கடிகார முட்களுக்குள்ளே

'சிலநேரம்
அடித்துத் துவைத்து
அதுபாட்டுக்குச் சென்று விடுகிறது
சிலநேரம்
அனாமத்தாக ஏனென்று தெரியாமல்
வெற்றுவெளியாகச் சென்று விடுகிறது
சிலநேரம்
மனதைக் கவ்விக்கொண்டு
மறுபக்கம் சென்று விடுகிறது
சிலநேரம்
பொழுதுகள் யாவூம்
கனவின் நிழலுருவம் போல் என்றே
சொல்லிச் சென்று விடுகிறது
நேரத்தை
கடிகாரத்திற்குள் அடைத்து வைத்ததாய்
நினைத்துக் கொண்டிருக்கிறௌம்
கடிகார முட்களுக்குள்ளே
அடைபட்டுக்கிடக்கும்
நாம்"

"சுட்டும் வெய்யில்
வெற்றுக் காற்று
இளைப்பாற எங்கேனும்
மரம் கிடைக்குமா என்று தேடவில்லை
இளைப்பாற எங்கேனும்
மனம் கிடைக்குமா?'

"புதியதாய்
பேனா கிடைத்தால்
தாளில் எதையோ கிறுக்கிப் பார்ப்போமே
அதைப்போல்
கிறுக்கியிருப்பானோ
தலையெழுத்தை?"

"ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையூம்
கேலியாகச் சிரிக்க ஆரம்பித்து விடுகிறது
வெள்ளித்திரையூம்
காலியாகக் கிடக்கும் நாற்காலிகளும்
திரையரங்குகளில்'

"ஒவ்வொரு
புத்தக வெளியீட்டு விழாவின்போதும்
கண்ணீரை சிரமப்பட்டு
மறைத்துக் கொள்கின்றன
குடோனில் அடைந்து கிடக்கும்
விற்காத புத்தகங்கள்'

"தலைவர்
அன்லக்கி நம்பரை வைச்சு
வாழ்க்கையை பிரிச்சுக்கோன்னு
சொன்னதாலதான்
இத்தனை சிக்கலா இருக்கோ
எட்டு எட்டா பிரிச்சுக்கோ'
Previous
Next Post »