ஷார்ட்ஃபிலிம்: ஜேடி...

ஷார்ட்ஃபிலிம்: ஜேடி...
                 -விஜயநிலா
 காட்சி:1
(இரவூ.பெட்ரூம்.திலீப் மற்றும் அவன் மனைவி மஞ்சு இரண்டு பேர் மட்டும்.மங்கலான விளக்கு ஒளியில் மொபைலை பார்த்துக் கொண்டே)
திலீப்:(தனக்குள்ளாக) எத்தினி வருஷம் இருக்கும் இவ எனக்கு மனைவியாக வந்து..ஏழு வருஷம்.இத்தினி வருஷத்தில் பழைய மொபைல் ஆப் போல இவள் அலுத்துப் போய் விட்டாள்.இவளை என்ன மாத்திக்கவா முடியூம்..

மஞ்சு:என்னைப் பத்திதானே நினைச்சிங்க.நான் அலுத்துட்டேனா..
திலீப்:ச்சே..இப்ப கூட ஃபர்ஸ்ட்நைட்டை ரின்யூவ் பண்ணிரலாம்.பட்...ஏழு வருஷம் ரொம்ப லாங் பீரியட் இல்லே மஞ்சு...
மஞ்சு:தெரியலைங்க.எனக்கு சரியா சொல்லத் தெர்லே.பட் அந்த காலத்து தமிழ்ப்படங்கள்ல வர்ற மாதிரி கல்லானாலும் கணவன் கேட்டகரி நான்.துரங்கலாமா?
திலீப்:துரங்கு.வித் ப்ளஷர்..குட்நைட்...(மஞ்சு அருகில் படுத்து ஒருக்களித்துப் படுத்துக் கொள்ள திலீப் காமராவைப் பார்த்து சொல்கிறான்)
    உங்களுக்கும் நியூஸ் தெரியாதுல்ல? இன்னிக்கி நைட் எட்டரை மணிக்குத்தான் ஜேடி சொன்னாப்புல...புழக்கத்துல இருக்கற அத்தனை மனைவிங்களும் இனி 'செல்லாதாம்" ஜனங்கள்ல கல்யாணமான அத்தனை கணவன்மார்களும் நாளையில இருந்து 'செல்லாத மனைவிங்களை' கொண்டு அழைச்சுட்டு வந்து ஹ்யூமன்பாங்க்ல விட்டுட்டம்னா அதை வாங்கி உள்ள டிமாலிஷன் லாக்கர்ல போட்டுட்டு புதுh பொண்டாட்டியை அதாவது புதுசா ஒரு பொம்பளையை தருவாங்களாம்.ஜேடி ஏற்பாடு.வாழ்க ஜேடி..நாளைக்கு முத காரியமாக மஞ்சுவைக் கொண்டு போய் பாங்க்ல கடாசிட்டு புதுரசா எனக்கொரு பொண்டாட்டி வாங்கிட்டு வரனும்.
 வெல் அந்த புதுப்பொண்டாட்டிக்கு என்ன பேர் வைக்கலாம்?
 காவ்யா?
 எங்கே சொல்லிப் பாருங்க.
 இனி திலீப்-மஞ்சு கிடையாது.அதுக்கு பதிலா திலீப்-காவ்யா.
 சூப்பரா இருக்கில்ல?
காட்சி -2
(அதே வீடு.மறுநாள் காலை.வெகுஜாக்கிரதையாக செய்தியை மஞ்சு அறிந்து விடாமல் இருக்க டிவியை அணைத்து வைத்திருக்கிறான் திலீப்.மொபைலில் நெட் தொடர்பை டிஸ்கனக்ட் செய்து விட்டு)

மஞ்சு:என்னங்க.வாங்க போலாம் (கிளம்பி ரெடியாக வந்திருக்கிறாள்)
திலீப்:(தனக்குள்)பாவம் வெட்டப்படப்போற ஆட்டுக்கு என்ன உற்சாகம் பார்ரா..
மஞ்சு:என்ன நேத்திக்கு எட்டரை மணியில இருந்தே நீங்க சரியில்லை.உங்களுக்கு நீங்களே பேசிக்கறிங்க..என்னாச்சு.ஆபீஸ்ல ரிவ்யூ மீட்டிங்ல ஏதாவது திட்டு விழுந்ததா
திலீப்:இல்ல.திட்டு விழுந்தாதான் என்ன.ஒத்தடம் கொடுக்க நீ இருக்கியே.வா போவம்.உனக்குப் பிடிச்ச ப்ளு கலர் ஸாரியை நீ கட்டிட்டிருந்திருக்கலாம்.போறச்ச உனக்குப் பிடிச்ச ஸ்வீட் ஏதாவது வாங்கித்தரவா?
மஞ்சு:என்ன திடீர் அக்கறை.ஏதாவது திருட்டுத்தனம் பண்ணப் போறிங்களா
திலீப்:ச்சே.ஒரு பிராயச்சித்தம்னு வைச்சிக்கயேன்.பாங்க் வரைக்கும் போகனும்.வா..அங்க வந்ததும் உனக்கே தெரியூம்.

காட்சி-3
(காட்சி 2க்கு பிறகான காட்சி எதுவூமில்லாமல் அவர்கள் திரும்பி வரும் ஒரு காட்சி மட்டும் இங்கே இருக்கிறது.அவர்கள் என்றால் அவர்கள்தான்.முதலில் மஞ்சுவின் முகத்தைப் பாருங்கள்)

மஞ்சு:என்ன அந்தாள் ஜேடி திடீர்னு நாட்டுல புழக்கத்துல இருக்கற அத்தினி பொண்டாட்டிங்களும் 'செல்லாதுன்னு" அறிவிச்சிட்டான்.நான் அந்த நியூஸை பார்க்கலைதான்.அதுக்குப் பிறகு நடந்ததை திலீப்பும் பார்க்கலை.நான் டிவியை பார்த்து நிலவரத்தை தெரிஞ்சுக்கக் கூடாதுன்னுட்டு டிவியை அணைச்சிட்டாரு.ஆனா பாருங்க.நைட்டோட நைட்டா நாட்டுல புரட்சி லெவலுக்குப் போகலைன்னாலும் ஜேடியை எதிர்ச்சு துணிச்சலா கும்தாபானர்ஜி ஆட்சியை கைப்பற்றினதும் மட்டுமில்லாம என்ன துணிச்சலா ஒரு அவர சட்டம் போட்டாங்க கும்தா...நாட்டுல புழக்கத்துல இருக்கற அத்தின கணவன்களும் இனி செல்லாதுன்னு.நாட்டுல இருக்கற அத்தினி மனைவிகளும்  தங்களோட பழைய கணவன்களை கொண்டு வந்து குடுத்துட்டு அவங்க விருப்பப்படி "புதுரக்கணவன்" வாங்கிட்டுப் போலாம்னு..
 இந்த அசடு திலீப் இது எதையூம் தெரியாம ஹ்யூமன் பாங்க்குக்கு என் கூட வந்து..
 இப்ப பாருங்க..என் பக்கத்துல யாருன்னு..அர்விந்த்சுவாமி...திலீப்பை குடுத்துட்டு நான் வாங்கிட்டு வந்த என்னோட புதுக்கணவன்.
 வாழ்க கும்தா!
(முற்றும்)
Newest
Previous
Next Post »