தேர்தல் வைபோகமே...



 தினம் தினம் ஏதாவது கூட்டணி பற்றிய தகவல்களுடன்தான் வாட்ஸ்அப்பும் பேஸ்புக்கும் விடிந்து கொண்டிருக்கிறது.செய்தித்தாள்களை யாரும் பார்ப்பதில்லை.எங்கள் வீட்டில் கூட மூன்று செய்தித்தாள்கள் வாங்குகிறௌம்.ஏன் வாங்குகிறௌம் என்று தெரியாது.அநிச்சையான காரணத்தால் அவை கவனிப்பாரற்று டீபாயின் மேல் கிடக்கின்றன.டிவி சானல்களின் விவாத மேடைகளும் நேர்பட பேசுதலும் கூட கவனிப்பாரற்றுதான் கிடக்கின்றன.அதற்கு பதிலாக கைரளி போன்ற சானல்களில் படம் பார்க்க ஆரம்பித்து விடலாம்.நல்லபடங்களையூம் மொக்க படங்களையூம் போடுவார்கள். அ இருந்தால் நல்ல படம் கிடைக்கும்.
 சொல்ல வந்த விஷயம் வேறு.
 தேர்தல் கூட்டணி.
 ஆள் ஆளுக்கு எப்படி எப்படியோ கூட்டணி சேர்ந்து விடுகிறார்கள்.நேற்று வரை அந்த முகாமில் போய் சீட்டுக்காக உட்கார்ந்திருந்தவர் இன்று அதற்கு நேர் எதிர் முகாமிற்கு வந்து கைகளை உயர்த்தி கூட்டணி போஸ் கொடுக்கிறார்கள்.நாம் மட்டும்தான் விரோதித்துக் கொண்ட சொந்தக்காரர்களிடமும் பகைமை வளர்த்துக் கொண்ட நண்பர்களிடமும் இன்னமும் அதே ரோபோத்தமான ரோஷத்துடன் திரிந்து கொண்டிருக்கிறௌம்.தேர்தல் கூட்டணி சந்தர்ப்பவாதமாகவே இருந்தாலும் இதில் நமக்கு ஒரு பாடம் இருக்கிறது.ஆயிரத்து ஐநுரறு கோடி கிடைக்கிறதோ இல்லையோ கை விட்டுப் போன நட்புகளை திரும்ப அழைத்துக் கொள்ள யோசிக்கலாம்.
 லேட்டஸ்டாக ஐஜேகேயூம் பாஜக வூம் கூட்டணித்துக் கொண்டிருக்கின்றன.தேர்தல் பரப்புரைகளையூம் பிராண்டிங் பிரமோ இவற்றில் எல்லாம் பிரான்டிங் நிறுவனத்தை வைத்து இப்படித்தான் செய்ய வேண்டுமென்று ஸ்கெட்ச் போட்டிருக்கும் அரசியல் கட்சிகள் தேர்தலை மென்பொருளை பயன்படுத்தி ஏதாவது ப்ரீ ப்ளானிங் செய்திருக்குமா என்று தெரியவில்லை.
 கூட்டணிக்கு முனையூம் முன்பு அதனை செய்திருக்க வேண்டும்.ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எல்லா கட்சிகளும் வாங்கி வைத்திருக்கும் வோட்டு சதவீதம் தெரியூம்.அதனை எடுத்து சலித்துப் போட்டு இன்னின்ன கட்சிகள் தங்களிடம் வந்தால் என்ன வோட்டு சதவீதம் வரும்.ஒவ்வொரு நாளும் அந்த கட்சிக்கு எதிரணியினரின் பலம் அதிகரிப்பதை அல்லது பலமிழப்பதை ஆர்ட்டிபிஷல் இன்ட்லிஜன்ஸை பயன்படுத்தி ஒரு ப்ரோட்டோ டைப் உருவாக்கி வரப்போகும் தேர்தல் முடிவை முன்கூட்டியே விர்ச்சுவலாக கற்பனையில் உருவாக்கிப் பார்த்து அது தங்களுக்கு பாதகமாக இருந்தால் அதனை எதிர்கொள்வது எப்படி அதற்கு முன் ஏற்பாடாக வேறு என்ன ஸ்ட்ராட்டஜிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மாணிக்கலாம்.
 அமெரிக்காவில் இதனை பயன்படுத்துகிறார்கள்.இதனை மெஷின் லேர்னிங் என்று அழைப்பார்கள்.ஒவ்வொரு வேட்பாளரின் பலம் பலவீனம் அவரது புகழின் கிராஃப் ஏறுவது இறங்குவது எல்லாவற்றையூம்அடிப்படையிலும் சோஷியல் மீடியாவில் கிடைக்கிற தகவல்களின் அடிப்படையிலும் கம்ப்யூட்டர் அலசுகிறது.என்ன செய்ய வேண்டும் என்று தீர்மாணிக்கிறது.எலக்ஷன் ஸ்ட்ராட்டஜிகள் இதன் அடிப்படையில் அங்கே உருவாகின்றன.
 ஆனால் என்ன ஆகும் என்றால் இதற்கும் பெரிய பிரான்டிங் கம்பெனிகளையூம் மொன்னை ஆட்கள் டாப் லெவலில் உட்கார்ந்திருக்கும் ஐடி கம்பெனிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு கோடிகளைக் கொட்டிக் கொடுத்து ஆர்டர் கொடுப்பார்கள்.
 அவர்கள் மகா மொக்கiயாக சில ஸ்ட்ராட்டஜிகளைப் போட்டுக் கொடுக்க கடைசி நேரத்தில் ஏதாவது அரசியல் கட்சிக் கூட்டணி லாட்டராலாக யோசித்து எதையாவது செய்து வைக்க எல்லாம் திசை மாறிப்போய் ரிசல்ட்டும் ஆச்சர்யமாக தலைப்புச் செய்திகளை கிடுகிடுக்க வைக்கப் போகிறது.
 எல்லாம் தேர்தல் வைபோகம்.
Previous
Next Post »