இப்படி நடப்பது ஏனென்று தெரியவில்லை...



 மிராக்கிள் என்று சொல்லப்படும் மீ-தற்செயல்களில் எனக்கு நம்பிக்கை அதிகம்.நம்பிக்கை அதிகம் என்று சொல்லப்படுவதற்கு அது போன்ற நிகழ்வூகளின்பின்னால் நல்லவிதமான அனுபவங்கள் ஏற்பட்டிருப்பதால் மிராக்கிள்களை நான் விரும்பத் தொடங்கி விட்டேன்.ஒருவேளை கெட்ட அனுபவங்கள் ஏமாற்றங்கள் துயரங்கள் ஏற்பட்டிருக்குமானால் நான் மிராக்கிள்களை நம்ப மறுத்திருப்பேன்.
 சாய்பாபா தொடர்பான மிராக்கிள் அனுபவங்கள் எனக்கு நிறைய ஏற்பட்டிருக்கின்றன.அவற்றை பின்னர் சொல்கிறேன்.இன்று ஏற்பட்ட ஒரு மீ-தற்செயல் அனுபவத்தைப் பற்றி சொல்வதற்குத்தான் இந்த பதிவூ.
 யாரும் இது ஒரு உடான்ஸ் என்று நினைக்க வேண்டாம்.பொதுவாக பொய் சொல்லி அந்த பொய்யை மேலாண்மை செய்வதை விட உண்மையை சொல்லிவிடுவது மேல் என்ற அப்பாவி சனங்களில் நானும் ஒருவன்.ஆக இன்றைய அனுபவம் என்று நான் எழுதுவதும்  அக்மார்க் உ!
 நேற்று முன்தினம் இரவிலிருந்து நேற்று மதியம் வரை மின்சாரம் இல்லை.யூபிஎஸ் பேட்டரி தன் மிச்ச சொச்ச மின்சாரத்தையெல்லாம் திரட்டி வழங்கி விட்டு கேஸூவல் லீவ் எடுத்துக் கொண்டது.மதியத்திற்கு மேல்தான் நேற்று மின்சாரம் வந்ததால் களைப்பு.தேங்கிப் போய் விட்ட மீடியா வேலைகளும் அலுவலக வேலைகளும் இன்று மதியம் வரை தொடர்ந்தன.
 மதியத்தில் பொதுவாக கோழித்துரக்கத்தை அரைமணிநேரத்திற்கு மேல் தொடர்வதில்லை.அப்படி தொடர்ந்தால் முகம் கெட்டு விடும் என்பதால்.
 இன்று மதியம் படுத்ததுதான் தெரியூம்.வெளியில் மழை சக்கை போடு போட்டது கூட தெரியாமல் துரங்கிக் கொண்டிருந்தபோது -
 கனவூ.
 கனவில் ஒரு அறை.அங்கே ஏதோ படம் மாட்டப்பட்டிருக்கிறது.அருகே புத்தகப் பதிப்பாளர் காந்திகண்ணதாசன் இருக்கிறார்.நான் அந்த இடத்திற்கு வருவதற்கு முன்பே அவர் அங்கே நிற்கிறார்.
 கனவிலேயே ஆச்சர்யப்படுகிறேன்.
 இவரா! இவர் எப்படி இங்கே? அதுவூம் இத்தனை வருடங்கள் கழித்து.இதுவரைக்கும் அவரை நான் நேரில் பார்த்ததில்லை.நான் நேரில் பார்க்க ஆசைப்பட்ட மனிதர்கள் எம்ஜிஆர் கே.பாலச்சந்தர் ராஜேஷ்கன்னா நாகேஷ் சுஜாதா(எழுத்தாளர்) கண்ணதாசன்.
 கண்ணதாசன் நின்றிருந்தார்.
 நான் அவரிடம் தட்டுத்தடுமாறி சொல்கிறேன்.
"உங்களை பார்க்கனும்னு 1981க்கு முன்னாலயே ஸ்கூல்ல படிக்கறபோதே ஆசைப்பட்டிருக்கேன்.ஆனா நீங்க 81லயே செத்துப்போயிட்டிங்களே.நீங்க எப்படி இப்ப மறுபடி...அதுவூம் இங்க...என் முன்னால"
 சின்னப்பிள்ளை போல வெள்ளையாகச் சிரிக்கிறார் கண்ணதாசன்.
"சினிமாப்படம் எடுக்கறியாமே.உன்னை பார்க்க வந்தேன்.வாழ்த்தனும்"என்கிறார்.
"என்னையா..என்னையா.."
"ஆமா...நம்ம மாதிரி சினிமா ஆளுங்களுக்கெல்லாம் சுக்கிரன் ஆதிக்கம் இருக்கனும்.உன்னன்ட சுக்கிரன் ஆதிக்கம் அதிகம் இருக்கு.நீ பெரிய ஆளா வருவே.நான் இப்ப சொல்றதை நீயே நம்ப மாட்டே.பெரிய ஆளா சினிமால நீ வருவே.வந்ததும் இந்த கனவை ஞாபகப்படுத்தி மறுபடியூம் நீ எழுதுவே பாரு"என்று அவர் சொல்லும்போதே சாஷ்டாங்கமாக அவர் கால்களில் விழுகிறேன்.
 என்னை தோள்களைப்பற்றி எழுப்பி அணைத்துக் கொள்கிறார்.வாஞ்சையூடன் என் முகத்தை தடவிக் கொடுத்து ஆசி வழங்குகிறார்.
 இது கனவூ என்று காணும்போதே எனக்கு தெரிகிறது.ஆனால் இந்த கனவூ முடிந்து விடக்கூடாதே என்று மிக விருப்பமாக கண்களை திறக்காமல் அப்படியே இருக்கிறேன்.
 அப்புறம் விழித்துக் கொண்டு விட்டாலும்-
 என்னைப் பொறுத்தவரை இது சுகமான கனவூ.
 கவியரசரின் வாக்கு எப்போதுமே பலிக்கும் என்பார்கள்.
 பலிக்கட்டும்!
 நன்றி அவருக்கு!
Previous
Next Post »

1 comments:

Click here for comments
July 1, 2016 at 3:11 PM ×

'அவன் கிதாரைக் கையில் எடுத்தால் அரங்கம் ஆர்மீனியப் பிரதேசமாகக் கமழும்' என்று எழுதியிருக்கிறீர்கள்.. 'ஆர்மீனியப் பிரதேசமாகக் கமழ்வது' என்றால் என்ன?

Congrats bro சரவணன் you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar