சற்று 'நேரம்' கிடைத்தபோது....



 இந்த வாரம் அரிதாக சிறிது நேரம் கிடைத்தபோது தோழா துரங்காவனம் மாதிரியான க்ளிஷே படங்களைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன்.இடையில் 
க.கா.போ மட்டும் விரும்பிப் பார்த்தேன்.நலன் குமாரசாமியின் குறும்படங்கள் பற்றி பிறகு எழுதுகிறௌம்.
 தமிழ்ப்படங்கள் பார்ப்பதற்கு பயமாக இருந்ததால் மலையாளப்படங்கள் பார்க்கலாம் என்று முடிவூ செய்தேன்.முன்னரே செய்து கொண்ட தீர்மானம் மோகன்லால் மம்முட்டி படங்களை தவிர்த்து விட வேண்டும்.
 பெங்களுர் டேஸ் (இரண்டாம் தடவை) மற்றும் பிரேமம் இரண்டு படங்களையூம் சற்று நிதானமாக அடிக்கடி ரீவைன்ட் செய்து பார்க்க ஆரம்பித்தேன்.
 பார்த்ததில் அங்குள்ள நடிகர்களின் நடிப்பில் ஒரு ஃப்ரெஷ்னஷூம் அப்பாவித்தனமும் பிளென்ட் ஆகியிருப்பது புரிந்தது.அதை விட பின்னணியில் தெரியூம் பச்சைப் பசேல் எப்போதுமே மலையாளப்படங்களில் பிடிக்கும் என்பதால் அவ்வப்போது கைரளியை பார்ப்பதும் வழக்கம்.சூர்யா ஆக்க்ஷனை(இது சேனலின் பெயர்) பார்ப்பதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன்.காரணம் விடாப்பிடியாக மம்தாமோகன்தாஸ் சுரேஷ்கோபியை  பழிவாங்கி வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.
 பெங்களுர் டேஸ் மற்றும் பிரேமம் இரண்டு படங்களிலும் அவர்களது திரைக்கதையில் ஒரு நேர்மையை கடைபிடிக்கிறார்கள்.படத்தின் கடைசி நேரத்து டிவிஸ்ட்டுக்கான காரணத்தை படத்தின் துவக்கத்திலேயே அல்லது நடுவில் நேர்மையாக கோடிட்டுக் காண்பித்து விடுகிறார்கள்.தமிழ்ப்படம் மாதிரி கடைசி நேரத்தில் புதிய கேரக்டரை திணிப்பதில்லை.
 அம்னீஷியா போன்ற கேடலிஸ்ட்டை பிரேமத்தில் பயன்படுத்தியிருந்தாலும் அதில் செயற்கைத்தனம் இல்லை.சோகப்பாட்டைக் கூட சந்தோஷமாகப் பாடுகிறார்கள்.
 தமிழ்ப்படங்கள்தான் 'காலம் கெட்டுப் போயி..கோலம் கெட்டுப்போயி...' கிடக்கின்றன.
Previous
Next Post »