பெங்களுரு நாட்கள்...



  இந்த வாரம் பெங்களுரு டேஸ் மற்றும் பெங்களுரு நாட்கள் ஆகிய இரண்டு படங்களையூம் பார்த்தேன்.பெங்களுரு டேஸ் படத்தின் ரீமேக் என்றுதானே சொன்னார்கள்.
 ஆனால் படம் ரீமேக் இல்லை.
 முழுக்க முழுக்க இது ஒரு வசன மொழிபெயர்ப்பு படம்.
 படத்தின் தலைப்பிலிருந்து கதாபாத்திரங்கள் பேசும் ஒவ்வொரு வசனத்தையூம் எழுத்து எழுத்தாக வார்த்தை வார்த்தையாக "மொழி பெயர்ப்பு" செய்து குவித்து விட்டார்கள்.
 பகத்ஃபாசில் நிவின்பாலி துல்கர்சல்மான் நஸ்ரியா ஆகியோர் படம் முடிந்த பின்னும் மனதில் அப்படியே பதிந்திருந்தார்கள்.தமிழ் ரீமேக்கில்(?) அது போல மனதில் பதியாமல் போனதற்கு இந்த "கட்டாய மொழிபெயர்ப்பு"தான் காரணமென எண்ணுகிறேன்.
 இதற்கு எதற்கு இத்தனை மெனக்கெட வேண்டும்.கூகுளிடம் கொடுத்தால் அது மொழிபெயர்த்து விடுமே.
 மலையாள பெ.நா.விலும் ஒரு முக்கியமான விஷயம் மிஸ்ஸாகியிருந்தது.
பெங்களுரு செல்வதுதான் கேரக்டரின் சின்னவயசிலிருந்தே இருந்து வரும் கனவூ என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லி விட்ட பிறகு பெங்களுருவை ஒரு கேரக்டராக படத்துடன் காட்டியிருக்கலாம்.மறந்து விட்டார்கள்.அல்லது கேரக்டர்களின் ஆளுமை படத்தை அவர்கள் பக்கம் இழுத்துச் சென்றிருக்கலாம்.
 படங்களை ரீமேக் செய்வதற்கு பதிலாக டப் செய்து வெளியிட்டிருக்கலாம்.குறிப்பாக நஸ்ரியா செய்த கேரக்டரின் பெயரை மட்டும் மாற்றி விட்டு.அது கூட வேண்டாம்.நல்ல படங்கள் என்றால் அதே மொழியில் பார்க்க மகாஜனங்கள் ரெடியாகத்தானே இருக்கிறார்கள்.அப்படித்தானே அந்தக்காலத்தில் சங்கராபரணம் எல்லாம் ஓடியது.
 அப்புறம் இன்னொரு விஷயம்.
 விகடன் நிறுவனத்திலிருந்து விகடன் ப்ளாக் என்ற ஒரு இணைய இதழை துவங்க இருக்கிறார்கள் என்றதும் சற்று சந்தேகம்.ஒழுங்காகச் செய்வார்களா? அல்லது நிலையக்கலைஞர்களை வைத்து ஒப்பேற்றி விடுவார்களா என்று.விகடன் ப்ளாக்கிற்கே எழுதி கேட்டிருந்தேன்.
 உடனே பதில் தந்திருந்தார்கள்.
 எழுதினால் போடுவீர்கள் என்பதற்கு உத்தரவாதமில்லாமல் எப்படி படைப்புகள் அனுப்புவது என்று கேட்டிருந்தேன்.உத்தரவாதமில்லைதான்.பட் உங்க நேர்மை பிடிச்சிருக்கு என்ற ரீதியில் முடிந்தவரை பரிசீலணை செய்து கொண்டிருக்கிறௌம் என்று பதில் போட்டிருந்தார்கள்.
 சரி.இரண்டு வாரம் இடைவெளி விட்டால் ஏதாவது ப்ளாஷ் ஆகும்.விகடனுக்கு எழுதலாமா வேண்டாமா என முடிவூ செய்யலாம் என்று இரண்டு வார இடைவெளி விட்டதில் தோன்றியது இதுதான்.
 'விகடனுக்கு எழுத வேண்டாம்'
 காரணம் இருக்கிறது.விகடனில் ஒரு பிஸ்கோத்து இருக்கிறார்.அவர் 1995ல் பூட்டைத் திறக்கிற பத்திரிகையில் உதவி ஆசிரியர்.ஆனால் அங்கே அவர்தான் ஆல்இன்ஆல் அ.ரா. முதலில் நல்லவிதமாகத்தான் எனது கதைகளை வாராவாரம் பிரசுரித்து வந்தார்.அப்புறம் எனக்கே உரிய ஆர்வக்கோளாறில் அந்த பத்திரிகையின் முன்னேற்றத்திற்கு என்னென்ன செய்யலாம் என்று தினம் ஒரு ஐடியா என்று கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தேன்.இதைப் பார்;த்ததும் தாழ்வூமனப்பான்மையின் சிகரமான அவருக்கு சந்தேகம் வந்து விட்டது.இவன் அந்தப் பத்திரிகையில் வேலைக்கு சேர அடி போடுகிறானோ.தன் நாற்காலியை பிடுங்கிக் கொள்ளப் போகிறானோ என்று.
 அதன்பின் என் கதைகளப் போடுவதை அவர் நிறுத்தி விட்டார்.
 அதே காலகட்டத்தில் (1987) மின்மினி என்றொரு பத்திரிகை சிறுகதைகளுக்காகவே வந்து கொண்டிருந்தது.அதிலும் வாராவாரம் க்ரைம் கதைகளாக எழுதிக் கிளப்புவேன்.திடீரென எனது கதைகள் அதில் வருவது நின்று போனது.
 பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் காரணம் புரிந்தது.
 இந்த மிஸ்டர் பிஸ்கோத்து அங்கே வேலையில் சேர்ந்திருக்கிறார்.எங்கே நானும் அங்கே வேலை கேட்டு வந்து விடுவேனோ என்று சந்தேகம் வர எனக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்.
 அதன்பிறகான கால கட்டத்தில் 1990 முதல் 1995வரை அவ்வப்போது எனது கதைகள் ஆனந்தவிகடனில் வருவதுண்டு.சரியாகச் சொல்வதானால் 1995லிருந்து இன்று வரை ஆனந்த விகடனில் என் படைப்புகள் வருவது நின்று போனது.என்ன ஏது என்று விசாரித்தால் இந்த பிஸ்கோத்து மனிதர் 1995 முதலாக ஆனந்த விகடனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
 இதற்கிடையே பத்திரிகைகளில் எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை.விஷூவல் மீடியாவூம் நெட் மீடியாவூம் பிரின்ட் மீடியாவை அடித்துப் போட்டு விட்டது என்பதால் எந்த பத்திரிகையிலும் எழுத எனக்கு ஆர்வமில்லாமல் போனது.
 இப்போது விகடன் ப்ளாக்கிற்கும் அந்த பிஸ்கோத்து மனிதரின் பெயரைக் குறிப்பிட்டே இந்த ஆசாமி 1995லிருந்து விகடனில் எனது படைப்புகளை இருட்டடிப்பு செய்து வருவதால் விகடன் ப்ளாக்கில் எழுதுவதையூம் பதிவேறாமல் தடுக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்.அதனால் விகடன் ப்ளாக்கிற்கு எழுதுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று விகடனுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டேன்.
 நாளது தேதி வரை விகடனிலிருந்து பதில் ஏதும் வராததால்-
 வாழ்க விகடன்.வாழ்க பிஸ்கோத்து!
Previous
Next Post »