு நாள்
பார்த்தும் பாராதது போல் செல்கிறாய்
பிறிதொரு நாள்
பார்த்துத் துளைத்து விடுகிறாய்
அப்புறம்
சிக்னலுக்கு எதிர்ப்புறமாய்
பச்சை விழுந்தபின்புதான்
பார்த்துக் கொள்ள முடிகிறது
இன்னொரு நாள்
நீ லிஃப்டிலும் நான் படிக்கட்டிலுமாக
இப்படியே
போய்க்கொண்டிருக்கிறதே
சற்று பொறு
காலுக்கு கீழே பார்
நீயூம் நானும்
ஏதாவது சதுரங்கப் பலகையில்
நின்று கொண்டிருக்கறௌமோ
நகர்த்திச் செல்வது யார்?
விதியா
அல்லது நீயேதானா"

"மரங்களை
அழித்த காகிதத்தில்
கவிதை எழுதுவது
குற்ற உணர்வாக இருந்ததால்
மடிக்கணினிக்கு தாவினால்
வெப்பமயமாக்கலை அதிகரிக்கும்
கணினியூம் பிடிக்கவில்லை
உன்னைப் போலவே
இனி
கண்களால் எழுதிக் கொள்வோமா
கவிதைகளை"

"புரிந்து கொள்ளாத தருணத்தில்
கோபங்களும்
பிரிந்து கொள்ளாத தருணத்தில்
தாபங்களும்
எதுவூமே
இப்போதெல்லாம் ஏற்படுவதில்லையே
போன ஜென்மத்தில்
போதிமரமாக இருந்திருப்பாயோ
நீ"

"அன்பென்ற சொல்லுக்கு
அகராதியில்
வார்த்தைகள் எதையூம் காணோமே
எடுத்துச் சென்று விட்டாயா
அல்லது
அந்த வார்த்தைகளே
நீதானா?"
Previous
Next Post »